Latest Updates
-
மணமணக்கும்.. மட்டன் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி செஞ்சு பாருங்க.. -
18 ஆண்டுகள் கழித்து சிம்ம ராசியில் ஒன்றிணையும் கேது-சுக்கிரன்: 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
சிக்கன் எடுத்தா.. இப்படி மசாலா அரைச்சு கிரேவி செய்யுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 05 ஜூலை 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கதவை தட்டப்போகுதாம் -
சுக்கிரன் சூரியன் ஆளும் ராசிக்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 5 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா தஞ்சாவூர் கொத்சு செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமாக இருக்கும் -
வார ராசிபலன் (05 July 2026-11 July 2026)- இந்த வாரம் உங்களின் ராசிக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா? -
சாணக்கிய நீதி படி இந்த குணமுள்ள பெண்ணை திருமணம் செய்யும் ஆண்கள் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாம் -
நெல்லை ஸ்டைல் தேங்காய்ப்பால் கோழி குழம்பு ரெசிபி - இந்த மாதிரி வைச்சு பாருங்க - அட்டகாசமா இருக்கும் -
200 ஆண்டுகளுக்கு மேல் ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆள்வதற்கு காரணமாக இருந்தது இந்த 5 விஷயங்கள்தான்
ஆண்கள் ஏமாற்றும் போது கூறும் 6 விஷயங்கள்!!!
"நிச்சயம் இது உண்மையாக இருக்கக்கூடாது" என்று தான் எண்ணுவோம். ஆனால் சில நேரம் ஆண்கள் ஏமாற்ற தான் செய்வார்கள். உடனே அதற்காக அவர்களை குறை சொல்ல ஆரம்பித்து விடக் கூடாது. சில நேரங்களில் உறவுகள் சிக்கலானதாக தான் இருக்கும். ஆனால் அதனை காரணம் காட்டி நீங்கள் விரும்பும் நபரை ஏமாற்றக்கூடாது.
ஏமாற்றும் ஆண்களை கண்டுபிடிப்பதற்கான அறிகுறிகள் என்ன? ஏமாற்றும் போது அவர்கள் ஏதாவது சொல்வார்களா அல்லது செய்வார்களா? ஏமாற்றும் அறிகுறிகளை கண்டுபிடிப்பதற்கான சில வழிகளை உறவுகளின் நிபுணர் மார்சிலீனா ஹார்டி நம்மோடு பகிர்ந்துள்ளார். அவர் கூறிய படி, ஏமாற்றும் போது ஆண்கள் கூறும் சில விஷயங்களைப் பற்றி பார்க்கலாமா?
ஏமாற்றப்படும் உறவில் உள்ளவரா நீங்கள்? அல்லது ஏமாற்றப்படும் கூட்டத்தில் நாமும் ஒருவரா என்று யோசிக்க தோன்றுகிறதா? உங்கள் கணவன் கீழ்கூறியவைகளில் எதையேனும் கூறுகிறாரா? நாங்கள் கூறியதை படிக்கும் போது, அட, அப்படியே சில ஆண்கள் இதை கூறுவார்களே என்று நீங்கள் வியக்கலாம். ஒரு வேளை, ஏமாற்றும் போது என்ன சொல்ல வேண்டும் என்ற புத்தகத்தை அவர்கள் படிப்பார்களோ என்று கூட எண்ண தோன்றும்.

அவள் வெறும் தோழியே
உங்கள் கணவன் புதிதாக ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதை நீங்கள் அறிகிறீர்கள். நீங்களாக கண்டுபிடிப்பதற்கு முன்பாக அவர் உங்களிடம் அதனை பற்றி எதையும் தெரிவிக்காமல், நீங்கள் கண்டு பிடித்து, அந்த பெண்ணை சந்திக்கலாமா என்று கேட்டு அவர் மறுக்கலாம். அதற்கு காரணம் அவர் உண்மையிலேயே தோழியாக இல்லாமல் காதலியாக இருப்பார்.

என் கைப்பேசியை தொடாதே
உங்கள் கணவனின் கைப்பேசியில் அவர் காதலி அனுப்பிய எஸ்.எம்.எஸ்-களை படிக்க கூடாது என்ற காரணத்தினால் தான் உங்களை அவர் கைப்பேசியை தொடவிடமாட்டார். மேலும் நீங்கள் கைப்பேசியை எடுக்கும் நேரம் பார்த்து புது எஸ்.எம்.எஸ். வந்தாலும் மாட்டிக்கொள்வார் அல்லவா? ஏன் அவர் காதலியின் படங்களை கூட தன் கைப்பேசியில் வைத்திருக்கலாம்.

நீ என்னை ஏமாற்றுகிறாய், ஆமாம் தானே?
ஆம், ஏமாற்றும் ஆண்கள் தங்களின் மனைவியின் மீது அந்த பழியை சுமத்துவார்கள். ஏன்? 'நாம் ஏமாற்றும் போது, ஏன் அவள் நம்மை ஏமாற்றக் கூடாது' என்ற எண்ணமே அதற்கு காரணம்.

நீ சரியில்லை
திடீரென நீங்கள் செய்யும் அனைத்திலும் ஏதாவது குறை கூறுகிறாரா உங்கள் கணவர்? அவருக்கு எண்ண ஆயிற்று என உங்களுக்கு விளங்கவில்லையா? அவர் உங்களை உண்மையிலேயே விரும்பினால் அல்லது நீங்கள் அவருக்கு நல்லபடியாக நடந்து கொள்கிறீர்கள் என அவர் நினைத்தால் கண்டிப்பாக உங்களை அவர் ஏமாற்ற மாட்டார். அதனால் நீங்கள் அவருக்கு ஏற்றவர் அல்ல என்ற நம்பிக்கையை அவரே உருவாக்கி கொண்டு, வேறு ஒரு பெண்ணை நாட நாட தொடங்கி விடுவார். ஆனால் உண்மையேலே நீங்களே சிறந்தவராக இருப்பீர்கள்.

நானே துவைத்துக் கொள்வேன்
உங்களுக்காக அவர் உங்கள் வேலையில் உதவியாக உள்ளார் என்று முதலில் நீங்கள் நினைத்து சந்தோஷப்படுவீர்கள். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, தன் காதலியுடனான உறவை வெளிக்காட்டும் தன்னுடைய பாழான பேண்ட், பெர்ப்யூம் மனம் அல்லது இன்ன பிற தடயங்களை அழிக்கவே அவர் இவ்வாறு ஈடுபடுகிறார்.

அலுவலகத்தில் வேலை இருப்பதால் நேரம் ஆகும்
திடீரென அவருக்கு அலுவலகத்தில் அதிக வேலை வந்து விடும். எப்போதும் போல வீட்டுக்கு சரியான நேரத்தில் வர மாட்டார். காரணம், உண்மையிலேயே வேலைப்பளு அல்ல. மாறாக தன் காதலியை சந்திக்க சென்று விடுவார். இப்படி செய்வதால் உங்களிடம் இருந்து தப்பித்து கொள்ளலாம் அல்லவா?



Click it and Unblock the Notifications