Latest Updates
-
செவ்வாய் ரோகிணி நட்சத்திரத்திற்கு செல்வதால் ஜெயிக்கிற குதிரையாக ஜொலிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
மொறுமொறு ராகி தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 04 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க மோசமான பலன்களை அனுபவிக்கப் போறாங்களாம் -
ஜூலை 07-ல் வக்ர நிலையில் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 6 ராசிகளின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
குருபகவானின் அஸ்தமனத்தால் ஆகஸ்ட் மாதம் வரை கஷ்டப்படப் போகும் 3 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
மதுரை ஸ்பெஷல் தக்காளி கார சட்னி ரெசிபி - காரசாரமா இப்படி செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் அதிகமா சாப்பிடுவாங்க -
இந்த விரலில் தங்க மோதிரம் போட்டா அவங்க வாழ்க்கையில் துரதிர்ஷ்டம் எப்போதும் போகாதாம் - எந்த விரலில் போடணும்? -
உங்க குதிகால் வறண்டு சொரசொரன்னு அசிங்கமா இருக்கா? அப்ப இந்த பேக்கை போடுங்க.. -
செட்டிநாடு கவுனி அரிசி பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஆரோக்கியமா, சுவையா இருக்கும் -
1 மாம்பழமும், மைதா மாவும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்வீட்டை செய்யுங்க.. அள்ளும்..
மனதிற்கு பிடித்தவரை கவர்வதற்கு செய்ய வேண்டியவைகள்!!!
சில நேரங்களில் சிலரைப் பார்த்தால், மனதிற்கு உற்சாகம் எழுவதோடு, அவர்களின் மீது அளவுக்கு அதிகமான பாசம் எழும். மேலும் அப்படி பாசம் வைத்தவர்கள், தம்மிடம் வந்து பேசினால், மனதில் உற்சாகமானது அளவுக்கு அதிகமாக இருக்கும். அதுமட்டுமின்றி, எப்போதும் அவர்களைப் பற்றிய எண்ணங்கள் மனதில் ஓடிக் கொண்டிருக்கும்.
அதிலும் அவர்கள் நம் நண்பர்களானால், அவர்களின் மனதில் நல்ல இடத்தைப் பிடிப்பதற்கு ஒருசில செயல்களை செய்வோம். மேலும் எங்கு செல்வதாக இருந்தாலும் அவர்களுடன் செல்ல விரும்புவோம். அதுமட்டுமல்லாமல் அவர்களிடம் இருந்து நிறைய எதிர்பார்ப்போம். அப்படி நம் மனதிற்கு பிடித்தவர் நமக்கு நண்பர்களாக இருக்கும் போது, அவர்கள் மனதில் நல்ல இடத்தைப் பிடிப்பதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று கொடுத்துள்ளோம். அதைப் பார்ப்போமா!!!

* மாலை வேளையில் அவர்களுடன் நேரம் செலவழிப்பதற்கு அவர்களை எங்கேனும் அழைத்துச் செல்லலாம். அப்படி செல்லும் போது, அவர்களுக்கு பிடித்த நிறத்தில் ஆடையை அணிந்து கொண்டு, அவர்கள் வசதியாக உணரும் வண்ணம் ஏதேனும் ஒரு அழகான இடத்திற்கு அழைத்துச் சென்று, அவர்களுடன் நேரத்தை செலவழிக்கலாம். இப்படி அவர்களுக்கு பிடித்தவற்றை செய்து வந்து, அவர்களது மனதைக் கவரலாம்.
* உங்கள் மனதிற்கு பிடித்தவர்களின் விருப்பங்கள் மற்றும் விருப்பமில்லாததை தெரிந்து கொள்ள விரும்பினால், அவர்களை ஷாப்பிங் அழைத்துச் செல்லாம். அப்படி அழைத்துச் செல்வதன் மூலம், நிறைய பேச வாய்ப்புக்கள் கிடைக்கும். இதன் மூலம் அவர்களுக்கு பிடித்தவைகள் மற்றும் பிடிக்காதவைகளை புரிந்து கொள்ளலாம்.
* இல்லாவிட்டால் படம் பார்க்க அழைத்துச் செல்லாம். அப்படி அழைத்துச் செல்லும் போது, எடுத்ததுமே ரொமான்டிக் படத்திற்கு அழைத்து செல்லாமல், நட்பு சார்ந்த படத்திற்கோ அல்லது நகைச்சுவையான படத்திற்கோ அழைத்து செல்லலாம். வேண்டுமானால், ஆரம்பத்தில் உங்களுடன் உங்கள் மனதைப் புரிந்து கொண்ட நண்பர்களை அழைத்துச் சென்றால், இருவரும் வெட்கம் இல்லாமல் வசதியாக உணர முடியும்.
* ஒருவேளை உங்கள் மனதைக் கவர்ந்தவர் பார்ட்டி, பப் என்று செல்பவராக இருந்தால், அவர்களை கவரும் வண்ணம் நடனம் ஆடி மயக்கலாம்.



Click it and Unblock the Notifications