Latest Updates
-
ஜூலை 20-ல் நடக்கும் சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது.. -
கணைய புற்றுநோயின் 7 எச்சரிக்கை அறிகுறிகளை பட்டியலிட்ட அமெரிக்க டாக்டர்! -
மணமணக்கும்.. மட்டன் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி செஞ்சு பாருங்க.. -
18 ஆண்டுகள் கழித்து சிம்ம ராசியில் ஒன்றிணையும் கேது-சுக்கிரன்: 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
சிக்கன் எடுத்தா.. இப்படி மசாலா அரைச்சு கிரேவி செய்யுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 05 ஜூலை 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கதவை தட்டப்போகுதாம் -
சுக்கிரன் சூரியன் ஆளும் ராசிக்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 5 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா தஞ்சாவூர் கொத்சு செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமாக இருக்கும் -
வார ராசிபலன் (05 July 2026-11 July 2026)- இந்த வாரம் உங்களின் ராசிக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா? -
சாணக்கிய நீதி படி இந்த குணமுள்ள பெண்ணை திருமணம் செய்யும் ஆண்கள் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாம்
ஆண்களுக்கு பெண்கள் செய்யும் சில கொடூரமான செயல்கள்!!!
அழகாகவும் நலினமாகவும் இருக்கும் பெண்ணினம், எதிர்பாலினமாக இருக்கும் ஆண்களுக்கு சில கொடூரமான செயல்களை செய்கிறார்கள்.
இவ்வாறு ஆண்களுக்கு பெண்கள் செய்யும் கொடூரமான செயல்கள் சிலவற்றை வகைப்படுத்தியுள்ளோம். இந்த செயல்களில் ஆண்களின் உணர்வுகளில் பெண்கள் எந்தளவிற்கு விளையாடுகிறார்கள் என்று பட்டியலிட்டிருக்கிறது இந்த நிறுவனம். அவை எந்த செயல்கள் என்று பார்ப்போமா?
ஆண்களைக் கவர பெண்கள் செய்யும் கிறங்கடிக்கும் தந்திரங்கள்!!!

போன் எடுக்காத பெண்கள்
எந்த சூழலிலும் பெண்கள் செய்யும் போன் அழைப்புகளை ஆண்களால் எடுக்க முடியும். ஆனால் பெண்கள் விஷயத்தில் அவர்கள் ஏதாவதொரு தவறான எண்ணைக் கொடுக்கவோ அல்லது அழைப்புகளை எடுக்காமல் விட்டு விடவோ செய்வார்கள்.

செலவு மட்டும் செய்ய...
பொதுவாகவே பாருக்கோ அல்லது கிளப்புக்கோ போக கிளம்பும் பெண்கள், தங்களுடைய பர்ஸிலிருந்து எதையும் செலவு செய்ய விரும்புவதில்லை. மாறாக, தாங்கள் பெண்கள் என்று காரணம் சொல்லி ஆண்களின் பர்ஸை காலி செய்கிறார்கள். சில பெண்கள் தங்களைத் தெரிந்து கொள்ள சில ஆண்கள் முயலும் போது, அவர்களை ஏமாற்றி பானங்களை இரக்கமும், இதயமும் இல்லாமல் வாங்கிக் கொண்டு, கொடூரமாக அனுப்பி வைக்கிறார்கள்.

டைம் பாஸ்
டீஸன்ட்டான பெண்ணாக இருந்தால், ஆணிடம் தேவையானதை எடுத்துக் கொண்டு கிளம்பி விடுவாள். மாறாக, கொடூரமான பெண்ணாக இருந்தால் புதிதாக ஒருவன் கிடைக்கும் வரை, கிடைத்திருப்பவனை சுரண்டிக் கொண்டே இருப்பார்கள். மேலும் இந்த பெண்கள் தனியாக இருப்பதையோ அல்லது யாருடனாவது தொடர்பு இல்லாமல் இருக்கவோ விரும்புவதில்லை. மாறாக, தன்னுடைய துன்பத்தை முடிவுக்கு கொண்டு வரும் ஒரு வழியாக, மற்றொருவர் வரும் வரை, கிடைத்துள்ள ஆண்களை பயன்படுத்திக் கொண்டு விடுகிறார்கள்.

உணர்வு ரீதியாக ஆண்களை பயன்படுத்துதல்
பெண்கள் அழுவதைக் காண ஆண்கள் விரும்புவதில்லை. ஆனால் இந்த விஷயத்தை தங்களுக்குத் தேவையானதைப் பெற்றுக் கொள்ள சாதகமாக பெண்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள். மேலும் பெண்கள் தாங்கள் நினைத்ததை ஆண்களிடமிருந்து பெறுவதற்கு சில பல கண்ணீர் துளிகள் போதும்.

உடல்ரீதியான வன்முறை
பெண்களை ஆண்கள் அடிப்பது மோசமான செயலாக கருதப்பட்டு வரும் வேளையில், தங்களுடைய பாய்பிரண்ட்களை அடிக்கும் பெண்கள் அதை மிகவும் சரியான செயலாக கருதுகிறார்கள். ஏனெனில், அவர்கள் திருப்பி அடிக்க மாட்டார்கள் அல்லவா! இந்த வகையான பெண்கள் எப்படிபட்ட வகையான உடல் ரீதியான வலிகளையும், ஆண்களுக்கு எந்தவித தயக்கமோ அல்லது பயமோ இல்லாமல் கொடுப்பார்கள்.

பொது இடங்களில் விமர்சனம் செய்தல்
கொடூரமான பெண்கள், ஆண்களை பொது இடங்களில் வைத்து விமர்சனம் செய்யவும் மற்றும் அவமானப்படுத்தவும் செய்கின்றனர். இதன் மூலமாக அவனை கேலிப்பொருளாக்கவும், நம்பிக்கையை குலைக்கவும் செய்கின்றனர்.

பாலுறவை நிறுத்தி விடுதல்
பெண்களால் அடிக்கடி பயன்படுத்தப்படும், பலமுறை பரிசோதிக்கப்பட்ட கொடூரமான செயலாக இது உள்ளது. பெரும்பாலான ஆண்களுக்கு செக்ஸ் என்பது சுவாசத்தைப் போல முக்கியத்துவம் வாய்ந்தது. ஆனால் பெண்கள் தங்களுக்குத் தேவையான ஒன்றைப் பெறுவதற்கு செக்ஸை நிறுத்தி வைக்கவோ அல்லது ஆண்களுக்கு தண்டனை கொடுக்கும் பொருட்டாகவோ இந்த ஆக்ரோஷமான விஷயங்களை பெண்கள் செய்வார்கள். அதுவும், ஆண்கள் மிகவும் ஆவலாக இருக்கும் போது, பெண்கள் 'நோ' சொல்வார்கள்.

தங்களுடைய ஆண்களை சோதித்தல்
நண்பர்களுடன் சேர்ந்து வெளியே செல்வதில் உறுதியாக இருக்கும் போது, உங்களுடைய கேர்ள்பிரண்ட் போன் செய்து தன்னுடன் இருக்க முடியுமா என்று கேட்பாள். இவ்வாறு அவள் கேட்பதற்கு, அவள் சும்மாவேனும் உங்களைப் பார்க்க நினைப்பதைத் தவிர குறிப்பிட்டு சொல்லும் படியாக வேறெந்த காரணமும் இருப்பதில்லை. உங்களுடைய நண்பர்களுடன் நீங்கள் வெளியே செல்லப் போக திட்டம் வைத்திருக்கிறீர்கள் என்பது அவளுக்கும் தெரியும். ஆனால் நீங்கள் உண்மையிலேயே அவளை விரும்பினால், அவளுடைய வேண்டுகோளுக்கு இணங்குவது தான் சரியான முடிவாக இருக்கும். 'நீ என்னை உண்மையாகவே விரும்பினால்' என்ற வார்த்தையுடன் அவள் கேள்வி எழுப்பினால், அது ஒரு பரிசோதனை என்பது உறுதி! அவளிடம் செல்வதை விட்டு விட்டு, வேறு ஏதாவது முடிவை நீங்கள் எடுத்தால், மிஞ்சுவது தோல்வி மட்டுமே. உறவுமுறைகளில் இவ்வாறு பரிசோதனை செய்வது கொடூரமான செயலேத் தவிர வேறெதுவும் இல்லை.

பொறாமையில் தத்தளிக்க விடுதல்
அவளை குறைவாக புகழ்ந்து பேசியதாக நினைத்தாலோ, சற்று முன் பெரியளவில் சண்டை போட்டிருந்தாலோ அல்லது உங்களுடைய முகத்தில் கவலை தோய்ந்திருப்பதை ரசிக்க வேண்டும் என்றோ நினைத்திருக்கலாம். இதில் எந்த காரணமாக இருந்தாலும் சரி, மற்ற ஆண்களிடம் சென்று வெளிப்படையாக பெண்கள் கவர்ச்சி காட்டி கண்டிப்பது, தங்களுடைய பாய்பிரண்ட்களை பொறாமையில் தத்தளிக்க வைக்க வேண்டும் என்பதற்காகத் தான்.



Click it and Unblock the Notifications