Latest Updates
-
விநாயகர் சதுர்த்திக்கு இப்படி எள்ளு பூர்ண கொழுக்கட்டை செய்யுங்க.. 10 நிமிஷத்துல 50 கூட செய்வீங்க.. -
இந்த 4 ராசி பெண்கள் புத்திசாலி அம்மாவாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தொடர்ந்து 14 நாட்கள் முட்டை சாப்பிடுவதால் உடலில் என்னென்ன அற்புதங்கள் நடக்கும்? - விளக்கும் அமெரிக்க டாக்டர்! -
கர்நாடகா ஸ்டைல் மஷ்ரூம் பிரியாணி ரெசிபி - இந்த மாதிரி பிரியாணி செஞ்சு பாருங்க - கமகமனு சூப்பரா இருக்கும் -
உலகில் இன்றும் புழக்கத்தில் இருக்கும் பழமையான கரன்சிகள் - எந்த நாட்டு பணம் முதலிடத்தில் இருக்கு தெரியுமா? -
செப்டம்பர் 17-ல் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
மணமணக்கும்.. தக்காளி பொங்கல் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 10 செப்டம்பர் 2026: இன்று இந்த 5 ராசிகளுக்கு மோசமான நாளாக இருக்கப்போகுதாம் -
செப்டம்பர் இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு தொழில் வளரும்.. வருமானம் அதிகரிக்கும்.. -
கன்னி ராசிக்குள் சூரியன் நுழைவதால் துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
ஆண்களுக்காக பெண்கள் செய்யக்கூடாத செயல்கள்!!!
வாழும் வாழ்க்கையை திருப்தியுடன் வாழ நினைத்தால், பெண்கள் சில விஷயங்களை ஆண்களுக்கு செய்யவே கூடாது. காதல் வலிமையானது தான், ஆனால் உங்களுடைய ஒவ்வொரு அசைவையும் அது சர்வாதிகாரம் செய்யக் கூடாது. அதே போல, மற்றவர்களுக்காக பரிந்து நிற்பது முக்கியமானது தான்.
ஆனால் அதற்காக உங்களுடைய மகிழ்ச்சியை வேறொருவருக்காக இழக்க வேண்டியதில்லை. பெண்களே, நீங்கள் திருப்தியாக வாழ விரும்பினால், இது போன்ற சில விஷயங்களை ஆண்களுக்காக செய்ய வேண்டாம்.

கனவுகளை விட்டுக் கொடுத்தல்
நீங்கள் எப்பொழுதுமே ஒரு ஆசிரியராக வேண்டும் என்று விரும்பியிருந்தால், அதைத் தவிர வேறொன்றையும் அவர் பேசாதிருக்கச் செய்யுங்கள். உங்களுடைய அல்லது உங்கள் கணவருடைய கனவுகளுக்கிடையில் நீங்கள் எதையும் தேர்ந்தெடுக்கத் தேவையில்லை. குறிப்பிட்ட ஒரு வேலையை நீங்கள் விரும்பாவிடில், அது பரவாயில்லை. ஆனால், தனக்குப் பிடித்த ஆணுடன் இருக்கும் பொருட்டாக, அவள் தன்னுடைய கனவுகளை காற்றில் பறக்க விடத் தேவையில்லை.

நண்பர்களுடனான நேரத்தை விட்டுக் கொடுத்தல்
யாராக இருந்தாலும் தங்களுக்கு நேரம் போதவில்லை என்று சொல்லிக் கொண்டு தான் இருக்கிறார்கள். எனினும், உங்களுக்கு கிடைத்த நேரம் முழுமையும் அவருடனேயே கழிக்க வேண்டாம். உங்களுடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடனும், அவரைப் போலவே நேரத்தைச் செலவிடுங்கள். அனைவருக்கும் சாதகமான வகையில் உங்களுடைய நேரத்தை பிhத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய நண்பர்களை தவிர்க்க வேண்டாம், ஏனெனில், உங்களுடைய உறவு முடியும் காலத்தில் நண்பர்களின் அரவணைப்பு தேவைப்படும்.

முட்டாளாக நடித்தல்
நீங்களாக இல்லாத ஒருவரைப் போல எப்பொழுதும் நடிக்க வேண்டாம். அவரை மகிழ்ச்சியடையச் செய்யும் பொருட்டாக, உங்களை அறிவு குறைந்தவராகவோ அல்லது அவருடைய கைப்பாவையாகவோ செயல்பட வேண்டாம். ஆண்களுக்கு சுதந்திரமாக செயல்படும் பெண்களைத் தான் பிடிக்கும் என்பதை நம்புங்கள். நீங்கள் எப்படி அனைத்து விஷயங்களையும் கவனித்துக் கொள்கிறீர்;கள் என்று எண்ணி அவர் பெருமைப்படுவார்.

பட்டினி கிடத்தல்
ஆரோக்கியமாக இருக்க நினைப்பதில் எந்தவிதத் தவறும் இல்லை. நீங்கள் சரிவிகித உணவை சாப்பிடத் தொடங்குவதும் அல்லது உடற்பயிற்சி செய்யத் துவங்குவதும் பெரிய விஷயம் தான்! ஆனால், இவற்றை எல்லாம் உங்களை மேன்மைப்படுத்திக் கொள்ளும் பொருட்டாக மட்டுமே செய்ய வேண்டும். உங்களவரை திருப்திப்படுத்தும் நோக்கில் செய்ய வேண்டாம். மேலும், மிகவும் கடினமான வழிமுறைகளான பட்டின கிடத்தல் போன்றவற்றை கடைபிடிக்க வேண்டாம். எடையைக் குறைத்து உடலை ஃபிட்டாக வைக்க எத்தனையோ ஆரோக்கியமான வழிகள் உள்ளன்.

அவருடைய கட்டுப்பாட்டில் இருத்தல்
நீங்கள் அவரை எவ்வளவுக்கெவ்வளவு விரும்புகிறீர்களோ, அந்த அளவிற்கு அவரை உங்களை கட்டுப்படுத்தும் படி விட வேண்டாம். நீங்கள் ஆத்மார்த்தமான உறவில் இருந்தால், பெரிய முடிவுகளை விவாதித்து எடுக்க வேண்டியதும் முக்கியமானதாகும். எனினும், அவர் எடுக்கும் முடிவை விட உங்களடைய முடிவு தான் அல்லது நீங்கள் செய்ய விடுவது hன் முடிவாக இருக்கும். இறுதியாக, நீங்கள் தான் உங்களுடைய வாழ்க்கைப் பாதையைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பைப் பெற்றிருப்பீர்கள்.

குழந்தைகள் பெற்றுக் கொள்ளுதல்
நீங்களும், உங்களவரும் குழந்தைகள் பெற விரும்பினால் நல்ல விஷயம் தான்! ஆனால், உங்களவர் குழந்தைகள் பெறவும், உங்களுக்கு அது சிறந்த எண்ணமாகத் தோன்றாமலும் இருந்தால், அவருக்காக நீங்கள் கர்ப்பம் அடையத் தேவையில்லை. உண்மையில், குழந்தையைப் பெற்றுக் கொள்வதென்பது மிகப்பெரிய முடிவாகும். அவருக்கு ஒரு குழந்தை வேண்டும் என்ற காரணத்திற்காக நீங்கள் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டாம். அது நீங்கள் விரும்பி ஏற்றுக் கொண்ட முடிவாக இருந்தால் மட்டுமே செயல்படுத்துங்கள்.



Click it and Unblock the Notifications
