Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
ஆண்கள் தனக்கு துணையாக வரும் பெண்ணிடம் எதிர்பார்க்கும் குணங்கள்!!!
இவ்வுலகில் ஒவ்வொருக்குமே தனக்கு துணையாக வருபவர் இப்படி இருக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்பு இருக்கும். அதில் பெண்களுக்கு தான் எதிர்பார்ப்புக்கள் அதிகம் இருக்கும் என்று பலர் நினைக்கின்றனர். ஆனால் ஆண்களுக்கும் தனக்கு துணையாக வரும் பெண் இத்தகைய குணத்துடன் இருக்க வேண்டுமென்று ஆசைப்படுவார்கள்.
எதிர்பார்ப்புக்கள் இல்லாவிட்டால், வாழ்க்கையில் எந்த ஒரு சுவாரஸ்யமும் இருக்காது. மேலும் தன் துணையின் எதிர்பார்ப்பு புரிந்தும், அந்த எதிர்பார்ப்பிற்கு ஏற்றவாறு நடக்காமல் இருந்தால், உண்மையில் அந்த உறவில் எந்த ஒரு சந்தோஷமும் சுவாரஸ்யமும் இருக்காது. அதுமட்டுமல்லாமல் ஆண்கள் ஒரு பெண்ணின் அழகை விட, குணத்தைக் கொண்டு தான் முதலில் காதலில் விழுவார்கள்.
ஆண்கள் பெண்களிடம் சொல்லத் தயங்கும் 10 விஷயங்கள்!!!
மேலும் ஆண்களுக்கு எத்தனை பெண் தோழிகள் இருந்தாலும், தன் காதலியிடம் தான் அவர்களுக்கு பிடித்த குணங்கள் இருக்கும். ஆனால் அப்படி எதிர்பார்க்கும் குணங்கள் கொண்ட பெண்களை எளிதில் பெற முடியாது. இங்கு ஆண்கள் தனக்கு துணையாக வரும் பெண்ணிடம் எதிர்பார்க்கும் சில குணங்களை பட்டியலிட்டுள்ளோம். அத்தகைய குணங்கள் உங்களிடம் இருந்தால், உங்களவர் உங்களை விட்டு பிரியமாட்டார்.

சார்ந்து இருக்கக்கூடாது
தற்போதைய ஆண்கள் தனக்கு துணையாக வரும் பெண்ணிடம் எதிர்பார்க்கும் ஒரு குணம் தான், தன்னை சார்ந்து இல்லாமல் இருப்பது. இப்படி இருப்பதால், பெண்கள் மிகவும் தைரியமானவர்களாகவும், எந்த கஷ்டத்தையும் தாங்கி எதிர்த்து வாழ்பவர்களாகவும் இருப்பார்கள் என்பதால் தான்.

நன்கு பேச வேண்டும்
சில பெண்கள் தங்களது துணையின் நண்பர்களுடன் சகஜமாக பேசமாட்டார்கள். ஆனால் அப்படி இருப்பது ஆண்களுக்கு பிடிக்காது. நன்கு சந்தோஷமாக, அவர்களது நண்பர்களுடன் பேசி, துணைக்கு ஒரு நல்ல தோழியாக இருக்கும் பெண்களைத் தான் ஆண்களுக்குப் பிடிக்கும்.

நச்சரிக்கக்கூடாது
எப்போதும் நச்சரித்துக் கொண்டே இருக்கும் பெண்களைக் கண்டால், ஆண்கள் ஓடிவிடுவார்கள். ஆகவே எந்த ஒரு விஷயத்திற்கும் அவர்களை நச்சரிக்காமல் இருக்கும் பெண்களைத் தான் ஆண்கள் விரும்புவார்கள்.

அழகாக இருக்கவும்
எவ்வளவு தான் அகம் அழகாக இருந்தாலும், கொஞ்சம் புற அழகும் வேண்டுமல்லவா? எனவே அழகை சரியாக பராமரித்து வரும் பெண்களையும் ஆண்கள் விரும்புவார்கள். அதிலும் நீங்கள் கொஞ்சம் மற்றவர்கள் சைட் அடிக்கும் வகையில் சூப்பர் பிகர் போன்று காணப்பட்டால், அவர்கள் உங்களை பெற்றதற்கு மகிழ்ச்சியாக இருப்பதுடன், பெருமையாகவும் உணர்வார்கள்.

தைரியமான பெண்கள்
ஆண்கள் தைரியமான மற்றும் தன்னம்பிக்கையுடன் செயல்படும் பெண்களை அதிகம் விரும்புவார்கள்.

சற்று சுதந்திரம் கொடுக்கும் பெண்கள்
காதலன் எப்போதும் நான் சொல்வதைத் தான் கேட்க வேண்டும் என்று எண்ணாமல், காதலனை அவர்கள் போக்கில் விடும் பெண்களையும் ஆண்களுக்கு பிடிக்கும். ஏனெனில் உறவில் கொஞ்சம் சுதந்திரம் இருந்தால் தான், அந்த உறவு ஆரோக்கியமாக இருக்கும்.

புத்திசாலி பெண்கள்
புத்திசாலித்தனத்துடன் செயல்படும் பெண்களை ஆண்கள் அதிகம் விரும்புவார்கள். ஏனெனில் இத்தகைய பெண்களால் எத்தகைய சூழ்நிலையையும் சமாளித்து வெளிவருவார்கள். மேலும் சில ஆண்கள் தான் சொல்வது தான் சரி என்று இருப்பார்கள். அத்தகைய ஆண்களை புத்திசாலித்தனமான பெண்கள் எளிதில் மாற்றுவார்கள்.

குறிப்பு
என்ன நண்பர்களே! சொன்னது எல்லாம் சரிதானே... முக்கியமான வேறு எதையாவது இங்கு கொடுக்காமல் இருந்தால், அதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.



Click it and Unblock the Notifications