Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
காதல் வாழ்க்கை ரொமான்ஸாக இருக்க துணையுடன் பகிர்ந்து கொள்ள வேண்டிய பொருட்கள்!!!
ஒருவரின் மீது காதல் என்ற ஒன்று வந்துவிட்டால், அந்த காதலானது நீண்ட நாட்கள் சந்தோஷமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டுமானால், காதலிக்கும் இருவரும் அனைத்து விஷயங்களையும் பகிர்ந்து கொள்ள வேண்டும். அப்படி பகிர்ந்து கொள்வதால், இருவருக்கும் உள்ள நெருக்கமானது அதிகரிக்கும்.
குறிப்பாக அப்படி பகிர்வது சந்தோஷம், கஷ்டம் என்பதில் மட்டுமல்லாமல், பயன்படுத்தும் பொருட்களில் இருந்தால் அன்பு அதிகரிப்பதுடன், காதல் வாழ்க்கையானது ரொமான்ஸாகவும் இருக்கும். மேலும் நிபுணர்கள் கூட காதலிப்பவர்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதுடன், பொருட்களை பகிர்ந்து கொள்வதும் முக்கியம் என்று சொல்கின்றனர்.
இங்கு காதலிப்பவர்கள் தன் துணையுடன் எவற்றையெல்லாம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் படித்து அவற்றை உங்கள் துணையுடன் பகிர்ந்து கொண்டு, சந்தோஷமாக வாழுங்கள்.

சோப்பு
தம்பதியர்கள் அல்லது காதலர்கள் குளிக்கும் போது பயன்படுத்தும் சோப்பை பகிர்ந்து கொள்வதன் மூலம், இருவருக்கும் குளியலானது விருப்பமான ஒன்றாக இருக்கும். அதிலும் உங்கள் துணையின் உடலை தொட்ட சோப்பை பயன்படுத்தும் போது, அதனால் சந்தோஷம் கிடைப்பதுடன், நல்ல உணர்வை அனுபவிக்கலாம்.

போர்வை
குளிர்காலத்தில் தம்பதியர்கள் ஒரே போர்வையை பயன்படுத்தும் போது, இருவருக்குள் இருக்கும் அன்பானது அதிகரிப்பதுடன், ரொமான்ஸ் இன்னும் சூப்பராக இருக்கும்.

தட்டு
துணையுடன் சேர்ந்து ஒரே தட்டில் சாப்பிடும் போது கிடைக்கும் சந்தோஷம் வேறு எங்கும் கிடைக்காது. அதிலும் அப்படி சாப்பிடும் போது அவர்கள் ஊட்டி விட்டால், அடடா அந்த அருமையான தருணத்திற்கு ஈடு இணை ஏதும் இல்லை.

புத்தகங்கள்
உங்களுக்கு பிடித்த புத்தகத்தை, அதிலும் நல்ல காதல் புத்தகத்தை உங்கள் துணையிடம் கொடுத்து படிக்க வைப்பதன் மூலம், அவரது மனதில் நல்ல இடத்தைப் பிடிக்கலாம்.

சட்டைகள்
உங்கள் டி-சர்ட்டை அணிவது உங்களுக்கு வசதியாக இருந்தாலும், உங்கள் துணையின் சட்டையை நீங்கள் அணியும் போது, அது சொர்க்கத்தில் இருப்பது போன்ற சந்தோஷத்தைக் கொடுக்கும்.

டவல்
குளித்து முடித்த பின்னர், உங்கள் துணை பயன்படுத்திய டவல் கொண்டு உங்கள் உடலைத் துடைத்தால், அதனால் கிடைக்கும் சந்தோஷத்திற்கு அளவே இல்லை.

சிகரெட்
தற்போது ஆண்கள், பெண்கள் என இருவருமே சிகரெட் பிடிக்கிறார்கள். அப்படி பிடிப்பவர்களாக இருந்தால், இருவரும் ஒரே சிகரெட்டை பிடிக்கலாம். இது ஒரு ரொமான்டிக் தருணமாக இருக்கும்.

டூத் பிரஷ்
எவ்வளவு தான் காதலித்தாலும், தெரிந்தோ தெரியாமலோ டூத் பிரஷ்ஷை மட்டும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். இது நல்லதல்ல.



Click it and Unblock the Notifications