காதலை மிஞ்சும் நிச்சயித்த திருமணங்கள், ஓர் நெகிழ்ச்சியான தருணம்!!!

Posted By:
Subscribe to Boldsky

ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் மிக முக்கியமான தருணம் என்பது திருமணம். 20 வருடங்களாக நீங்கள் கற்றது, பெற்றது எல்லாம் வைத்து நீங்கள் துவங்க போகும் ஓர் புதியதோர் பயணம். உங்களது வெற்றியை கொண்டாட, தோல்வியை சமாளிக்க என ஒவ்வொரு நொடியையும் பகிர்ந்துக் கொள்ள உங்களோடு புதிய உயிர் ஒன்று இணைந்திருக்கும்.

மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பசங்க நல்ல புருஷனா இருக்காங்களாம்!!! அப்போ நீங்க??

இந்த 21 ஆம் நூற்றாண்டு, முன்னோர்கள் எழுதி வைத்த கலியுகத்தையும் தாண்டி கணினி யுகத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறது. இதில் ஏராளமான நன்மைகளும், தீமைகளும் இலவசமாய் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கிறது. இணையதளத்தின் உதவியோடு இணையும் இதயத்தள காதல் இங்கு அதிகம். சிலர் மெய்யாக விரும்புகின்றனர், சிலர் "மெய்"க்காக மட்டும் விரும்புகின்றனர்.

தங்களுக்கு மிகவும் பிடித்த ஆண்களிடம் பெண்கள் எதிர்பார்க்கும் 11 விஷயங்கள்!!!

காதலை மிஞ்சி நிற்கும் நிச்சயித்த திருமணங்கள் என்ற தலைப்பு. அப்படி என்ன "தெய்வீகமான" காதலை விட நெகிழ்ச்சி நிச்சயித்த திருமணத்தில் இருக்கிறது என்று நீங்கள் கேள்வி கேட்டால், அதற்கான பதில் ஸ்லைடுகளில் கொடுக்கப்பட்டுள்ளது....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உற்சாகம்

உற்சாகம்

நிச்சயித்த திருமணம் உங்களது ஒவ்வொரு நாளையும் புதுமையாய் தொடக்கி வைக்கும். தினம் தினம் உங்கள் வாழ்வில் உற்சாகம் பொங்க செய்யும். புரிதலும், பிரியமும் நாளுக்கு நாள் அதிகரிக்கும். உங்கள் இருவருக்கும் உங்களைப் பற்றி தெரியாது ஆயிரம் புது விஷயங்களை பிரசவித்து மகிழ்ச்சியெனும் குழந்தையை உங்கள் மனதில் ஓடி விளையாட உதவும்.

எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு

உங்களது மனநிறைவை உறுதி செய்வது உங்களது எதிர்பார்ப்பு தான். நிச்சயித்த திருமணத்தில் உங்கள் துணையிடம் இருந்து நீங்கள் எதிர்பார்ப்பது குறைவாக இருக்கும். இது உங்கள் மனநிறைவை அதிகப்படுத்தும். இது உங்களுக்கு சகிப்புத்தன்மையும் தரும்.

பெற்றோரின் மகிழ்ச்சி

பெற்றோரின் மகிழ்ச்சி

உங்களை பெற்றெடுத்து விரும்பியதை எல்லாம் நிறைவேற்றி ஓர் நிழலை போல பின் தொடர்ந்து, பாதுகாத்து வைத்தவர்களது முகத்தில் உங்கள் திருமணத்தின் போது மகிழ்ச்சி பொங்க வேண்டும். அது நிச்சயித்த திருமணத்தில் தான் நிறைவேறும்.

பொருத்தமான ஜோடி

பொருத்தமான ஜோடி

உங்கள் பெற்றோர் பார்த்து வைக்கும் பெண்ணை விட பொருத்தமான ஒரு பெண்ணோ, ஆணோ, உங்கள் வாழ்க்கையை நிறைவு செய்துவிட முடியாது. காதல் என்ற பெயரில் காமம் தேடி ஓடும் சிலரோடு ஒப்பிடுகையில், நிச்சயித்த திருமணம் தான் உங்களுக்கு உண்மையான காதலை உணர வைக்கும்.

குடும்பங்கள் இணையும்

குடும்பங்கள் இணையும்

இது இரு உயிர்கள் மட்டும் இணையும் பந்தம் அல்ல. புதியதாய் ஒரு சூழல், உறவுகள் என உங்களுக்கான தனி உலகத்தின் படைப்பு தான் நிச்சயித்த திருமணம்.

மதிப்பு

மதிப்பு

நீங்கள் என்ன சொன்னாலும், நிச்சயித்த திருமணம் தான் உங்களுக்கு மதிப்பை அதிகரிக்கும். உங்களுக்கான சிறந்த துணை, பெற்றோரின் அரவணைப்பு, புதிய உறவுகளின் அக்கறை கொண்டாட்டங்கள். இவை அனைத்தையும் தாண்டி சமூகத்தில் புதியதாய் கூடும் ஒரு மதிப்பு என நிச்சயித்த திருமணம் உங்கள் வாழ்க்கையையே மாற்றி வைக்கும்.

நோ டென்ஷன், நோ பி.பி

நோ டென்ஷன், நோ பி.பி

துரத்தி துரத்தி மற்றவரோடு போட்டி போட்டு காதலிப்பது, அந்த பெண் நமக்கு கிடைக்குமா கிடைக்காத என பேதலித்தது திரிவது போன்ற விஷயங்கள் இன்றி நீங்கள் நினைத்ததை விட அதிக சந்தோஷத்தை தருவது தான் நிச்சயித்த திருமணம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Seven Reasons Why An Arranged Marriage Is Actually A Sensible Decision

The generation today might think arranged marriages are regressive, and rightly so for the patriarchal set up, but if dealt with in a sensitive way, they're as good as love marriages, if not better.
Story first published: Monday, March 30, 2015, 17:39 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter