Latest Updates
-
கணைய புற்றுநோயின் 7 எச்சரிக்கை அறிகுறிகளை பட்டியலிட்ட அமெரிக்க டாக்டர்! -
மணமணக்கும்.. மட்டன் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி செஞ்சு பாருங்க.. -
18 ஆண்டுகள் கழித்து சிம்ம ராசியில் ஒன்றிணையும் கேது-சுக்கிரன்: 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
சிக்கன் எடுத்தா.. இப்படி மசாலா அரைச்சு கிரேவி செய்யுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 05 ஜூலை 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கதவை தட்டப்போகுதாம் -
சுக்கிரன் சூரியன் ஆளும் ராசிக்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 5 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா தஞ்சாவூர் கொத்சு செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமாக இருக்கும் -
வார ராசிபலன் (05 July 2026-11 July 2026)- இந்த வாரம் உங்களின் ராசிக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா? -
சாணக்கிய நீதி படி இந்த குணமுள்ள பெண்ணை திருமணம் செய்யும் ஆண்கள் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாம் -
நெல்லை ஸ்டைல் தேங்காய்ப்பால் கோழி குழம்பு ரெசிபி - இந்த மாதிரி வைச்சு பாருங்க - அட்டகாசமா இருக்கும்
பெண்களே, நீங்கள் உங்களுக்காக மட்டுமே செய்து கொள்ள வேண்டிய 6 செயல்கள்!!!
பெண்களே, நீங்கள் என்ன தான் உங்கள் ஆண் துணையிடம் அளவு கடந்த அன்பு வைத்திருந்தாலும், சில விஷயங்களை உங்களுக்காகவே செய்து கொள்ள வேண்டும். அவர்களுக்காக அல்ல.
உங்கள் மனமும் உடலும் முதலில் உங்களுக்குத் தான் சொந்தம். அவற்றை நீங்கள் எவ்வாறு கட்டுக் கோப்பாக வைத்துக் கொள்கிறீர்களோ அந்த அளவுக்கு அது உங்களுக்கு நல்லது. ஜஸ்ட், ஆண்களைக் கவர்வதற்காக மட்டும் நீங்கள் சில செயல்களை செய்தால் அது உங்கள் மனதிற்கும் உடலுக்கும் கெடுதலாகப் போய்விடும்.
நீங்கள் உங்களுக்காக மட்டுமே செய்ய வேண்டிய அத்தகைய 6 செயல்களைப் பற்றிப் பார்க்கலாம்.

ஜிம்மிங்
நீங்கள் நன்றாக உடற்பயிற்சி செய்து கொள்வது உங்களுக்கும் உங்கள் உடலுக்கும் ஆரோக்கியமானதாகும். உங்கள் புறத் தோற்றத்தை ரசிப்பவனை விட, உங்கள் ஆரோக்கியத்தை விரும்புபவனே சரியான ஆண்.

வாக்சிங்
நீங்கள் அழகாக, முழுமையாக வாக்ஸ் செய்து கொண்டால் தான் உங்கள் ஆண் துணைக்குப் பிடிக்குமா? என்ன தான் அவருக்குப் பிடிக்கும் என்றாலும், உங்களுக்கு அது வசதியாக இருக்கிறதா என்பது தான் முக்கியம். உங்கள் உடல் உங்களுக்குத் தான் சொந்தம்.

ஷாப்பிங்
அதே போல் உங்களுக்குத் தேவையான உடைகளை எப்போது வாங்க வேண்டுமென்று நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும். மேலும், எந்த வகையான உடைகள் உங்களுக்குப் பிடிக்கும் என்பதையும் நீங்களே முடிவு செய்தல் நலம். நீங்கள் எந்த உடை அணிந்தாலும் உங்களவர் ரசிக்கத் தான் செய்வார்.

கிஸ்ஸிங்
உங்கள் காதலருக்கு எப்போது முத்தம் கொடுக்க வேண்டும் என்று உங்களுக்குத் தோன்றுகிறதோ, அப்போது மட்டும் கொடுங்கள். அவர் கேட்கும் நேரத்தில் எல்லாம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை.

ஷேரிங்
உங்கள் பாய் ஃபிரெண்டுடன் சேர்ந்து அவருக்குப் பிடிக்கும் டி.வி. நிகழ்ச்சிகளைப் பாருங்கள், தப்பில்லை. ஆனால் அவர் இல்லாத நேரத்திலும் அவருக்குப் பிடித்த நிகழ்ச்சிகளைத்தான் பார்க்க வேண்டுமா? தேவையில்லை. நீங்கள் இப்படிச் செய்வது அவருக்கே பிடிக்காது. கேட்டுப் பாருங்க!

குக்கிங்
சமையலறைக்குள் செல்லவே உங்களுக்குப் பிடிக்கவில்லையா? போகாதீங்க. உங்க வீட்டுக்காரர் காபி கேட்டா கூட, போய் போட்டுக் கொடுக்காதீங்க. ஆனால், உங்களுக்குக் கொஞ்சம் வென்னீர் குடிக்க வேண்டும் என்று தோன்றுகிறதா? அப்போது மட்டும் போய் வென்னீர் மட்டும் போட்டுக் கொள்ளுங்கள்!



Click it and Unblock the Notifications