Latest Updates
-
புதன் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு நிதி இழப்பு ஏற்பட வாய்ப்பிருக்கு.. உஷார்.. -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சத்தான மிளகு சீரக அடை ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க, வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
இதுல உங்க கட்டைவிரல் எந்த டைப்-ன்னு சொல்லுங்க.. உங்க உண்மையான குணத்தை சொல்றோம்.. -
வெயில் காலத்தில் வீட்டில் ஏசி சண்டையா? இந்த சின்ன மாற்றங்கள் உங்கள் குடும்ப அமைதியை காக்கும்! -
சூரியன் ரிஷப ராசியில் இருப்பதால் இந்த 3 ராசிக்காரர்களுக்கு செலவுகளும், தோல்விகளும் தேடிவரப் போகுதாம் -
1 கப் மீல்மேக்கர் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் செய்யுங்க.. வேற லெவல்-ல இருக்கும்.. -
டேட்டிங் ஆப் மூலம் டேட்டிங் செல்கிறீர்களா? இந்த கஃபேக்களில் நடக்கும் 'ஹனி டிராப்' மோசடியில் சிக்காமல் இருக்க இதை உடனே தெரிஞ்சுக்கோங்க! -
இந்த 4 ராசிக்காரங்க பேசுவதில் ரொம்ப பலவீனமானவர்களாம் - இவங்களுக்கு பிரச்சினையே இவங்க வாய்தான் -
முகம் பளிச்சுன்னு பிரகாசமா இருக்கணுமா? அப்ப வெறும் 2 பொருட்களை கொண்ட 'இந்த ஃபேஸ் பேக்' போடுங்க..
டேட்டிங்கின் போது இதெல்லா பேசினால் பெண்களுக்கு பிடிக்காது - தெரிஞ்சுக்கங்க ஆண்களே!!!
திருமணத்திற்கு முன்பு, பெண் பார்க்க போவது தான், காதலிக்கும் முன்பு டேட்டிங் செல்லுதல். இது பல தடவைகள், பல நபர்களுடன் கூட நடக்கலாம். நூறு தடவை பெண் பார்க்கும் போது, நூறு தடவை டேட்டிங் போவது மட்டும் தப்பா என்ன? (சத்தியமா இந்த கேள்விய நான் கேட்கல..,)
முதல் டேட்டிங்கில் ஆண்களிடம் பெண்கள் எதிர்பார்க்கும் விஷயங்கள் - ஜல-புல-ஜங்க்ஸ்!!!
டேட்டிங் என்பது மேற்கத்திய கலாச்சாரத்தில் இருந்து வந்த பழக்கம் என்றாலும், நமது ஆண்களுக்கு அவர்களது மரபணுவில் பதிந்த சில கூற்றுகளை மாற்ற இயலாது. கொஞ்சம் சகஜமாக பேசினாலே காதல் என்று காற்றில் பறப்பவர்கள், டேட்டிங் என்ற உடனேயே அஜால், குஜால் எண்ணங்களில் சிறகடிக்க ஆரம்பித்துவிடுவார்கள்.
ஆண்களிடம் பெண்கள் விரும்பும் தோரணைகள்!!
உண்மையில், சில டேட்டிங்கில் "அது"வும் இடம் பெறுவது சாதாரணம் ஆகிவிட்ட போதும், ஒரு சில விஷயங்களை பற்றி டேட்டிங் அன்று ஆண்கள் பேசுவதை பெண்கள் விரும்புவதில்லை, அது டேட்டிங்கின் சுவாரஸ்யத்தைக் குறைத்துவிடும் என்று எண்ணுகின்றனர். அவை, என்ன என்று இனிக் காண்போம்...

