Latest Updates
-
பெங்களூரு ஸ்பெஷல் தண்ணி சட்னி - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 19 மே 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மோசமான நாளாக இருக்குமாம் -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு நிதி இழப்பு ஏற்பட வாய்ப்பிருக்கு.. உஷார்.. -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சத்தான மிளகு சீரக அடை ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க, வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
இதுல உங்க கட்டைவிரல் எந்த டைப்-ன்னு சொல்லுங்க.. உங்க உண்மையான குணத்தை சொல்றோம்.. -
வெயில் காலத்தில் வீட்டில் ஏசி சண்டையா? இந்த சின்ன மாற்றங்கள் உங்கள் குடும்ப அமைதியை காக்கும்! -
சூரியன் ரிஷப ராசியில் இருப்பதால் இந்த 3 ராசிக்காரர்களுக்கு செலவுகளும், தோல்விகளும் தேடிவரப் போகுதாம் -
1 கப் மீல்மேக்கர் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் செய்யுங்க.. வேற லெவல்-ல இருக்கும்.. -
டேட்டிங் ஆப் மூலம் டேட்டிங் செல்கிறீர்களா? இந்த கஃபேக்களில் நடக்கும் 'ஹனி டிராப்' மோசடியில் சிக்காமல் இருக்க இதை உடனே தெரிஞ்சுக்கோங்க!
நீங்கள் திருமணத்திற்கு தயாரில்லை என்பதை வெளிப்படுத்தும் 12 அறிகுறிகள்!!!
இந்திய சமுதாயத்தில் இன்னும் திருமணமாகாத நீங்கள் ஒரு திருமண விழாவிற்கு செல்கையில் அங்கே பலரும் உங்களை பார்த்து கேட்கும் ஒரு கேள்வி - உங்க கல்யாணம் எப்போ? திருமணத்திற்கு நீங்கள் இன்னும் தயாராக இல்லையென்றால், இந்த கேள்வி கண்டிப்பாக உங்களை எரிச்சலடையச் செய்யும். அந்த திருமண விழாவில் உங்கள் சொந்தங்கள் அனைவரும் உங்களிடம் இதை கேட்கையில் உங்களுக்கு கோபம் மூக்கின் மேல் வரும்.
திருமணமாக வேண்டிய சரியான வயதை பழைய தலைமுறையினர் புரிந்து கொள்வதில்லை. இன்றைய கால கட்டத்தில், திருமணம் செய்வதற்கான சரியான காலம் வரை இளைய சமுதாயனத்தினர் பொறுமை காக்கின்றனர். ஆனால் நீங்கள் திருமணத்திற்கு தயாரா இல்லையா என்றா குழப்பம் உங்களில் பல பேருக்கு இருக்கும் தானே?
நீங்கள் திருமணத்திற்கு தயாராக இல்லை என்பதை சுட்டிக்காட்டும் 12 அறிகுறிகளைப் பற்றி இங்கே நாங்கள் விளக்கியுள்ளோம். திருமணத்திற்கு தயாராகாத இந்த அறிகுறிகளை தெரிந்து கொள்ளுங்கள்.
உங்கள் கதவை பிற வாய்ப்புகள் தட்டும் போது, திருமணம் மட்டுமே சந்தோஷத்தை தரும் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். சரி, திருமணத்திற்கு நீங்கள் தயார் இல்லை என்பதை சுட்டிக்காட்டும் 12 அறிகுறிகளை இப்போது பார்க்கலாமா...?

திருமண பந்தத்தை விட திருமண நாலுக்கே முக்கியத்துவம்
இன்றைய கால கட்டத்தில் பல ஜோடிகளும், திருமண ஏற்பாடுகள் மற்றும் அந்த நாளில் அழகாக ஜொலிப்பதில் மட்டுமே கவனம் செலுத்துகின்றனர். ஆனால் திருமண பந்தத்தில் அந்த முக்கியத்துவத்தை அளிக்க மறந்து விடுகின்றனர். திருமணத்திற்கு நீங்கள் தயார் இல்லை என்பதற்கு இது ஒரு அறிகுறியாகும்.

இந்த உறவின் மீது இன்னும் நம்பிக்கை வராமை
திருமணத்திற்கு நீங்கள் ஏன் தயாராக இல்லை என்பது குப்பமாக உள்ளதா? இந்த உறவின் மீது இன்னமும் உங்களுக்கு நம்பிக்கை வந்திருக்காது. அதனைப் பற்றி நினைத்தாலே பயம் தொற்றிக் கொள்ளும். அதனால் நம்பிக்கை இல்லாமல் ஒருவருடன் வாழ்க்கையை கழிக்க முடியுமா?

