Latest Updates
-
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும்
காதலித்து திருமணம் செய்ய ஏன் தென்னிந்திய ஆண்கள் தான் சிறந்தவர்கள்?
உலகில் உள்ள ஆண்கள் அனைவருமே ஒரே மாதிரியான குணம் கொண்டவர்கள் என்று சொல்ல முடியாது. அதிலும் இந்தியாவை எடுத்துக் கொண்டால், வட இந்திய ஆண்களை விட, தென்னிந்திய ஆண்கள் தான் மிகவும் சிறந்தவர்கள். இதற்கான வட இந்திய ஆண்கள் மோசமானவர்கள் என்பதில்லை. வட இந்திய ஆண்களிடம் காதல் மற்றும் அக்கறை அளவாகத் தான் இருக்கும். ஆனால் தென்னிந்திய ஆண்களிடம் காதல், மரியாதை, மதிப்பு, அக்கறை என்று அனைத்துமே அதிகமாக இருக்கும்.
ஆண்கள் தனக்கு துணையாக வரும் பெண்ணிடம் எதிர்பார்க்கும் குணங்கள்!!!
மேலும் பெண்களுக்கு நன்கு வெள்ளையாக இருக்கம் ஆண்களை விட, சற்று கருப்பாகவும், சற்றுமுரட்டுத்தனமான தோற்றதுடன் இருக்கும் ஆண்களைத் தான் பிடிக்கும். இத்தகையவை தென்னிந்திய ஆண்களிடம் தான் இருக்கும். அதுமட்டுமின்றி, தென்னிந்திய ஆண்கள் புற அழகை விட, அக அழகைத் தான் பார்ப்பார்கள். இதுப்போன்று பல உள்ளன.
இங்கு தென்னிந்திய ஆண்களை காதலித்து மணப்பதால் கிடைக்கும் சில நன்மைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

கொலுகொலு பெண்கள்
தென்னிந்திய ஆண்களுக்கு ஒல்லியாக இருக்கும் பெண்களை விட, சற்று கொலுகொலுவென்று இருந்தால் பிடிக்கும். குறிப்பாக நீங்கள் குண்டாக இருந்தால், உடலைக் குறைக்கச் சொல்லி வற்புறுத்தவோ அல்லது வேறு துணையைத் தேடவோ மாட்டார்கள். மாறாக உங்கள் நிலைமையைப் புரிந்து உடல் எடையைக் குறைக்க துணையாக இருந்து உதவி புரிவார்கள்.

நிறம் முக்கியமல்ல
தென்னிந்திய ஆண்கள் வெள்ளையாக இருக்கும் பெண்களை சைட் அடிப்பார்களே தவிர, தனக்கு வரும் துணை நிச்சயம் வெள்ளையாகத் தான் இருக்க வேண்டுமென்று நினைக்கமாட்டார்கள். ஏனெனில் அவர்களுக்கு புற அழகை விட, அக அழகே முக்கியமானது.

குடும்ப பாங்கான பெண்கள்
தென்னிந்திய ஆண்களுக்கு ஸ்டைலாக நல்ல மாடலான ஆடைகளை அணியும் பெண்களை விட, குடும்ப பாங்கான பெண்களைத் தான் தங்கள் வாழ்க்கை துணையாக ஏற்றுக் கொள்ள விரும்புவார்கள்.

நல்ல புத்திசாலியானவர்கள்
முக்கியமான தென்னிந்திய ஆண்கள் மிகவும் புத்திசாலியானவர்கள். படிப்பில் மிகவும் சிறந்தவர்கள். அதனால் தான் உலகின் பல இடங்களில் தென்னிந்திய ஆண்களை காண முடிகிறது.

அசிங்கமாக பேசமாட்டார்கள்
தென்னிந்திய ஆண்கள் எவ்வளவு தான் கோபமாக இருந்தாலும், துணையிடம் எப்போதுமே அசிங்கமாக பேசமாட்டார்கள்.

குடும்பத்தின் முக்கியத்துவம்
வட இந்திய ஆண்களை விட, தென்னிந்திய ஆண்களுக்கு குடும்பத்தின் முக்கியத்துவம் இன்னும் அதிகமாக தெரியும். எனவே திருமணத்திற்கு பின் அவர்கள் தன் குடும்பத்தின்று அதிக முக்கியத்துவம் கொடுத்து, குடும்பத்தை சந்தோஷமாக நடத்துவார்கள்.

பாசமிக்கவர்கள்
தென்னிந்திய ஆண்கள் தன் துணைக்கு உடல்நிலை சரியில்லாவிட்டால், கொஞ்சம் கூட கவலைப்படாமல், வீட்டு வேலையை அவர்களே இழுத்துப் போட்டு செய்வார்கள்.

நன்கு சமைப்பார்கள்
குறிப்பாக தென்னிந்திய ஆண்களின் சமையல் மிகவும் சூப்பராக இருக்கும். எனவே அவர்களை மணந்து கொண்டால், அவர்களின் கையால் வாரம் ஒருமுறையாவது நல்ல சுவையான சமையலை சாப்பிடலாம்.

ஏமாற்றமாட்டார்கள்
காதலிப்பதற்கு முன் ஆண்கள் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் காதலில் விழுந்துவிட்டால், அவர்கள் தன் காதலியே தேவதை. மேலும் அவர்கள் முன் எவ்வளவு அழகான ஆண்கள் வந்தாலும், அவர்கள் தங்கள் துணையை ஏமாற்றமாட்டார்கள்.

சமாதானப்படுத்துவதில் வல்லவர்கள்
பெண்களுக்கு தாங்கள் கோபமாக இருக்கும் போது, தன் துணை வந்து சமாதானப்படுத்த வேண்டும் என்று நினைப்பார்கள். அந்த வகையில் தென்னிந்திய ஆண்கள் வல்லவர்கள். அவர்களுக்கு கோபமாக இருக்கும் தன் காதலியை எப்படி சமாதானப்படுத்துவது என்று தெரியும்.



Click it and Unblock the Notifications