ஆண்கள் பெண்களிடம் சொல்லத் தயங்கும் 10 விஷயங்கள்!!!

By: Boopathi Lakshmanan
Subscribe to Boldsky

எந்த ஒரு உறவாக இருந்தாலும் நிறைய தருணங்களில் ஆண்கள் ஏதேனும் ஒரு காரியத்தை பெண்களிடம் மறைத்து விடுகின்றனர். இது இயல்பு தான். ஆனால் இப்படி மறைத்த காரியம் அவர்களின் துணைவிக்கோ அல்லது காதலிக்கோ தெரியவந்தால் என்ன செய்வது? இந்த இக்கட்டான தருணங்களில் ஆண்கள் ஏதேனும் ஒரு பொய்யை கூறி தப்பிக்க முயற்சி செய்வார்கள். பல வகை காரணங்களால் பெண்களிடம் உண்மையை மறைத்து விடுவார்கள். பொய்யான புகழ்ச்சியையோ அல்லது தங்கள் பழைய துணையை பற்றிய விஷயங்களையோ ஆண்களால் வெளிப்படையாக சொல்ல முடிவதில்லை.

பெண்கள் ஆண்களிடமிருந்து மறைக்க வேண்டிய விஷயங்கள் இதுதான்...

சில சமயங்களில் ஒரு விருந்திற்கு செல்லும் போதோ அல்லது வேறு இடங்களுக்கு செல்லும் போதோ அவர்களுடைய துணைவிகள் அணியும் ஆடைகள் அவர்களுக்கு பிடிக்காமல் இருக்கலாம் அல்லது அவர்கள் செல்லும் இடத்திற்கு ஏற்ப அவர்கள் ஆடை அணியாமல் இருக்கலாம். இத்தகைய தருணங்களில் ஒரு சில ஆண்கள் தான் உண்மையை வெளிப்படையாக சொல்வார்கள். மற்றவர்கள் எதையும் சொல்லாமலோ அல்லது விருப்பமே இல்லாமல் பாராட்டி விட்டோ சென்று விடுவார்கள். ஒருவேளை அவள் திட்டி விட்டால் என்ன செய்வது என்று எண்ணியும், நாம் ஏதாவது சொன்னால் மேலும் சிறிது நேரம் இதில் செலவு செய்வாள் என்று எண்ணியும் அவளிடம் உண்மையை மறைத்து விடுவார்கள்.

எப்போதுமே பெண்கள் வெளிப்படுத்தாத 7 அதிர்ச்சியூட்டும் ரகசியங்கள்!

அவர்களின் துணைவியை விட மிக அழகான மற்றும் மணதை கவரும் பெண்களை எந்த ஆணாவது சந்திக்க நேர்ந்தால் அவர்களால் தப்பித் தவறி கூட அவர்களின் அழகைப் பற்றி வர்ணிக்க முடியாது. அப்படி சொல்லிவிட்டால் ஏதேனும் தேவையற்ற சண்டை சச்சரவு வந்து விடும் என்ற பயத்திலும் தங்களின் துணைவி அவர் மேல் கோபப்படக் கூடும் என்ற எண்ணத்தையும் ஆண்கள் கொண்டிருப்பார்கள். மற்ற விஷயங்களான வேறு பெண்களுடன் வெளியே சென்ற விஷயங்கள் மற்றும் யாருக்கும் தெரியாமல் செய்த அந்தரங்க காரியங்களை ஆண்கள் சொல்ல மறுக்கின்றனர். இத்தகைய விஷயங்களை வெளிப்படையாக சொல்ல பொதுவாக எந்த ஆண் மகனும் விரும்புவது கிடையாது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சம்பளத்தை மறைப்பது

சம்பளத்தை மறைப்பது

சம்பளம் பற்றிய எந்த கேள்வியாக இருந்தாலும் ஆண்கள் மறைக்க நேர்வதுண்டு. அவர்கள் பெண்ணின் சம்பளத்தை விட இவர்களின் சம்பளம் குறைவாக இருந்தால் இத்தகைய காரியங்களை செய்வார்கள்.

ஓரின சேர்க்கை கேள்விகள்

ஓரின சேர்க்கை கேள்விகள்

இத்தகைய கேள்விகளை பெண்கள் அறவே வெறுப்பதுண்டு. அவர்கள் அப்படிப்பட்ட நபராக இல்லாவிட்டாலும் இத்தகைய கேள்விகளுக்கு பதில் கூறுவது பற்றி ஆண்களுக்கு சங்கடம் ஏற்படுகின்றது. ஏதேனும் மழுப்பும் வகையில் பதிலை சொல்லி இத்தகைய கேள்விகளை ஆண்கள் தவிர்த்து விடுவார்கள்.

பணியிடத்தில் பதவி

பணியிடத்தில் பதவி

இதுவும் சம்பளம் போலத் தான். இதைப் பற்றி எதையும் அவர்கள் கூற ஆண்கள் மறுக்கின்றனர். பொதுவாக பெண்கள் இதை பற்றி தெரிந்து கொள்ள மிகவும் விரும்புவார்கள். ஆனால் ஒரு சிலர் மட்டும் இதை பற்றி அதிகம் விவாதிக்க விரும்ப மாட்டார்கள்.

படிக்கும் பழக்கம்

படிக்கும் பழக்கம்

எல்லா ஆண்களுக்கும் மர்மக் கதைகளும், சாகசக் கதைகளும் பிடிப்பது கிடையாது. அவர்கள் படிக்கும் மற்றும் படித்ததில் பிடித்த விஷயங்களை கூட மற்றவரிடம் கூற விரும்புவதில்லை. முக்கியமாக காதல் கதைகள் மற்றும் பெண்கள் எழுதிய புத்தகங்களை படிப்பவர்களும் இதை பற்றிய தகவல்களை மற்றவர்களிடமும் அவர்களின் துணைவியர்களிடமும் கூற தயங்குகின்றனர்.

பெண்களுடன் பழகுவது

பெண்களுடன் பழகுவது

ஒரு ஆண் மிகவும் பயப்படும் மற்றும் மறைக்கும் காரியம் என்ன தெரியுமா? அவர்கள் மற்ற பெண்களிடம் பழகுவதை தான்! அவர்களுக்கு பிடித்த நடிகையாக இருந்தாலும் சரி அல்லது அலுவலகத்தில் மற்றும் பப் ஆகிய இடங்களில் அழகான மற்றும் நன்கு பேசி பழகும் பெண்களிடம் அனைவரும் பழகுவது இயற்கையாகும். ஆனால், பொதுவாகவே ஆண்கள் தங்களின் பெண் துணையிடம் இதைப்பற்றி பேச விரும்புவதில்லை.

துணைவரை புகழ்வது

துணைவரை புகழ்வது

'நீ மிகவும் அழகாய் இருக்கிறாய்' என்று நிறைய ஆண்கள் தங்கள் மனைவியிடம் அதிக தடவை கூறுவார்கள். வேறு எதையும் பெரிதாக கூறுவதில்லை. அவர்கள் நிறைய முறை இவ்வாறு சொல்லி வந்தாலும், புகழ்ச்சி அதிகமாக இருப்பதை ஆண்கள் விரும்புவதில்லை.

நிலையான கவனம்

நிலையான கவனம்

ஆண்கள் பொதுவாக அமைதியையும், நிசப்தத்தையும் கடைப்பிடிப்பவர்களாக இருப்பார்கள். பெண்களுக்கு தங்களுடன் எப்போதும் பேசிக் கொண்டே இருக்கும் துணைவரை தான் அதிகம் பிடிக்கிறது. ஆகையால் அவ்வப்போது தங்கள் கணவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டோ அல்லது குறுஞ்செய்திகள் அனுப்பிக் கொண்டோ இருப்பார்கள். ஆனால் ஆண்களுக்கு இதில் விருப்பம் இருப்பதில்லை. மேலும், இதில் விருப்பமில்லை என்று கூறுவதிலும் விருப்பமில்லை.

பழைய துணைவி அல்லது காதலி பற்றிய கதைகள்

பழைய துணைவி அல்லது காதலி பற்றிய கதைகள்

ஆண்கள் பொதுவாக அவர்களின் பழைய வாழ்க்கையையும் அதை பற்றிய ரகசியங்களையும் கூற விரும்புவதில்லை. அவர்களது புதிய மனைவியுடன் வாழ்வை துவங்கும் போது இதை பற்றி எல்லாம் பேச விரும்புவதில்லை. இதன் மூலம் தங்களுடைய புதிய துணையை அவர்கள் சங்கடப்படுத்த விரும்புவதில்லை. இத்தகைய கதைகளை பெண்கள் தங்கள் ஆணிடம் எவ்வளவு கேட்டாலும் அறிய முடிவதில்லை.

ஏற்றுக் கொள்வதில்லை

ஏற்றுக் கொள்வதில்லை

ஆண்களை விட பெண்கள் பலவீனமானவர்களாக இருந்தாலும் உறவு என்று வரும் போது அவர்கள் தான் முன்னணியில் இருப்பார்கள். இப்படி செய்யும் போது ஆண்கள் அவர்கள் கூறும் காரியம் பிடித்திருந்தாலும் செய்ய மறுக்கின்றனர். உதாரணமாக ஒரு நாய் குட்டியை வாங்க வேண்டும் என்று துணைவி கூறினால் ஆண்கள் அதை வாங்கி தருவதற்கு தயங்கவோ அல்லது மறுக்கவோ செய்வார்கள்.

கணக்கு

கணக்கு

தாங்கள் பழகிய பெண்களை பற்றியும், அந்தரங்க உறவு கொண்ட பெண்களை பற்றியும் ஆண்கள் சொல்ல விரும்புவதில்லை. இது அவர்களுடைய 'தனிப்பட்ட விஷயம்'. எனவே அவர்களுடைய துணைவியர்கள் எவ்வளவு தான் கட்டாயப்படுத்தி கேட்டாலும் அவர்கள் எதுவும் சொல்ல மாட்டார்கள்.

இதுப்போன்று சுவாரஸ்யமான வேறு தகவல்களைப் பெற எங்கள் ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்து தொடர்பில் இருங்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

10 Things Men Hesitate To Tell Women

There are lot of things men hesitate to tell women due to various reasons. It may be a fake compliment or a lie about their ex, there are several things that men in common hesitate to express or reveal to their partners.
Story first published: Monday, January 6, 2014, 22:21 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter