Latest Updates
-
1 கப் கோதுமை ரவா இருந்தா இந்த மாதிரி அடை செஞ்சு பாருங்க... சூப்பரான காலை உணவா இருக்கும்... ட்ரை பண்ணுங்க...! -
இந்தியாவின் முதல் பெண்களுக்கான பள்ளி எப்போது திறக்கப்பட்டது? எந்த ஊரில் திறக்கப்பட்டது தெரியுமா? -
உருளைக்கிழங்கை ஒருதடவை இந்த மாதிரி கொங்குநாடு ஸ்டைலில் குருமா வைச்சு பாருங்க...டக்கரான சைடிஷா இருக்கும்...! -
அமெரிக்க-ஈரான் போரால் துபாயில் சரசரவென குறையும் தங்கம் விலை...இந்தியாவிலும் தங்கம் விலை குறையுமா? உண்மை என்ன? -
இந்த 4 ராசிக்காரங்க உயிரை கொடுத்தாவது குடும்பத்தை பாதுகாக்கும் ரியல் ஹீரோவாக இருப்பார்களாம்...உங்க ராசி என்ன? -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. தொப்பையும், உடல் எடையும் இருமடங்கு வேகத்துல குறையும்.. -
இன்றைய ராசிபலன் 07 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஆரோக்கிய பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருக்காம்...! -
சனிப்பெயர்ச்சி 2026: இந்த 5 ராசிக்காரங்க ரொம்ப ரொம்ப கவனமாக இருக்கணுமாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
சுரைக்காயை இந்த மாதிரி பச்சடி செஞ்சு பாருங்க... இட்லி, தோசை, சாதம் எல்லாத்துக்குமே டக்கரான சைடிஷா இருக்கும்... -
'நிறங்களின் ராஜா' என்று அழைக்கப்படும் நிறம் எது தெரியுமா? உங்களுக்கு இந்த கலர் பிடிக்குமானு சொல்லுங்க...!
தங்களுக்கு மிகவும் பிடித்த ஆண்களிடம் பெண்கள் எதிர்பார்க்கும் 11 விஷயங்கள்!!!
ஒரு பெண்ணாக இருப்பது சாதாரண விஷயமல்ல, அதுவும் மற்றொருவருடன் காதல் வசப்பட்டிருக்கும் போது அவளுடைய நிலை மிகவும் கடினமானதாக இருக்கும். திருமணமானவளாக அல்லது மணமாகாதவளாக என எந்த நிலையில் அவள் இருந்தாலும், காதலில் பல்வேறு மாற்றங்களை அவள் சந்திக்க வேண்டியுள்ளது. நீங்கள் ஒருவருடன் உளமார்ந்த உறவில் இருக்கும் போது, அந்த உறவை சிறப்பாக வைத்திருக்கும் பொருட்டாக சில விஷயங்களை விட்டுக் கொடுக்க வேண்டியிருக்கும். அதே நேரத்தில், அவரிடமிருந்து சில விஷயங்களை எதிர்பார்ப்பதையும் தவிர்க்க முடியாது. ஏனெனில், இந்த உறவு உங்கள் இருவரின் மகிழ்ச்சிக்காக மட்டுமே!
எனவே, காதலில் திளைத்திருக்கும் பெண்களே, இதோ உங்களவரிடம் எதிர்பார்க்க வேண்டிய பல்வேறு குணங்களையும் பற்றி நிறைய யோசிக்கத் துவங்குங்கள். மேலும், ஆண்களே இங்கே தரப்பட்டுள்ளவற்றை படித்துப் பார்த்து, மனதுக்கு இனியவளை மேலும் மகிழ்ச்சியடையச் செய்யுங்கள்.

சிரிக்க வையுங்கள்
தன்னுடன் வாழ்க்கை முழுவதும் இருக்கக் கூடிய வாலிபனிடம் சிரிக்க வைக்கும் குணம் உள்ளதா என்று பெண்கள் கவனிப்பார்கள். நீங்களும் அப்படிப்பட்டவரா? ஆம் என்றால், ஓ.கே சார். ஏனெனில், விளையாட்டும், சிரிப்பும் மற்றும் துள்ளலும் இல்லாத வாழ்க்கையில் இனிமை இருப்பதில்லை.

ஊக்கப்படுத்துபவன் மற்றும் பொறுமை காப்பவன்
ஒவ்வொரு பெண்ணும் சிறப்பானவள் தான். அவளை முழுமையாக ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒருவனையே பெண் எதிர்பார்ப்பாள். மேலும், அனைத்து பெண்களைப் போலவே, உங்களுக்குப் பிடித்தவற்றைச் செய்ய விடக்கூடிய ஆணையே நீங்களும் விரும்புவீர்கள். அதே நேரம், பெண்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளும் பொறுமையுடையவனையும் பெண்கள் எதிர்பார்ப்பார்கள்.

கடுமையான வேலைக்குப் பின் அவளுக்கு என்ன வேண்டும்!
கடுமையான வேலையை முடித்து விட்டு வீட்டுக்கு வரும் மனைவிக்கு, சாப்பாட்டு டேபிளின் மேல் அவளுக்குப் பிடித்த உணவு வகைகளை வைத்திருக்கும் கணவனை விட வேறெதுவும் தேவையா! இந்த ஒரு விஷயம் போதும், அவளுடைய உணர்வுகளை நாம் புரிந்து கொண்டதை வெளிப்படுத்த...

உறவுக்கு நேரம் ஒதுக்குகிறோம், அவனுடைய வேலைக்கு அல்ல
ஒரு உறவு சிறப்பாக இருக்க வேண்டுமானால், அதனை வளர்த்திட வேண்டும். இவ்வாறு வளர்த்திடுவதற்கு உங்களுடைய நேரம் மற்றும் கவனத்தைச் செலவிட வேண்டும். மேலும், வேலைக்கு மட்டுமே நேரத்தைச் செலவிடாமல் உங்களையும் கவனித்துக் கொள்பவரே நீங்கள் எதிர்பார்க்கும் மணவாளர். அவர் தான் உங்களுடைய நட்பை எப்பொழுதும் பசுமையாக வைத்திருப்பார்.

அவளுடன் இருப்பதை அதிர்ஷ்டமாக கருதுபவர்
இங்கதான்யா நீர் நிற்கிறீர்! உங்களை முழுமையாக ஏற்றுக் கொள்ளத் தயாராக உள்ள நபர் தான், உங்களை அடைவதற்கும் தகுதியானவராவார். ஏனெனில், உங்களுடன் இருப்பதை நல்ல விஷயமாகக் கருதினால் தான் உறவு நீடிக்கும்.

தோற்றத்தில் முதிர்ச்சி
காதலனின் அம்மாவைப் போலத் தோற்றமளிக்க எந்தப் பெண்ணும் விரும்புவதில்லை. தோற்றத்தில் முதிர்ச்சியும், மெச்சூரிட்டியும் மற்றும் பொறுப்பானவனாகவும் இருக்கும் ஆண்மகன் மேல்தான் அவளுக்கு கண் இருக்கும். குழந்தைத்தனமாக இருக்கும் ஆண்களை பெண்கள் கண்டிப்பாக விரும்புவதில்லை. எந்தவொரு ஆண்மகன் அவளுக்குப் பாதுகாப்பு உணர்வைத் தருகிறானோ, அவனையே வேண்டுமென விரும்புவாள்.

அவளுக்குப் 'பிடித்தவைகளை' அறிந்தவர்
உங்களை எப்படி கையாள வேண்டும் என்று அறிந்தவரும் மற்றும் படுக்கையிலும் கூட நீங்கள் எதை எப்பொழுது செய்தால் பிடிக்கும் என்று அறிந்தவரும் தான், பெண்களால் விருந்து படைக்கத் தகுதியானவர்கள். சரியான மூவ்மெண்ட் எங்கே எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டு சொல்லத் தெரிந்தவர் உங்களுடன் இருக்கும் போது, அதைப்பற்றி நீங்களும் தெரிந்திருப்பதும் சிறந்த பலனைத் தரும்.

வார இறுதி நாட்களில் வீட்டிலிருக்க விரும்புபவர்
வார இறுதி நாட்களில் நண்பர்களுடன் பார்ட்டிகளுக்கு செல்வதும், ஊர் சுற்றச் செல்வதும் உண்மையிலேயே மகிழ்ச்சியளிக்கும் விஷயங்கள் தான். ஆனால், இவ்வாறு வெளியில் செல்லாமல் வீட்டிலிருக்கும் ஆண்மகனையும் மற்றும் அதே சமயத்தில் போர்வைக்குள் புகுந்து கொண்டு பிடித்த சினிமாவைப் பார்க்கும் ஆண்மகனையும் பெண்கள் விரும்புவார்கள்.

அவளுடைய பெற்றோர்களை மதிப்பவரும், விரும்புபவரும்
ஒரு பெண்ணுக்குத் திருமணமாகி விட்டால், அவள் கணவனுடைய பெற்றோர்கள் அவளுக்கும் பெற்றோராகி விடுகிறார்கள். மேலும், தன்னுடைய பெற்றோர்களைப் போலவே அவர்களையும் மதிக்கத் தொடங்குவாள். இதைப் போலவே, தன்னுடைய பெற்றோர்களை மதிப்பவரையும் மற்றும் மோசமான நேரங்களில் நன்றாக கவனித்துக் கொள்பவரையும் பெண்கள் விரும்புவார்கள்.

தினசரி வேலைகளை பகிர்ந்து கொள்பவர்
வீட்டு வேலைகளை தினசரி பகிர்ந்து கொள்ளும் ஆண்மகன்களை பெண்கள் மிகவும் விரும்புவார்கள். சமைப்பது அல்லது சுத்தம் செய்வது அல்லது வீட்டு வேலைகளை சமமாக பகிர்ந்து கொள்வது என ஒவ்வொரு விஷயத்திலும் ஈகோ பார்க்காமல் பங்கு கொள்ளும் ஆண்களிடம் நெருங்கிப் பழக முனைவார்கள். மேலும், அவருக்கு எங்கிருந்து சுத்தம் செய்ய வேண்டும் மற்றும் எப்படி செய்ய வேண்டும் என்று தெரிந்திருந்தால் மிகவும் மகிழச்சியடைவார்கள்.

அவளை அவளாகவே வாழ விடுபவர்
மற்றொரு ஆணுடன் இருப்பதற்காக எந்த ஒரு பெண்ணும் தன்னை முழுமையாக மாற்றிக் கொள்ள வேண்டியதில்லை. உங்களை நீங்களாகவே இருப்பதை விரும்புபவர், உங்களுக்கு சுதந்திரத்தை தருவார் மற்றும் உங்களுக்கான இடத்தை ஆக்கிரமிக்காமல் விடுவார், இதனால் மட்டுமே உறவு நீடித்து வளரும். உங்களுக்கு எப்படி வாழ்க்கையும், நண்பர்களும் மற்றும் அமைதியும் தேவைப்படுகிறதோ, அதே விஷயத்தை உங்கள் துணைவராக இருக்கும் பெண்ணும் பெறுவது சரிதானே?



Click it and Unblock the Notifications