பந்தத்தின் மீது பயம்
பொதுவாகவே ஒரு பந்தத்திற்குள் நுழையும் போது பயம் ஏற்படுவது இயற்கையே; குறிப்பாக ஆண்களுக்கு. உங்களுக்கு அவ்வகை பயம் இருந்தால், இந்த திருமண பந்தம் நீண்ட நாட்கள் நீடிக்காது என்ற எண்ணம் ஆழமாக பதிந்துவிடும்.

நீங்கள் உடன்படுபவர் அல்ல
எந்த ஒரு விஷயத்திற்காகவும் விட்டு கொடுக்காமல், எதற்கும் உடன்படாவராக இருப்பவரா நீங்கள். அப்படியானால் திருமணத்திற்கு நீங்கள் இன்னும் தயாராக இல்லை என்பதற்கு இதுவும் ஒரு அறிகுறியே.

மனதில் வேறு ஏதாவது இருக்கும்
உங்களுக்கென்று கணவன், மனைவி, குடும்பம் என்ற எண்ணத்தை தவிர வேறு சில விஷயங்கள் மனதில் உள்ளதா? அப்படியானால் கண்டிப்பாக நீங்கள் திருமணத்திற்கு தயாராக இல்லை.

உங்கள் தொழில்/வேலையை திருமணம் செய்தல்
உங்கள் தொழில்/வேலையை திருமணம் செய்து, அதோடு உங்கள் உங்கள் குடும்ப வாழ்க்கைக்கு முற்று புள்ளி வைத்துள்ளீர்களா? மடிக்கணினி மற்றும் வேலையுடன் ஒன்றி போய் இருப்பவர்களுக்கு திருமணம் மீது நாட்டம் வருவது கஷ்டமே.

தனிமை விரும்பி
உங்களுக்கு உணவருந்த, தூங்க மற்றும் அனைத்து வேலைகளையும் தனியாக செய்யவே விருப்பமா? அப்படியானால் கண்டிப்பாக நீங்கள் திருமணத்திற்கு தயாராக இல்லை என்பதற்கான 12 அறிகுறிகளில் இதுவும் ஒன்றாகும்.

உங்களுக்கான இடம் சூறையாடப்படும்
உங்களுக்கு திருமணம் ஆகி விட்டால், உங்களுக்கென நேரம் செலவழிப்பது குறைந்து விடும். காரணம் உங்களுடன் இருப்பவர்களுக்காக உங்கள் நேரத்தை செலவழிக்க வேண்டி வரும். அதனால் உங்கள் நேரத்தை இழக்க நீங்கள் விரும்பவில்லை என்றால், நீங்கள் இப்போதைக்கு திருமணத்திற்கு தயாராக இல்லை என்பதை குறிக்கும்.

பகிர்தலில் பிரச்சனை
உங்கள் படுக்கை மற்றும் எண்ணங்களை பகிர்ந்து கொள்ள உங்களுக்கு விருப்பம் இல்லையா? அப்படியானால் ஒரு துணையுடன் கை கோர்த்து நடப்பது உங்கள் தோது படாது.

அளவுக்கு அதிகமான பொறுப்பு
சில பேருக்கு அளவுக்கு அதிகமான பொறுப்பை ஏற்றுக் கொள்ள பிடிப்பதில்லை. திருமணம் என்பதும் மிகப்பெரிய பொறுப்பு. நீங்கள் அதற்கு தயாராக இல்லையென்றால், கண்டிப்பாக திருமணத்திற்கும் நீங்கள் தயாராக இல்லையே.

குழந்தை பெரிய விஷயமாக மாறும் போது
குழந்தைகள்... குழந்தைகள்... குழந்தைகள்... - இது காதலில் இருக்கும் தம்பதிகளை சில நேரம் பயமுறுத்தும். அதனால் திருமணத்தை பற்றி யோசிக்கவும் பயம் ஏற்படும். திருமணத்திற்கு பிறகு குழந்தை பெற்றுக் கொள்வதை சிரமமாக நினைத்தால், திருமணத்திற்கு நீங்கள் இப்போது தயாராக இல்லை என்பதற்கு இதுவும் ஒரு அறிகுறியே.

நிதி பிரச்சனைகள்
நிதி சுமைகள் இருக்கும் காரணத்தினால், பல பேர் திருமணத்திற்கு பெரிதும் யோசிக்கின்றனர். நிதி நிலைமை சரியில்லாமல் இருப்பதால், திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்த சிலர் தயாராக இருப்பதில்லை.



Click it and Unblock the Notifications