Latest Updates
-
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்!
பெண்கள், ஆண்களிடம் இரகசியமாக விரும்பும் சில விஷயங்கள்!!
உலகத்தில் உள்ள 700 கோடி மக்களிடமும் வேறுப்பட்டு இருக்கும் சில விஷயங்களில் அவரவர்களது மனோபாவமும் ஒன்று. ஒருவரது மனோபாவத்தை பொறுத்து தான் ஓர் உறவின் வலிமை அமைகிறது. கருத்து வேறுபாட்டின் காரணமாக சில உறவுகள் பிரிவதற்கும் கூட இந்த மனோபாவம் தான் காரணம்.
விவாகரத்தில் முடிந்த பிரபலங்களின் காதல் திருமணங்கள்!!!
அந்த வகையில், சில மனோபாவம் உள்ள ஆண்களை பெண்கள் வெளிப்படையாக ரசிக்காவிட்டாலும், ரகசியமாக அவர்களை ரசிப்பதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். இந்த ஈர்ப்பின் வாயுளாக முளைக்கும் ரசிப்பு, பின்னாளில் காதலாக மலர வாய்ப்புகள் அதிகம் அமைச்சரே....
திருமணத்திற்கு முன்பு பேச்சுலர் ஆண்கள் விட்டொழிக்க வேண்டிய பழக்கவழக்கங்கள்!!!

"நோ" சொல்லும் ஆண்கள்
பெண்களே முன்வந்து காதலை வெளிபடுத்தும் போது கூட, "நோ" சொல்லி விலகும் ஆண்களை பெண்கள் இரகசியமாக விரும்புவார்களாம். (காதல் சொன்ன பொண்ணில்ல பாஸ், அவங்களோட ஃப்ரெண்ட்ஸா இருக்கும்!!!)

காம உணர்ச்சி
அந்த விஷயத்தில் படு பயங்கரமாக ஈடுபாடு உள்ள ஆண்களை, வெளிப்படையாக, "ச்சே.. என்னடி அவன் இப்படி இருக்கான்.." என்று கூறினாலும். காதல் என்று வந்துவிட்டால், பெண்கள் அவர்களை தான் இரகசியமாக விரும்பி ரசிப்பார்களாம்.

சுதந்திரமாக இருப்பவர்கள்
தானும், தன்னை சுற்றி இருப்பவர்களையும் சுதந்திரமாக, அவரவர் வேலைகளை செய்ய ஓகே சொல்லும் ஆண்களை, பெண்களுக்கு மிகவும் பிடிக்கிறதாம்.

பொறாமை
அலுவலகம் அல்லது கல்லூரிகளில் பெரும்பாலான பெண்களாள் பொறாமையாய் பார்க்கப்படும் அழகான ஆண்களை, பெண்கள் இரகசியமாக விரும்புகிறார்கள். எங்கு நேரடியாக கூறினால், தன் மீது மற்றவர்கள் கோபம் கொள்வார்களோ என்ற அச்சம் பெண்கள் மத்தியில் இருக்கிறது.

கோபம் கொள்பவர்கள்
அவ்வப்போது, பெண்கள் மீது செல்லமான, அக்கறையான கோபம் கொள்ளும் ஆண்களை பெண்களுக்கு பிடிக்குமாம். தங்கள் மீது கோபம் கொள்ளும் ஆண்களாக இருந்தாலும் சரி, அல்லது தங்கள் கண்ணெதிரே அவ்வாறு செல்லமான, அக்கறையான கோபம் கொள்ளும் ஆண்களாக இருந்தாலும் சரி, நாங்கள் அவர்களை இரகசியமாக விரும்புவோம் என்கிறது பெண்கள் அணி!!!

சோகத்தை மறைத்து சிரிக்கும் ஆண்கள்
தங்களுக்குள் எவ்வளவு சோகம் இருந்தாலும், அது மற்றவர்களை பாதிக்கக் கூடாது என்று, தன்னை சுற்றி இருப்பவர்களை மகிழ்விக்கும் ஆண்களை பெண்கள் இரகசியமாக விரும்பிகிறார்கள்.

பெண்மையை மதிக்கும் ஆண்கள்
தாங்கள் ஆண்கள் என்ற அகம்பாவம் இன்றி, தங்களை சுற்றியுள்ள பெண்களை மட்டுமின்றி அவர்களுக்குள் இருக்கும் பெண்மையையும், அவர்களுக்கான இடத்தினை சமூகத்தில் நிலைநாட்டும் சில மனிதகுல மாணிக்கங்களை பெண்கள், ஏகபோகமாக விரும்புகிறார்களாம்.

உடுத்தும் உடை
ஆண்களில் பெரும்பாலானோர் செய்யும் தவறு, உடுத்தும் உடையில் கோட்டை விடுவது என்ற பேச்சு இருந்து வந்தது. ஆனால் அது சென்ற நூற்றாண்டு வரை தான், பெண்களை மிஞ்சும் அளவிற்கு ஆண்கள் ஆடை உடுத்தும் வகையில் மேலோங்கியிருக்கின்றனர். கவர்ச்சியான உடையாக இல்லாவிட்டாலும், உடுத்தும் உடையை கட்சிதமாக உடுத்தும் ஆண்களை, பெண்கள் ஆவலாக ரசிக்கிறார்கள்.



Click it and Unblock the Notifications