Latest Updates
-
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் மே 20 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், புகழும் அதிகரிக்கப்போகுது! -
இட்லி உருவான வரலாறு என்ன? இட்லியின் தலைநகரம் என்று அழைக்கப்படும் ஊர் எது தெரியுமா? -
கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைக்கணுமா? இந்த வாஸ்து செடிகள் இருந்தா பணமும் அதிர்ஷ்டமும் தேடி வரும்! -
செஃப் தீனாவின் பச்சை சுண்டக்காய் குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
கேரளா மாம்பழ புளிசேரி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, சாதத்தோட சாப்பிட ஜம்முனு இருக்கும் -
சியா விதை Vs சப்ஜா விதை - கோடையில் இவற்றில் சிறந்தது எது? விளக்கும் டாக்டர்! -
மணி பிளாண்ட் செடியை இந்த திசையில் வச்சிருக்கீங்களா? பணவரவு குறைய இதுதான் முக்கிய காரணமா? -
சாணக்கிய நீதி கூறும் வெற்றிக்கான 3 தாரக மந்திரங்கள் என்னென்ன தெரியுமா? நீங்களும் ஃபாலோ பண்ணுங்க -
2 ஆண்டுகள் கழித்து செவ்வாய் உருவாக்கிய ருச்சக ராஜயோகம்: ஜூன் 21 வரை இந்த 3 ராசிக்கு பணமும்,வெற்றியும் குவியும் -
1/2 கப் பச்சை பயறு இருந்தா.. காலையில் இட்லி, தோசைக்கு இப்படி சட்னி செய்யுங்க.. தாறுமாறா இருக்கும்..
காதலுக்கு முன், காதலுக்கு பின் ஆண்களுக்கு ஏற்படும் "OMG" மாற்றங்கள்!!!
"காதல் வந்துட்டாலே மனசு சும்மா ரெக்கக்கட்டி பறக்கும்" காதலில் விழுந்த மறு நொடியே பாரிஸ் வீரனில் இருந்து பருத்தி வீரன் அனைவரும் சொல்லும் ஒரே வாக்கியம் இதுவாக தான் இருக்கும்.
சூர்யா ஜோதிகாவிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய மாடர்ன் காதல் டிப்ஸ்!!!
முறுக்கு மீசையும், முரட்டு தாடியும் என காட்டுத்தனமாக சுற்றிக் கொண்டிருந்தவன், மை பூசிய கண்களைக் கண்டதும் பொய் பேச ஆரம்பித்துவிடுகிறான். என்னம்மா நீங்க இப்படி பண்றீங்க!!!
பிரிந்த காதல் துணையுடன் மீண்டும் சேர்வது சரியா, தவறா?
காதலில் விழுந்தப் பிறகு, நண்பர்கள் வட்டாரம் பச்சை பச்சையாய் திட்டினாலும், உச்சுக்கொட்டியப் படியே "அவளை" ரசிப்பதும், வர்ணிப்பதுமாக ஆண்களின் நாட்கள் நடைப்போடத் தொடங்கும். கண்டிப்பாக காதலுக்கு முன், பின் என்று இரு வேறுப்பட்ட குணாதிசயம் ஆண்களுக்கு உண்டு அதைப் பற்றி தான் இனிப் பார்க்கப் போகிறோம்...

நக்கல், நையாண்டி, குறும்பு
காதலில் விழும் முன், நண்பர்களுடன் நக்கலும், நையாண்டியுமாக குதுகலாமாக சுற்றிக் கொண்டிருந்த ஓர் ஆணின் வாழ்க்கை, காதலில் விழுந்தப் பின் ரோஜா மலர்வனம் என்ற கற்பனை பாலைவனதிற்குள் விழுந்துவிடுகிறது. (அய்யோ பாவம்!!!)

வேகம்
அம்மா, அக்கா, அண்ணி, தங்கை என யார் சொல்லியும் குறையாத நூறைத் தாண்டும் ஓர் ஆணின் வாகனத்தின் வேகம்,காதலி பின் இருக்கையில் அமர்ந்தப் பிறகு குறைந்துவிடுகிறது (என்ன அப்பப்ப பிரேக் பிடிப்பாங்க, அம்புட்டு தான்)

காசு, பணம், துட்டு
ஆண் நண்பர்களுடன் சுற்றித் திரியும் போது தினம் தோறும் பணம் இருந்த பர்ஸில், காதலுக்கு பிறகு நயா பைசா இருக்காது. (மச்சான், மூலக்கடைல நாள் முழுக்க பத்து காபிக் குடிச்சாலும் நூறு ரூபாயத் தாண்டாது, அதே கபே டே'ல குடிச்சா பின்ன காசு காலி ஆகமா, கேஸ்ஸா காலி ஆகும்.)

ஃபேஸ் புக்
ஃபேஸ் புக்கில் நூறு பெண்களுடன் கடலை வறுத்த விரல்கள், ஒரே பெண்ணுடன் நொண்டி விளையாட்டிக் கொண்டிருக்கும் (அப்படி ஹ்ம்ம், அப்பறம்'னு ஆயிரம் தடவ பேசுறதுக்கு, ஸ்ரீ ராம ஜெயம் எழுதலாம்!! புன்னியமாவதுக் கிடைக்கும்)

சிகை அலங்காரம்
ஆண் சிங்கத்தின் பிடரியைப் போல முகத்தை சுற்றி முடி வளர்த்துத் திரிந்த நண்பன், காதலுக்குப் பிறகு, கொரியன், ஜப்பான்காரன் போல மொளுக்கட்டையாக முகத்தை வைத்துக் கொள்வார்கள்.

கார்னர் சீட்
திரைப்படத்திற்கு சென்றாலே நட்ட நாடு சீட்டு தான் வேண்டும், இல்லையேல் படம் நல்லா தெரியாது, ஸ்க்ரீன் சைடாக இருக்கிறது, தலை வலிக்கும் என புலம்பிக் கொண்டு இருந்தவன், கார்னர் சீட்டை தேடித் பிடித்து தானாக ஒரு படத்தை தரையில் ஓட்டிக் கொண்டிருப்பான்.

ஹ்ம்ம், அப்பறம் - மணி நேரம்!
சும்மாவா சொன்னாங்க, கூத்தாடி காதலிச்சா, மொபைல் நெட்வொர்க் காரனுக்கு சந்தோஷம்'னு. நண்பர்களிடம் ஓரிரு நொடிகளில் கால் பேசாத அந்த கா"தோ"லில் விழுந்தவர்கள், காதலியிடம் மட்டும் மணிக்காக பேசும் பழக்கத்தைக் கடைப்பிடிப்பார்கள்.



Click it and Unblock the Notifications