Latest Updates
-
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
உங்களை விட வயது அதிகம் உள்ள பெண்களை கவர சில டிப்ஸ்...
இதை அவ்வளவு சுலபத்தில் செய்ய முடியாது. பொதுவாக தங்கள் வயதை உடைய பெண்கள் அல்லது தங்களை விட குறைவான வயதை உடைய பெண்களை ஈர்க்க தான் பெரும்பாலான ஆண்கள் விரும்புவார்கள். இருப்பினும் தங்களை விட அதிக வயதை கொண்ட பெண்களை கவர்வதற்கு அனுபவமும் பக்குவமும் தேவைப்படும். பொதுவாகவே நீங்கள் கவர விரும்பும் பெண்கள் அனுபவசாலியாகவும் புத்திசாலியாகவும் இருப்பார்கள். அவர்கள் ஆண்களின் உடல் ரீதியான கவர்ச்சியை தாண்டி பலவற்றை எதிர்ப்பார்ப்பார்கள்.
உங்கள் வயதை கொண்ட பெண்களை விட, மூத்த பெண்கள் சற்று வேறுபட்டு இருப்பார்கள். அவசரப்படுவது மற்றும் திணிக்க முயற்சிப்பதை தவிர்க்க வேண்டியது முக்கியமான ஒன்றாகும். அதே போல் மூத்த பெண்கள் அனைவருமே வயதில் குறைவாக இருக்கும் ஆண்களை தேடி செல்ல மாட்டார்கள் என்பதும் முக்கியமான ஒன்றாக வேண்டும். அதனால் அவர்களை பற்றி முழுமையாக அறிந்து, அவர்களை விட வயதில் குறைவான ஆண்களின் மீது அவர்களுக்கு நாட்டம் உள்ளதா என்பதை அறிந்து கொள்வது உங்கள் சாமர்த்தியம்.
உங்க செல்லத்திடம் 'ஐ லவ் யூ' சொல்லாம வேறு எப்படி காதலைச் சொல்லலாம்..??
அவர்களை மயக்கும் வண்ணம் பேசும் வார்த்தைகளை பயன்படுத்துவதை தவிர்க்கவும். உங்களை விட மூத்த பெண்கள், உங்களிடம் அழகை விட சரக்கை தான் எதிர்ப்பார்ப்பார்கள். பொதுவாகவே 40 வயதை கடந்த பெண்கள், உடல் ரீதியான நெருக்கத்தில் உடனடியாக ஈடுபட மாட்டார்கள். அதனால் அவர்களை கவர வேண்டும் என்றால், நீங்கள் அதிகமான சிரத்தை எடுக்க வேண்டி வரும். அதற்கு அதிக அளவிலான பொறுமையும் தன்னம்பிக்கையும் தேவைப்படும். நீங்கள் நீங்களாகவே செயல்படுவதும் நல்லது. உங்கள் தனித்துவத்தில் தான் அவர்கள் கவரப்படுவார்கள். அவர் வாழ்க்கையில் சந்தித்தவர்களில் நீங்கள் வேறுபட்டு இருந்தால் கண்டிப்பாக உங்கள் மீது ஈர்ப்பு ஏற்படும்.

தன்னம்பிக்கை
ஒரு இளைஞனாக, உங்களுடைய தனித்துவத்தை அறிந்து கொள்வதில் பெரும் பாதுகாப்பின்மையை உணர்வீர்கள். ஆனால், உங்கள் வயது அல்லது உங்களை விட மூத்த பெண்ணை அணுகும் போது, தன்னம்பிக்கை மற்றும் உறுதியுடன் செயல்பட வேண்டும். அவரிடம் நேர்மையாகவும் வெளிப்படையாகவும் நடந்து கொள்ள வேண்டும். அதே போல் அவரிடம் பேசும் போது வழியாமல் இயல்பாக பேச வேண்டும்.

பக்குவம்
வயதில் உங்களை விட பெரிய பெண்ணை ஈர்க்க முற்படும் போது, அதிக அளவில் முதிர்ச்சி மற்றும் பக்குவத்தை வெளிப்படுத்த வேண்டும். அவரிடத்தில் உங்கள் பேச்சும் நடத்தையும் உங்களின் பக்குவத்தை எடுத்துக் காட்டுவதை போல் அமைய வேண்டும்.

பிடிவாதம்
வயதில் உங்களை விட மூத்த பெண்ணை கவர என்னும் போது, நம்பிக்கை மற்றும் பிடிவாதத்துடன் முயற்சி செய்ய வேண்டும். தொழில் ரீதியாக நல்ல நிலையில் இருக்கும் பெண் சுலபமாக தோற்று போகும் ஆணை விரும்ப மாட்டார்.

தொடர்ந்து முன்னேறுங்கள்
ஆரம்ப கட்ட முயற்சிக்கு பின், அவரிடம் பேச தொடங்கி விட்ட பின்பு, ஆரம்பத்தில் உங்கள் மீதிருந்த ஆர்வம் குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நல்ல விதமாக பேசி, உங்கள் மீதுள்ள ஆர்வத்தை நீட்டிக்க செய்யுங்கள். உங்கள் முன்னாள் அனுபவங்களை பற்றி பேசுங்கள். மிகவும் அந்தரங்கமான விஷயத்தை தவிர்த்து, அவரிடம் பல சுவாரசியமான கேள்விகளை கேளுங்கள்.

நகைச்சுவை
ஸ்லாப்ஸ்டிக் வகை நகைச்சுவைக்கும் முதிர்ச்சியான நகைச்சுவைக்கும் இடையே ஒரு கோட்டை வரைந்து கொள்ளுங்கள். நீங்கள் பேசும் போது, அறிவு பூர்வமான, உங்கள் சொந்த நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்துங்கள். நகைச்சுவை என்றாலே பெண்கள் பொதுவாக விரும்புவார்கள். தேவையில்லாத உணர்வுகள் அல்லது கேவலாமான கடி ஜோக்குகளால் நிலைமையை மோசமாக்காதீர்கள். அது உங்கள் சந்திப்பின் சுவாரசியத்தை குறைத்து விடும்.

வயதை பற்றி பேசாதீர்கள்
அவரை விட வயதில் நீங்கள் குறைந்தவர். அதை அவருக்கு நினைவுப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. எப்போதுமே வயதை பற்றிய பேச்சுக்களை எடுக்காதீர்கள். அதே போல் கல்லூரி போன்றவைகளை பற்றி பேசியும் அவரை வயதை இழுக்காதீர்கள்.

உடல் ரீதியான தொடர்பு
உடல் ரீதியான நெருக்கம் ஏற்படும் தருவாயை அடையும் போது, அதனை பற்றி ஆராய்வது அவசியமான ஒன்றாகும். நீங்கள் காட்டும் நெருக்கம் பக்குவமாகவும் காதல் உணர்வுடனும் இருக்க வேண்டியது அவசியம்.

நல்ல பண்பாளனாக நடந்து கொள்ளுங்கள்
அவரை விட வயதில் குறைந்தவராக இருந்தாலும் கூட, பக்குவமில்லாமல் சிறு பிள்ளை தனமாக நடந்து கொள்ளலாம் என்றில்லை. நல்ல பண்பாளனாக நடந்து, அவரை மிகுந்த மரியாதையுடனும் அக்கறையுடனும் நடத்துங்கள். முக்கியமாக காதல் உணர்வை அழகாக வெளிக்காட்ட வேண்டும். பேச்சிலும் ஆடை அணிவதிலும் கூட ஒரு நல்ல பண்பாளனாக காட்டிக் கொள்ளுங்கள்.



Click it and Unblock the Notifications