Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
இணையதளத்தில் டேடிங் செய்வதற்கான சில சூப்பர் டிப்ஸ்...
இணையதளத்தில் வளர்த்த உறவோடு இணையதளத்திலேயே டேட்டிங் செய்வதென்றால் அதில் பல இடர்பாடுகள் அடங்கியுள்ளது. அதற்கு முக்கிய காரணமே அதில் உண்மையான நிலை என்பதே கிடையாது. சாதாரண டேட்டிங் என்றால் உங்கள் காதலன் அல்லது காதலியை நேருக்கு நேராக சந்தித்து அவர்களுடன் பேசி பழகி பொழுதை கழிப்பது. இதுவே இணையத்தளம் மூலமாக செடிங் என்றால் நேருக்கு நேராக இருவரும் பார்த்துக் கொள்ள இயலாது. அதனால் அதில் பல சவால்களும் சிக்கல்களும் நிறைந்துள்ளது. உங்கள் காதலன் அல்லது காதலியை நேரில் சந்திக்க வைப்பு இல்லாததால் உங்கள் டேட்டிங் எப்படி இருந்தது என்று சொல்வதற்கு வாய்ப்பே இருக்காது.
இணையதளத்தில் ஒரு புது உறவு கிடைக்கும் போது இணையத்தளம் மூலமாகவே டேட்டிங் செய்வதில் மற்றொரு பெரிய சிக்கல் இருக்கிறது - அது உங்கள் இருவருக்கும் உள்ள இடைவெளி; அது ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் உங்களை பிரித்து வைத்திருக்கலாம். பாரம்பரிய டேட்டிங்கை தூக்கியெறிந்து இந்த புது டேட்டிங் உங்களுக்குள் பல ஐடியாக்களை உதிர்க்கச் செய்து டேட்டிங்கை தொடரச் செய்யும். நேருக்கு நேராக பார்க்க முடியாவிட்டாலும் கூட வளர்ந்துள்ள தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இவ்வகை டேட்டிங்கை கூட நெருக்கமானதாக உண்மையானதாக மாற்றலாம்.
ஒருவருடன் இணையதளம் மூலமாக உறவு வைத்திருக்கும் போது அதை காலத்திற்கும் அப்படியே தான் தொடர வேண்டும் என்ற எந்த விதிமுறையும் கிடையாது. காலப்போக்கில், அந்த நபரை பற்றி நன்கு அறிந்து பின், அவரை ஒரு பொதுவான இடத்தில் சந்திக்க நீங்கள் திட்டமிடலாம். இல்லை, ஒரு வேலை நீங்கள் மிகவும் நெருக்கமாக இருந்தால் திடீரென ஆச்சரியம் அளிக்கும் வகையில் நேரில் சென்று நிற்கலாம். இணையதளம் மூலம் உறவு வைத்திருப்பவரிடம் பல வகையில் சந்தோஷத்துடன் டேட்டிங் செய்யலாம். அது இணையதளம் மூலமாகவும் இருக்கலாம் அல்லது உண்மையானதாகவும் இருக்கலாம்.

நேரம் ஒதுக்குங்கள்
இணையதளத்தின் மூலம் கிடைத்த காதலன் அல்லது காதலிக்காக சிறிது நேரத்தை ஒதுக்குங்கள். தொலைபேசி, வீடியோ சாட், ஆன்லைன் சாட் போன்ற ஏதாவது தொழில் நுட்பத்தின் மூலம் உரையாடுங்கள். இவைகளின் மூலமாக மட்டுமே அவர்களுடன் உரையாட முடியும் என்பதால் அவர்களை பற்றி அறிந்து கொள்ளவும் உங்கள் உறவை உறுதியாக்கவும் அவர்களுடன் நேரத்தை செலவிடுங்கள்.
பல வகை சாட்டிங்
இந்த நவீன யுகத்தில் ஒருவரிடம் இணையதளம் மூலமாக பல வகைகளில் தொடர்பு கொள்ளலாம். அப்படி உள்ள பல வகைகளை பற்றி தெரிந்து கொண்டு அவைகளை முயற்சி செய்து பாருங்கள். இதனால் உங்கள் உரையாடலின் போது சுவாரஸ்யம் அதிகரிக்கும். ஒருவரை ஒருவர் தெரிந்து கொள்ள தினமும் பல வகை தொழில் நுட்பத்தை கையாளுவது புதுமையாக இருக்கும் தானே.
நேருக்கு நேர்
உண்மையான உறவுகளை போல் அல்லாமல், இணையதளம் மூலம் கிடைத்த உறவுடன் நேரடியாக டேட்டிங் செல்ல முடியாது. இருப்பினும் ஸ்கைப் அல்லது ஃபேஸ்புக் சாட் மூலமாக வீடியோ சாட்டிங்கில் ஈடுபட்டு இருவரும் மற்றவரின் முகத்தை பார்த்துக் கொண்டே பேசலாம் தானே. இது உங்களின் இணையதள உறவை ஆழமாக்கும். மேலும் உங்கள் இருவருக்கு மத்தியிலும் ஒரு நெருக்கத்தை ஏற்படுத்தும்.
ஆன்லைன் விளையாட்டுக்கள்
இணையதளத்தில் சந்தோஷமாக டேட்டிங் செய்வதற்கு இதுவும் ஒரு சிறந்த வழியாகும். சந்தோஷத்தை அளிக்கும் எளிய விளையாட்டுக்களை தேர்ந்தெடுத்து இருவரும் விளையாடினால் மாய உலகத்தில் நீடிக்கும் உங்கள் பந்தத்தை அது மேலும் அதிகரிக்கும். சில ஆன்லைன் விளையாட்டுக்களை நீங்கள் சேர்ந்த விளையாடலாம். அதே போல் கஷ்டமான போர் விளையாட்டு அல்லது கார் ரேஸ் போன்ற விளையாட்டுக்களையும் சேர்ந்து விளையாடி மகிழலாம். இதற்கான தேர்வுகள் எண்ணிலடங்காதவை. அதனால் கிடைக்கப்போகும் பேரின்பம் எல்லையில்லாதாவை.
ஆன்லைன் டேட்
கேட்பதற்கு பைத்தியகாரத்தனமாக இருக்கும், ஆனால் இது சாத்தியமே. இணையத்தளத்தில் கிடைத்த புது உறவுடன் இணையதளத்தில் ஒரு மாய டேட்டிங்கில் ஈடுபட முடியும். இணையதளத்தில் பல விளையாட்டுக்கள் உள்ளது. அதை விளையாட உங்கள் கதாபாத்திரங்களை நீங்களே தேர்வு செய்து கொள்ளலாம். அப்படிபட்ட கதாப்பாத்திரங்களும் களமும் நேரிலே நாம் சந்திப்பதை விட புதுமையானதாக இருக்கும். நீங்கள் டேட்டிங் செய்வதற்கு ஆல்ப்ஸ் மலையை கூட தேர்ந்தெடுக்கலாம் தானே.
அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லுங்கள்
மாய உலகத்தில் இருந்து நிஜ உலகத்திற்கு உங்கள் இணையதள உறவை கொண்டு செல்லும் நேரம் வந்து விட்டது என்று நீங்கள் உணர ஆரம்பித்தால் நேருக்கு நேர் சந்தித்து நிஜமான டேட்டிங்கை நீங்கள் மேற்கொள்ளலாம். தூரம் என்பது ஒரு பிரச்சனையாக இருந்தால், உங்கள் இருவரின் வசதிக்காக உங்கள் இருவருக்கும் சமதூரத்தில் இருக்கும் ஒரு பொதுவான இடத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். இணையதள உறவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதில் முக்கியமான இடம் இது. அதனால் மிகுந்த நம்பிக்கை மற்றும் இருவருக்கும் இடையேயான வசதிகள் மீது அக்கறை எடுப்பது அவசியம்.



Click it and Unblock the Notifications