Latest Updates
-
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது? -
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 1 மாதம் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ஹிட்லரை விட 19 வயது குறைவான அவரது காதலி ரகசியமாக எப்படி இறந்தார் தெரியுமா? இன்றுவரை விலகாத மர்மம் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால்… அதிர்ஷ்டமும் பணமும் தேடி வரும்! -
காலிஃப்ளவரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி இப்படி மிளகு வறுவல் செய்யுங்க.. அள்ளும்..
லிவ்-இன் உறவுமுறை: இது ஒரு நல்ல ஐடியாவா...?
திருமணம் மிக பழமையான சமூக அங்கமாகவும், புனிதமான உறவாகவும் தம்பதியர்களை ஒன்று சேர்க்கும் வழியாக இன்றளவிலும் கருதப்பட்டு வருகிறது. இது பழமையான சமூக அமைப்பாகவும், காலத்தை வென்ற கலாச்சார நிகழ்வாகவும் உள்ளது. இந்த நிலையில் திருமணம் செய்யப் போகும் தம்பதியரோ அல்லது காதலித்துக் கொண்டிருக்கும் ஆண்-பெண் இருவருமோ திருமணத்திற்கு முன்னரே சேர்ந்து வாழும் வகையிலான உறவை ஏற்படுத்தியுள்ள 'லிவ்-இன்' முறை திருமண பந்தத்தை புதியதொரு நிலைப்பாட்டிற்கு கொண்டு சென்றுள்ளது. மேற்கத்திய உலகில் பரவலாக இருந்து வந்த இந்த உறவு லிவ்-இன் முறை, இன்று பல்வேறு கலாச்சாரங்களையும் சேர்ந்த திருமண உறவுகளிலும் ஊடுருவியுள்ளது. லிவ்-இன் உறவு என்பது அடிப்படையாகவே ஒரு சட்ட ரீதியில் அங்கீகரிக்கப்படாத திருமணமாகவும் மற்றும் இருவர் ஒன்று சேர்ந்து வாழ்வது என்றும் கருதப்படுகிறது.
'லிவ்-இன்' உறவு இன்னும் பல நாடுகளில் அங்கீகரிக்கப்படாத உறவாகவே விளங்குகிறது. இதற்கான சட்டங்களும், விதிமுறைகழும் இன்னும் உருவாக்கப்படவில்லை. இவ்வாறு இரண்டு பேர் உறவில் திருமணமின்றி வாழ்வது கிழக்கத்திய கலாசாரங்களின் படி இன்னும் தடை செய்யபட்டதாகவே இருக்கின்றது. எப்படியாயினும் மேற்கத்திய கலாசாரத்தில் இதை ஏற்றுக் கொண்டு இளைஞர்களில் பெரும்பாலானோர் பின்பற்றும் செயலாக இந்த உறவு முறை உள்ளது. இதன் வசதிகள் மற்றும் பிரச்சனையின்மை காரணமாக பெரும்பாலான இளைஞர்கள் இந்த லிவ்-இன் வாழ்கை முறையை தேர்ந்தெடுத்து வாழ்ந்து வருகின்றனர்.
திருமணம் அதிகமான நேரமும், பொருளாதாரமும் தேவைப்படும் மிகுந்த விலையுயர்ந்த உறவாகும். திருமணம் தோல்வியில் முடிந்தால் அதற்கு விவாகரத்து செய்வதற்கும் அதிக செலவு தான். அப்படி இருக்கையில் 'லிவ்-இன்' உறவு திருமணத்திற்குப் பின் நாம் எவ்வாறு வாழப் போகிறோம் என்பதை ஒத்திகை பார்ப்பதை போன்ற அனுபவமாக இருக்கும். அது மட்டுமல்லாமல் இந்த உறவு நமக்கு உகந்ததாய் இருக்குமா. இல்லையா என்பதை புரிந்து கொள்ளவும் தீர்மானிக்கவும் முடியும். விருப்பமிருந்தால் திருமணம் அல்லது எந்த சலனமுமின்றி பிரிந்து விடலாம் என்பதே இவ்வுறவின் சாராம்சமாகும். ஆனால் இந்த உறவைப் பற்றிய பார்வைகளும், எண்ணங்களும் ஒவ்வொருவருக்கும் வேறுபடுகின்றன.

1. சுதந்திரமும் வளைந்து கொடுக்கும் தன்மையும் உடைய இந்த உறவு முறை தான் இளைஞர்களை வெகுவாக கவர்கின்றது. இந்த உறவில் வாழும் தம்பதிகள் சிக்கல்களில் பிடிபடாமல் திருமண சட்ட திட்டங்களில் உட்படாமல் வாழ்வதை விரும்புகின்றனர்.
2. 'லிவ்-இன்' உறவில் வாழ்பவர்கள் பிள்ளைகளை பெறுவதைப் பற்றியோ, புதிய உறவினர்களை கவனிக்கும் முறைக்காவோ அல்லது அனைத்தையும் பகிர்ந்து கொள்வது என எந்தவிதமான முன்னேற்பாடுகளும் செய்யத் தேவையில்லாததால், தொந்தரவுகள் இல்லாத உறவு முறையாக உள்ளது. இப்படித் தான் நாம் வாழ வேண்டும் என்ற கட்டாயமும் இதில் கிடையாது. இருவரது பொறுப்பையும் சரி சமமாக பிரித்துக் கொள்ள வேண்டும் என்ற கட்டாயமும் கூட இல்லை.
3. 'லிவ்-இன்' உறவு முறையில் பணம் குறித்த வீண் கவலை இல்லை. நீங்கள் சுதந்திரமாக உங்களது பணத்தை செலவு செய்யலாம். நீங்கள் நிச்சயமாக துணைவருடன் உங்கள் சம்பாத்தியத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றெல்லாம் அவசியம் கிடையாது. நீங்களே திட்டமிட்டு செலவு செய்து கொள்ளும் சுதந்திரம் உங்களுக்கு உண்டு.
4. 'லிவ்-இன்' முறையில் இருவரது பொருத்தத்தையும் நீங்கள் புரிந்து கொள்ள முடியும். உண்மையான வாழ்க்கை சூழலில் நீங்களும், உங்கள் துணைவரும் ஒருவரை ஒருவர் எவ்வாறு புரிந்துகொண்டு வாழ்கின்றீர்கள் என்பதை இருவரும் அறிந்து கொள்ள ‘லிவ்-இன்' உறவு உதவும்.
5. அனைவரும் ஒரே நபருடன் நீண்ட காலம் வாழ வேண்டும் என்று எண்ண மாட்டார்கள். ஒரு நபருடன் சிறிது காலம் வாழ்நத பின் மிகவும் சோர்வுற்று வேறு நபருடன் வாழ வேண்டும் என்று எண்ணுகின்றனர். இப்படிப்பட்டவர்களுக்கு 'லிவ்-இன்' முறையே மிக சிறந்த வழியாகும்.
6. திருமணத்துடன் ஒப்பிடும் போது 'லிவ்-இன்' உறவை முறிப்பது மிகுந்த சுலபமான மற்றும் தொல்லை இல்லாத அனுபவமாக இருக்கும். பிரிவதற்கு முன் எந்த ஒரு சட்ட ரீத்யான செயல்களையும் செய்ய வேண்டிய அவசியம் கிடையாது. உங்களது உணர்வுகளை மட்டும் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ளுதல் அவசியம்.
7. 'லிவ்-இன்' உறவில் உங்களது சட்டங்களை நீங்களே வகித்துக் கொள்ளலாம். இதற்கெண்று எந்த ஒரு சமுதாய முறைகளோ நெறிகளோ கிடையாது. ஆகையால் உங்கள் சட்டங்களை உங்கள் வாழ்வில் தெளிவாக சொந்தமாக எழுதிக் கொள்ள முடியும்.
8. வளைந்து கொடுக்கும் தன்மை அதாவது அவரவருக்கேற்ப அவர்களது வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்வது போன்ற செயல்கள் லிவ்-இன் தம்பதியருக்கு மிகவும் எளிதாக அமைகின்றது. லிவ்-இன் உறவில் வாழும் தம்பதியர்களில் சிலர் தாங்கள் இருவர் மட்டுமல்லாமல் அவர் விருப்பத்திற்கேற்ப பிறரையும் சேர்த்துக் கொளளும் சுதந்திரம் பெற்றுள்ளனர்.
9. இந்த வகை உறவில் இருக்கும் தம்பதிகள் பொதுவாகவே யாருக்காகவும் தங்களது விருப்பங்களை தியாகம் செய்யவோ அல்லது மாற்றிக் கொள்ளவோ தேவை இல்லை. நீங்கள் நீங்களாகவே வாழ உங்களுக்கு முழுமையான சுதந்திரம் உள்ளது. உங்கள் துணைவருக்காக உங்களின் வாழ்க்கை முறையை நீங்கள் மாற்ற வேண்டிய அவசியம் இல்லை.
10. கடைசியாக மற்றும் மிகவும் முக்கியமான விபரம் என்னவென்றால் 'லிவ்-இன்' உறவில் விவாகரத்து தேவையில்லை. சில காலம் ஒன்றாக வாழ்ந்த பின்னும் இருவருக்குள்ளும் ஒத்துப் போகாவிடில் அவர்கள் பிரிந்து பொவதற்கு முடிவு செய்து விட்டு, எந்த ஒரு சலனமுமின்றி பிரிந்து செல்லலாம். இதற்காக விவாகரத்து போன்ற விஷயங்களை நாடிச் செல்லத் தேவையில்லை



Click it and Unblock the Notifications