திருமணம்
டேட்டிங் என்பது காதலுக்கான (ஊர் சுற்றுவதற்கான) முதற்படி தானே தவிர, அது திருமணத்திற்கான அச்சாரம் இல்லை என்கின்றனர் பெண்கள். (அதுக்கு தனியா சில மாங்கா பசங்க கிடைப்பாங்க.... நம்ம பசங்க ஜீன்ஸ் போட்டாலும், குடும்ப ஜீன் இன்னும் மாறாமலேயே இருக்காங்க.) எடுத்த எடுப்பில் திருமணத்தை பற்றி பேசி, டேட்டிங்கிற்கு இழிவு ஏற்படுத்த வேண்டாம்!! (??!?!!!)

யூகங்கள்
ஆண்களுக்கு எப்போதுமே யூகிக்கும் திறன் அதிகம். ஆனால், அது பெரும்பாலும் தவறாக தான் இருக்கும் என்பது வேறு விஷயம். டேட்டிங் என்று வெளியில் சென்று விட்டு, இவர்களுக்கு மட்டும் பீர் சொல்லுவார்கள், பெண்களுக்கு பழரசங்கள் ஆர்டர் செய்ய முனைவார்கள். டேட்டிங் வரை வளர்ந்த பெண்மணிக்கு பீர் எல்லாம் ஒரு மேட்டரே இல்ல பாஸ்!!! எனவே, எந்த விஷயத்திலும் அவர்களிடம் பேசியே முடிவெடுங்கள். (இன்னும் சின்னப்புள்ளத்தனமாவே இருக்குறது!!!)

தொட்டு, தொட்டுப் பார்ப்பது
காரணமே இன்றி, வெறுமனே உரசுவது, தொட்டு தொட்டுப் பேசுவது, கட்டி அணைப்பது, முத்தங்களுக்கு ஆசைப்படுவது போன்றவை நீங்கள் ஒரு சில்வண்டு என்பதை வெளிகாட்டி விடும். எனவே, முதிர்ச்சியாக நடந்துக் கொள்ளுங்கள். (ஆர்டர் பண்ணிட்டு சாப்பாடு வரதுக்குள்ள, ஏன் வெறும் இலைய சொரண்டீட்டே இருக்கீங்க. இலை கிழிஞ்சிட்டா, அப்பறம் சாப்பாடும் சாப்பிட முடியாம போயிடும்!!!) எனவே, பொறுமை முக்கியம்.

இடத்தை நிரப்புவது
எவ்வளவு இடம் இருந்தாலும் நம்ம பசங்க கவர்மென்ட் பஸ்ஸில் போகிற மாதிரி நெருங்கி தான் இருப்பார்கள். டேட்டிங் என்பதே உங்கள் இருவருக்கு மத்தியில் என்றான பிறகு. பின், எதற்கு நெருக்கிக் கொல்லப் பார்க்கிறீர்கள். பெண்கள் மென்மையானவர்கள் என்பதையும் தாண்டி, தங்களை மென்மையாக கையாளும் ஆண்களை தான் பெண்களுக்கு பிடிக்குமாம். (இஸ், இட்!!)

ஆண் நண்பர்கள் குறித்து பேசுவது
டேட்டிங் என்பதே நாளைய இணைப்பிற்கான இன்றைய அப்ளிகேஷன், அதற்கு ஏன் முந்தைய அனுபவம் பற்றி எல்லாம் கேட்க வேண்டும்! (ஷோ ரூம்க்கு போயி வண்டி வாங்கினாலும், அவங்க டெஸ்ட் டிரைவ் பண்ணிதான் வச்சிருப்பாங்க!!!)

சம்பளம் பற்றி பேசுதல்
டேட்டிங் போன இடத்தில், மிக முக்கியமாக பேசக் கூடாத விஷயம் சம்பளம் பற்றி பேசுவது. இது, நீங்கள் பணத்திற்காக தான் பழக முனைகிறீர்கள் என்ற எண்ணம் தோன்ற கருவாகிவிடும்.

அஜால் குஜால் பேச்சுகள்
உடை மட்டுமின்றி, பேச்சு, நடவடிக்கைகள் என அனைத்தும் டீசன்ட்டாக இருக்க வேண்டும். ஆசையை உசுப்பேற்றுகிறேன் என்று அஜால் குஜால் வார்த்தைகள் பேசி வசமாக சிக்கிக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications