Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
பெண்கள் ஆண்களிடமிருந்து மறைக்க வேண்டிய விஷயங்கள் இதுதான்...
ஆண்களே ஜாக்கிரதை! உங்கள் காதலி பொய் பேசுவதில் சிறந்தவராக இருக்கலாம்;!! அவளது அன்பை நிரூபிக்க பல பொய்களை உங்களிடம் கூறலாம். நீங்கள் புத்திசாலியாக இருந்தால் அவள் கூறும் பொய்களை எளிதில் கண்டுபிடிக்கலாம். ஒரு பெண்ணின் உண்மைகளை கண்டறிய நீங்கள் முற்பட்டால் அவை ரகசியமாகவே இருக்கும். அவள் மனதிற்குள் பல விஷயங்கள் அடங்கி இருக்கும். அதை நாம் தெரிந்து கொள்ளவோ அல்லது எட்டிப் பார்க்கவோ முற்பட்டால் அது நமக்கு மிகுந்த அதிர்ச்சியை உண்டாக்கும்.
பொதுவாக ஒரு பெண்ணின் மனதும் இதயமும் ஒரே காரியத்தை செய்வதில்லை அல்லது ஒத்துக் கொள்வதில்லை. இதனால் அதை மறைக்க வேண்டிய சூழல் ஏற்படுகின்றது. இத்தகைய விஷயங்களை பற்றி அவளிடம் மூச்சுக்காற்றை கூட வாங்க முடியாது. அது அவள் மனதிலேயே தங்கி விடும். இச்செயல் அவளின் பயத்தின் காரணமாக அல்ல, மாறாக அவளுக்கு தனிப்பட்ட சுதந்ததிரம் தேவைப்படுகின்றது.
இதுப்போன்று வேறு ஏதாவது படிக்க: ஆண்களால் சகித்துக் கொள்ள முடியாத 8 விஷயங்கள்!!!
பொதுவாகவே ஒரு பெண்ணால் அவளின் அன்பையும், அக்கறையையும் எப்போதும் கொடுக்க முடியும். ஆனால் சில விஷயங்களை அவள் வெளிப்படுத்த மறுத்து விடுவாள். உங்களது கண்களை பார்த்து அவளின் வாழ்வாதாரம் நீங்கள் என்றும் கூற நேரும். ஆனால் அவளின் சில செயல்கள் மூலம் அவளின் இதயத்தில் உள்ள சின்ன சின்ன விஷயங்களை நாம் அறிந்துக்கொள்ள முடியும். நீங்கள் உங்கள் காதலியை உண்மையாக விரும்பினால், அவள் எதை எல்லாம் மறைக்கிறாள்; என்பதையும் அறிந்து கொள்வீர்கள்.

பாதுகாப்பு இல்லாத உணர்வு
உறவின் மிக முக்கியமான அம்சம் ஒருவர் மற்றொருவரோடு இருக்கும் போது பாதுகாப்பாக உணர்வது தான். இதுவே நல்ல உறவிற்கு அடையாளம். ஒரு பெண் தனது பழைய காதலரை பற்றி கூறும் போது எந்த ஒரு ஆணுக்கும் தோன்றும் எண்ணம், தாம் அவளது பழைய பாய் ஃபரெண்ட்டை விட நன்றாக உள்ளோமா என்று யோசிப்பது தான். இப்படிப்பட்ட ஒப்பிட்டுப் பார்க்கும் செயல்கள் பெண்களுக்கு பிடிப்பதில்லை. ஆகையால் இவற்றை கூறாமல் மறைத்து விடுகின்றார்கள். அவர்களது தற்போதைய காதல் நல்ல பரஸ்பர புரிதலோடு இருக்க வேண்டுமென்றால், இத்தகைய பேச்சுக்களை மறைப்பதே நல்லது.
முக்கியத்துவம்
பொதுவாக சில பெண்கள் நிறைய விஷயங்களை மிக சுவாரஸ்யமாக சொல்வார்கள். இவ்வாறு செய்வது அவர்களின் உறவை மையப்படுத்தி ஏதும் இருக்காது. அதுமட்டுமல்லாமல் அவர்கள் மறைக்க வேண்டிய காரியங்களை எப்படியாவது மறைத்து விடுவார்கள். எப்படி இருந்தாலும் அதை நிச்சயம் அறிந்து கொள்ள வேண்டும் என்று நீங்கள் எண்ணும் போது பெரும் அதிர்ச்சிக்கு தயாராக இருங்கள்!
அழகாய் இருங்கள்
எந்த ஒரு பெண்ணும் தனது காதலரின் முன் எப்போதும் அழகாக இருக்க வேண்டும் என்று எண்ணுவார்கள். அது சிறிது கடினம் தான். ஒரு சிறிய மேக்-அப் கிட்டை கையுடன் கொண்டு செல்லுங்கள். ஒரு சில விஷயங்களை ஆணிடமிருந்து மறைப்பது தவறொன்றும் இல்லை. அது நிச்சயம் உதவியாக இருக்கும். எப்போதும் அழகாக இருப்பது தனது காதலரை தன்னை விட்டு விலகாமல் இருக்கவும், பிற பெண்களை பார்க்க விடாமல் இருக்கவும் செய்யும். இது ஒரு நல்ல உறவை மேம்படுத்தும் ஆலோசனை தானே?
பழைய காதலர் பற்றிய கதைகளை விட்டு விடுங்கள்
உங்களது பழைய காதலர் பற்றி கூறுவது முறையானது. ஆனால் அது சம்மந்தமான கதைகளை கூறாமல்; இருப்பது நல்லது. ஒரு சில சமயம் தற்போது இருக்கும் காதலரை விட முன் இருந்தவர் மிகவும் அக்கறையும் பாசமும் கொண்டிருந்தார் என்ற எண்ணம் வர கூடும். ஒரு நல்ல ஆலோசனை: அந்த எண்ணங்களை விட்டு விடுங்கள். அவற்றைப் பற்றி நினைக்காமல் இருப்பது உங்கள் உறவிற்கு நல்லது. உங்களது உறவை பாதிக்கும் எதையும் கூறுவது நல்லது அல்ல. உங்கள் காதலர் அல்லது கணவர் உங்களுக்கு மிகவும் சிறந்தவர் ஆவார். அவரது அன்பும் சிறந்தது. உங்களது உறவு மேம்பட இத்தகைய ஆலேசனைகளை பின்பற்றுங்கள்.
சொல்ல முயற்சிக்க கூடாத விஷயங்கள்
ஆண்களுக்கு பெண்கள் தங்களிடமிருந்து எதையாவது மறைக்கிறார்கள் என்று தெரிந்தால், அதை அவர்களால் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. இவ்வாறான நிலை ஏற்பட்டால், அவர்களின் உடன் பிறப்புகள் பற்றி எதையும் தவறாக கூறாமல் இருப்பது நல்லது. அவரது தாய் மிகவும் இம்சை என்றும், அவரது தங்கை அழகாக இல்லை என்றும் தப்பி தவறி கூட உளறி விடாதீர்கள். இதனால் உங்களது உறவில் விரிசல் ஏற்பட வாய்ப்புக்கள் அதிகம் உள்ளது. இத்தகைய விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. நல்ல ஒரு நண்பரைப் போல் பேசுங்கள்.
ஒரு சில விஷயங்களை மறைப்பதன் மூலம் நல்ல உறவையும் மேம்படுத்த முடியும்.



Click it and Unblock the Notifications