உடலுறவுக் கொள்வது போன்ற விசித்திரமான கனவுகள் வருவது ஏன்?

By: John
Subscribe to Boldsky

கனவு என்பது மனிதர்கள் மத்தியில் மிகவும் பொதுவான ஒன்று. தூங்கும் போது அனைவருக்கும் வருவது தான் கனவு. ஆனால், சிலருக்கு மட்டும் தான் அடிக்கடி விசித்திரமான கனவுகள் வரும் பேய் கனவுகள், வினோத கனவுகள் மற்றும் உடலுறவுக் கொள்வது போன்ற கனவுகள்.

இந்தியாவில் உடலுறவுக் குறித்து வேறுப்பட்ட கருத்துகள் நிலவுவது ஏன்?

இதில், உடலுறவுக் கொள்வது போன்ற கனவுகள் தான் மிகவும் மனதை பாதிக்கும். நம்முடன் பணிபுரிவோர், பிரபலங்கள், விரோதி, முன்னால் காதலி, யார் எவர் என்றே தெரியாத நபர் போன்றவர்களோடு எல்லாம் உடலுறவு வைத்துக்கொள்வது போன்ற கனவுகள் சிலருக்கு வரும். அது ஏன் என்பதை பற்றி தான் இங்கு பார்க்கவிருக்கிறோம்....

உங்களை ஒருவர் லவ்வுகிறாரா.. என்பதை இதை வைத்துக் கண்டுப்பிடித்துவிடலாம்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அந்நியன்

அந்நியன்

ஊர் பெயர் தெரியாத அந்நியர்களுடன் உடலுறவு வைத்துக் கொள்வது போன்ற கனவுகள் வருவதற்கு முழுவதுமாக நீங்கள் தான் காரணம். மர்மம் மற்றும் காரசாரமான நிகழ்வுகளை விரும்பும் நபர்களுக்கு தான் அந்நியர்களுடன் உடலுறவு வைத்துக் கொள்வது போன்ற கனவுகள் வருமாம்.

பலருடன்

பலருடன்

பொதுவாக உடலறுவு வைத்துக்கொள்ளும் முறையில் ஈடுபாடு குறைந்தாலோ அல்லது புது விதமாக உடலுறவு வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசைகள் அதிகமாக இருந்தாலோ இதுப் போன்று வித்தியாசமாக அல்லது பலருடன் ஒரே நேரத்தில் உடலுறவு வைத்துக் கொள்வது போன்ற கனவுகள் வரும்.

ஓரின சேர்க்கை...

ஓரின சேர்க்கை...

அதிர்ச்சியடைய வேண்டாம். பல பேருக்கு இவ்வாறான கனவுகள் வரும். ஆனால், வெளியில் கூற மாட்டார்கள். இது உங்களுக்குள் ஏதேனும் உணர்வு ரீதியான பாதிப்பு ஏற்பட்டு வருவது இல்லை. உங்கள் மீது மிகவும் அக்கறையாகவும், அன்புடனும் இருக்கும் நபரோடு நெருங்கி இருப்பது போன்ற கனவுகள் வருவது சாதாரணம் தானம். மிகவும் நெருக்கமான உறவு பாராட்டுதல் தான் இதற்கான காரணம்.

பிரபலங்களுடன்

பிரபலங்களுடன்

பெரும்பாலும் ஆண்களை விட பெண்களுக்கு தான், அவர்களுக்கு பிடித்தமான பிரபலங்களுடன் உடலுறவுக் கொள்வது போன்ற கனவுகள் வருமாம். இது, மிகவும் இயல்பானது. நீங்கள் ரொமாண்டிக் மூடில் இருக்கும் போது, அவர்களது திரைப்படங்கள் அல்லது அவர்கள் சார்ந்த செய்திகள் படிக்கும் போது, பேசும் போது அன்றிரவு அவர்களுடன் உடலுறவு வைத்துக் கொள்வது போன்ற கனவுகள் வரலாம்.

வெறுக்கும் நபர்களுடன்

வெறுக்கும் நபர்களுடன்

உங்களுக்கு பிடிக்காத நபர், உங்கள் வேலைகளில் எப்போதும் இடையூறு செய்துக் கொண்டே இருக்கும் நபருடன் உடலுறவு வைத்துக் கொள்வதை போன்ற கனவுகள் வரலாம். இதுப் போன்ற கனவுகள் நீங்கள் மிகவும் குழப்பத்தில் இருக்கும் போது தான் வருமாம். என்ன தான் பிடிக்காமல் இருந்தாலும், அவர்களது ஏதேனும் ஓர் குணாதிசயம் உங்களுக்கு பிடித்திருக்கும். அது சார்ந்த விஷயங்களில் குழப்பத்தில் இருக்கும் போது இவ்வாறான கனவுகள் வருவது சகஜம் தானாம்.

முன்னால் காதலியுடன்

முன்னால் காதலியுடன்

முன்னாள் காதலியின் நினைவுகள் பாதிப்பது அல்லது அவர்களது செயல்கள் எங்காவது பிரதிபலித்தல், அவர்களோடு பழகும் போது ஏற்பட்ட உறவுகள் சார்ந்த நினைவுகள் போன்றவை உங்களை இடையூறு செய்யும் போது, அவர்களுடன் உடலுறவுக் கொள்வது போன்ற கனவுகள் வரலாம்.

காரணம்

காரணம்

ஆக மொத்தம், உங்களுக்கு வரும் கனவுகளுக்கு எல்லாம் நீங்கள் தான் முழுப் பொறுப்பு. எண்ணங்கள் எதை சார்ந்து அதிகம் பயனிக்கின்றதோ அதை சார்ந்து தான் கனவுகளும் வரும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Dream About Having Sex With Co-Worker

Dream is a common thing among Human beings. But sometimes we will get some weird dreams like ghost dreams and having sex with our co-worker or celebrity or anyother else. Do you why it is happens? read here.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter