Latest Updates
-
இட்லி உருவான வரலாறு என்ன? இட்லியின் தலைநகரம் என்று அழைக்கப்படும் ஊர் எது தெரியுமா? -
கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைக்கணுமா? இந்த வாஸ்து செடிகள் இருந்தா பணமும் அதிர்ஷ்டமும் தேடி வரும்! -
செஃப் தீனாவின் பச்சை சுண்டக்காய் குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
கேரளா மாம்பழ புளிசேரி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, சாதத்தோட சாப்பிட ஜம்முனு இருக்கும் -
சியா விதை Vs சப்ஜா விதை - கோடையில் இவற்றில் சிறந்தது எது? விளக்கும் டாக்டர்! -
மணி பிளாண்ட் செடியை இந்த திசையில் வச்சிருக்கீங்களா? பணவரவு குறைய இதுதான் முக்கிய காரணமா? -
சாணக்கிய நீதி கூறும் வெற்றிக்கான 3 தாரக மந்திரங்கள் என்னென்ன தெரியுமா? நீங்களும் ஃபாலோ பண்ணுங்க -
2 ஆண்டுகள் கழித்து செவ்வாய் உருவாக்கிய ருச்சக ராஜயோகம்: ஜூன் 21 வரை இந்த 3 ராசிக்கு பணமும்,வெற்றியும் குவியும் -
1/2 கப் பச்சை பயறு இருந்தா.. காலையில் இட்லி, தோசைக்கு இப்படி சட்னி செய்யுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 18 மே 2026: இன்று இந்த 5 ராசிக்காரங்களுக்கு கேட்ட வரம் கிடைக்கும் நாளாக இருக்குமாம்
பில் உன்னுடையது பேச்சு என்னுடையது.. தவறான டேட்டிங்குக்கான அறிகுறியாம் இது!
உறவுகள் என்பது ஆயுட்கால பொறுப்பு. அது வாழ்க்கை துணை என்று வரும் போது, அது இன்னமும் இன்றியமையாததாக விளங்குகிறது. நீங்கள் சரியான நபருடன் தான் வாழப் போகிறீர்கள் என்பதை உறுதி செய்வது மிகவும் முக்கியம். உங்களை புரிந்து, காதலித்து, அக்கறை செலுத்தும் பெண்ணிடம் ஏற்பட்டுள்ள உறவு நீடித்து நிலைக்கும்.
அதனால் நீங்கள் சந்தோஷத்துடனும் நிம்மதியுடனும் வாழ்நாள் முழுவதும் வாழ்வீர்கள். ஆனால் நீங்கள் டேட்டிங் செய்யும் பெண் தான் உங்கள் வாழ்நாள் முழுவதும் உங்கள் உடன் வருவார் என்று எப்படி கூற முடியும்? சரி நிறைவு என்ற பெரிய கேள்விக்கு, நடைமுறை ரீதியான பயனுள்ள பதில்களால் தான் விடை காண முடியும்.
இதுப்போன்று வேறு: கேர்ள் பிரண்ட்டை கைவிடுவதற்கான சில காரணங்கள்!!!
விருப்பு வெறுப்புகளை ஓரம் கட்டி விட்டு, உறவுகளைப் பற்றி ஆழமாக ஆய்வு செய்யும் போது தான், உங்கள் பிரச்சனை தீரும். தனிமையில் வாழ்வது கொடுமையானது. ஆனால் உங்களுக்கு பொருத்தமில்லாத தவறான உறவோடு வாழ்வது அதை விட பெரிய நரகம். நீங்கள் அப்படி உங்களுக்கு பொருத்தமில்லாத பெண்ணுடன் டேட்டிங் செய்கிறீர்கள் என்பதற்கான அறிகுறிகளை பற்றி தெரிந்து கொள்ள கீழ் கூறிய பொதுவான சிறப்புக்கூறுகளை படியுங்கள்.

அளவுக்கு அதிகமாக பொசசிவ்வாக இருத்தல்
ஒரு உறவில் பொசசிவ்வாக இருப்பது சற்று இயற்கையான ஒன்று தான். இப்படி தன்னை ஆழமாக நேசிப்பதை ஒவ்வொரு ஆணும் விரும்பவே செய்வான். ஆனால் அதுவே அவள் அளவுக்கு அதிகமான பொசசிவ் தன்மையுடன் இருந்தால், நீங்கள் உங்களுக்கு பொருத்தமில்லாத பெண்ணை தேர்ந்தெடுத்ததற்கான முக்கியமான அறிகுறி இது.

நீங்கள் நீங்களாகவே இருக்க முடிவதில்லை
சில நேரங்களில், அவளின் எதிர்பார்ப்பையும் தேவையையும் பூர்த்தி செய்ய, நீங்கள் ஒரு முகமுடி அணிந்து, உங்கள் இயல்பை மறைக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுவீர்கள். கவனமாக இருங்கள். ஏனென்றால் நீங்கள் உங்களுக்கு பொருத்தமில்லாத பெண்ணுடன் உறவு வைத்துள்ளீர்கள் என்பதை எடுத்துக் காட்டும் மற்றொரு அறிகுறி இது.

சாக்கு போக்கு தேடுவீர்கள்
உங்களுக்கு பொருத்தமில்லாத பெண்ணுடன் டேட்டிங் செய்கிறீர்கள் என்பதற்கு உங்கள் மனப்பான்மையே மற்றொரு அறிகுறியாக விளங்குகிறது. சற்று பின்னோக்கி சென்று, அவள் தான் சிறந்தவள் என்று நீங்கள் நினைக்க, எத்தனை முறை சாக்கு போக்குகள் தேடியிருப்பீர்கள் என்பதை யோசித்து பாருங்கள்.

உங்கள் குடும்பத்தின் மீது அக்கறை கிடையாது
உங்கள் காதலி, உங்கள் குடும்பத்தை பற்றியும் குடும்ப தகவல்களை பற்றியும் தெரிந்து கொள்ள போதிய அக்கறையை செலுத்தவில்லை என்றால், உங்கள் குடும்பத்திற்கு என்றுமே ஒத்து வரமாட்டாள். இதுவும் உங்களுக்கு பொருத்தமில்லாத பெண்ணை டேட்டிங் செய்கிறீர்கள் என்பதற்கான மற்றொரு அறிகுறி.

நண்பர்களுடன் இருப்பதே மகிழ்ச்சியை அளிக்கிறதா?
அவளுடன் நேரத்தை செலவழிக்காமல் தடுக்க, சாக்கு போக்கு தேடுகிறீர்களா? அவளுடன் இருப்பதை விட, உங்கள் நண்பர்களுடன் இருப்பதை தான் நீங்கள் விரும்புகிறீர்களா? உங்களுக்கு பொருத்தமில்லாத பெண்ணுடன் இருக்கிறீர்கள் என்பதை உணர்த்தும் இன்னொரு அறிகுறி இது.

பில் உன்னுடையது
பில்களை ஆண்கள் கட்டுவது ஏற்றுக்கொள்ள கூடிய ஒன்று தான். ஆனால் நீங்கள் எவ்வளவு செலவு செய்கிறீர்கள் என்பதில் அவள் அக்கறையே காட்டிக் கொள்வதில்லை என்றால், இது சரியான உறவு தானா என்பதை யோசிக்கும் நேரம் இது. அதனால் இதுவும் அதற்கான ஒரு அறிகுறியாக விளங்குகிறது.

முக்கியமான விவாதங்களை நீங்கள் தவிர்ப்பது
அவளின் அழகிய ஆடை, லிப்ஸ்டிக் மற்றும் புது சிகை அலங்காரம் போன்ற பாராட்டுக்களில் தான் அவளின் நாட்டம் உள்ளதா? அப்படியானால் உங்கள் வாழ்க்கைக்கு அவள் ஏற்றவளாக இருப்பாளா என்பதில் சந்தேகம் எழுவது ஒன்றும் ஆச்சரியம் இல்லை.

ஆளுமையுடன் இருக்கிறாளா?
உங்கள் காதலி, ஏற்கனவே வடிவமைக்கப்பட்ட கட்டளைகளால் உங்களை கட்டி போட்டுள்ளாரா? அப்படியானால் நீங்கள் விரும்பியதை நினைக்கவும், செய்யவும் உங்களுக்கு வாய்ப்பே கிடைக்காது. உங்கள் காதலி உங்கள் மீது ஆளுமையை செலுத்தினால், இது ஒரு தவறான உறவு என்பதை உணர்த்தும் அறிகுறி இது.

ஒன்றிற்கு மேற்பட்ட முன்னாள் காதல்கள்
உங்கள் காதலிக்கு ஒன்றிற்கு மேற்பட்ட முன்னாள் காதல்கள் இருந்தால், கவனமாக இருங்கள். ஏனென்றால், பத்தோடு பதினொன்றாக, அந்த பட்டியலில் அடுத்து இடம் பெறுபவர் நீங்கலாக கூட இருக்கலாம். உங்கள் உறவின் மீது அவர் போதிய அக்கறையை எடுத்துக் கொள்ளவில்லை என்றால், உங்களுக்கு பொருத்தமில்லாத பெண்ணை தேர்ந்தெடுத்ததற்கான மற்றொரு அறிகுறி இது.



Click it and Unblock the Notifications