ஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என பெண்கள் நினைக்கும் உடலுறவு ரகசியங்கள்!!!

By: Ashok CR
Subscribe to Boldsky

உடலுறவு என்பது இயற்கையான செயல். நம் வாழ்க்கையின் முக்கியமான செயல்களில் அதுவும் ஒன்றாகும். ஒரு பெண்ணிடம் ஒரு ஆணோ, அல்லது ஒரு ஆணிடம் ஒரு பெண்ணோ படுக்கையறையில் பல விஷயங்களை எதிர்பார்ப்பார்கள். அது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பங்களைப் பொறுத்து மாறுபடும்.

ஆனால் அந்த வகையில் சில பொதுவான எதிர்ப்பார்ப்புகளும் உள்ளன. சிலவற்றை வெளிப்படையாக அவர்கள் பகிர்ந்து கொள்வார்கள். சிலவற்றை கூற தயக்கம் உண்டாகும். அப்படி ஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என பெண்கள் விரும்பும் சில படுக்கையறை ரகசியங்கள் உள்ளது.

தங்கள் துணை தெரிந்து கொள்ள வேண்டும் என பெண்கள் விரும்பும் அந்த ஏழு ரகசியங்கள் என்னவென்று பார்க்கலாமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சிறந்த உரையாடல் பாலுணர்வை சிறப்பாக தூண்டும்

சிறந்த உரையாடல் பாலுணர்வை சிறப்பாக தூண்டும்

உரையாடல் பல பெண்களின் பாலுணர்வை தூண்டிவிடும். அவர்களைப் பொறுத்த வரை, உரையாடுவதும், தங்கள் மீது அன்பு கொள்வதும் மிகவும் முக்கியம். நடக்கும் போதோ அல்லது ஓய்வாக இருக்கும் போதோ நல்ல உரையாடலில் ஈடுபட்டால், பாலுணர்வை அது சிறப்பாக தூண்டிவிடும். அவளை எந்தளவிற்கு விரும்புகிறான் என அந்த ஆண் கூறும் போது, நெருக்கமான தருணங்களில் மனதளவிலும் கூட அவன் அவளுடன் இருக்கிறான் என்ற நம்பிக்கை அவளுக்கு கிடைக்கும்.

பல பெண்களுக்கு தங்கள் தோற்றத்தைப் பற்றிய பதற்றம் இருக்கும்

பல பெண்களுக்கு தங்கள் தோற்றத்தைப் பற்றிய பதற்றம் இருக்கும்

ஒரு தம்பதி நீண்ட காலமாக ஒன்றாக வாழ்ந்து வரும் போது, அந்த பெண்ணின் மீது அந்த ஆணுக்கு ஈர்ப்பு குறைந்து வருவதை போன்ற உணர்வை அந்த பெண் பெறுவாள். இதனால் சில பெண்கள் இருட்டில் தான் தங்கள் ஆடைகளை களைவார்கள். அக்கறையுள்ள, அன்பான ஆண்களால் இத்தகைய பதற்றங்களை உணர முடியும். அவள் அசத்தலாக இல்லாத போது, அவள் அப்படி இருப்பதாக கூறி பொய் சொல்ல வேண்டியதில்லை. அதேப்போல் அவர் ஈர்க்கும் வகையில் இல்லை என்றும் கூற வேண்டியதில்லை. அவளிடம் எது அதிக ஈர்ப்பை ஏற்படுத்துகிறதோ, அதை பாராட்டினாலே போதுமானது.

பெண்களைப் பொறுத்த வரை செக்ஸ் என்பது வாழ்க்கையின் ஒரு அங்கமே

பெண்களைப் பொறுத்த வரை செக்ஸ் என்பது வாழ்க்கையின் ஒரு அங்கமே

மறுபுறம், ஆண்களோ வாழ்க்கையின் அழுத்தம் நிறைந்த விஷயங்களை தனியாக பிரித்து அதனை கையாளுவார்கள். அதனால் பாலியல் நடவடிக்கைகளை அவர்கள் தனியாக கையாளுவார்கள். ஆனால் பெண்களுக்கோ அவர்களின் பாலுணர்வு திருப்திகரமாக அமைய, அன்றைய நாளில் அவர்களுக்கு நல்ல உணர்வுகளும், அனுபவங்களும் ஏற்பட வேண்டும். படுக்கையில் அவள் எப்படி ஈடு கொடுக்கிறாள் என்பது, தன் அன்புக்குரியவர் தன்னை படுக்கையில் எப்படி நடத்துகிறார் என்பதை பொறுத்து அமையும். கவனிக்காமல் இருத்தல், கடுமையாக பேசுதல், முரட்டுத்தனமாக தோணி, காயப்படுத்தக்கூடிய வார்த்தைகளை பிரயோகித்தல் மற்றும் விமர்சனம் செய்தல் போன்ற செயல்கள், படுக்கையில் பெண்களின் ஈடுபாட்டையும், ஆர்வத்தையும், உணர்ச்சியையும் குறைத்து விடும்.

புணர்ச்சி பரவச நிலை என்பது கட்டாயமல்ல

புணர்ச்சி பரவச நிலை என்பது கட்டாயமல்ல

ஒரு பெண்ணுக்கு உச்சக்கட்ட பாலுணர்வு சுகத்தை அளிப்பதே நல்ல ஆண்மகனுக்கு அடையாளம் என பல ஆண்கள் நினைக்கிறார்கள். அப்படிப்பட்ட தருணங்கள் இருந்தால் சிறப்பாக தான் இருக்கும். ஆனால் அது எப்போதுமே இருக்க வேண்டும் என்ற கட்டாயமல்ல. புணர்ச்சி பரவச நிலையை அடைய வேண்டும் என்ற அழுத்தத்தை பல நேரங்களில் தங்களின் துணையோ அல்லது தாங்களே கூட கொண்டு வருவார்கள். சில நேரங்களில் புணர்ச்சி பரவச நிலைக்கு பதிலாக, உடலுறவுக்கு முந்தைய விளையாட்டுகளில் ஈடுபடுவதில் கூட பெண்கள் அதிகமாக விரும்புவார்கள்.

உடலுறவு என்பது தீவிரமான ஒரு நடவடிக்கையாக இருக்க வேண்டியதில்லை

உடலுறவு என்பது தீவிரமான ஒரு நடவடிக்கையாக இருக்க வேண்டியதில்லை

விளையாட்டுத்தனம் என்பது ஒரு சிறந்த பண்பாகும். உடலுறவு என வந்து விட்டால் பல ஆண்கள் மிகவும் சீரியஸாகி விடுவார்கள். சிரிப்பதற்கு, காதலுடன் கூடிய குரும்பை செய்வதற்கு, குதூகலமாக இருப்பதற்கு அவர்கள் மறந்து விடுவார்கள். விளையாட்டுத்தனமும், அமைதியான மனமும் நெருக்கமான தருணங்களை மகிழ்வானதாகவும், அமைதியானதாகவும் மாற்றும். இதனால் சிறப்பாக செயலாற்ற வேண்டுமே என்ற டென்ஷனை இருவரிடம் இருந்தும் போக்கும்.

பாலியல் உணர்வில்லாத ஸ்பரிசத்தையும், அரவணைப்பையும் பெண்கள் விரும்புவார்கள்

பாலியல் உணர்வில்லாத ஸ்பரிசத்தையும், அரவணைப்பையும் பெண்கள் விரும்புவார்கள்

பெண்களுக்கு காதல், அரவணைத்தல், கைகளைப் பற்றிக் கொள்ளுதல், முத்தமிடுதல் போன்றவைகளின் மீது அலாதி விருப்பம் இருக்கும். ஆனால் இவைகளையெல்லாம் உடலுறவுக்கு முந்தைய விளையாட்டுகளில் மட்டுமே தங்கள் துணை செய்கிறார் என பல பெண்கள் குறை கூறுவார்கள். ஸ்பரிசத்தின் ஆனந்தத்தைத் தன் துணைக்கு ஒரு பெண் உணரச் செய்ய வேண்டும். அவருக்கு அமைதியளிக்கும் மசாஜ் அளித்தல், முகம் மற்றும் தலை முடியை மென்மையாக வருடுதல் ஆகியவற்றை நீங்கள் செய்தால் பாலியல் உணர்வில்லாத ஸ்பரிசத்தினால் கிடைக்கும் ஆனந்தத்தை அவர் உணர தொடங்குவார். எனவே எது உங்களுக்கு காதல் உணர்வை அளிக்கும் என்பதையும், உங்கள் தேவை என்ன என்பதையும் உங்கள் துணையிடம் கூறுங்கள்.

உடலுறவுக்கு பின்னால் அன்பான கவனிப்பு முக்கியமாகும்

உடலுறவுக்கு பின்னால் அன்பான கவனிப்பு முக்கியமாகும்

உடலுறவுக்கு பின் ஆண்கள் உடனே தூங்கி விடுகிறார்கள் என சில பெண்கள் குறை சொல்வார்கள். அது உண்மையே! உடலுறவு கொள்ளும் போது ஆணின் எண்டோர்பின்களின் அளவு உச்சத்தில் இருக்கும். விந்து வெளியேறிய உடனேயே, எதற்கும் வளைந்து கொடுக்காத நிலையை அவன் அடைவான். அப்போது அவன் விறைப்பு குறைந்து, அவனுடைய அனைத்து அமைப்புகளின் வீரியமும் குறையத் தொடங்கி விடும். பெண்களுக்கோ இந்த கட்டம் மெதுவாக நடைபெறும். இருப்பினும், அவர் உடனே தூங்கக்கூடாது என நீங்கள் விரும்பினால், அவரை மட்டப்படுத்தாமல் கூறுங்கள். அப்படி இல்லையென்றால், உங்கள் கைகளில் அவரை சில நிமிடங்கள் தூங்க விடுங்கள். பின்னர் மெதுவாக அவரை எழுப்புங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Intercourse Secrets Women Want Men To Know

Here are some intercourse secrets women want men to know. Take a look...
Subscribe Newsletter