Latest Updates
-
நாயர் கடை வெங்காய சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
அக்டோபர் 21, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் அடிக்கப்போகுதாம் -
புதன் உதயத்தால் தொழில் வாழ்க்கையில் புதிய உச்சத்தை தொடப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
November Matha Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. நவம்பர் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
2 கப் சுண்டல் இருந்தா இந்த மாதிரி கொண்டைக்கடலை மசாலா வடை செய்யுங்க - மொறுமொறுனு சூப்பரா இருக்கும் -
Hair Care Tips: முடி ராக்கெட் வேகத்தில் வளரணுமா? அப்ப இந்த விதைகளில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க -
மீந்து போன சாதம் இருக்கா? அப்ப அத வெச்சு பஞ்சு போல சாப்ட்டான சப்பாத்தி செஞ்சு சாப்பிடுங்க.. -
சிம்ம ராசியில் குரு-கேது சேர்க்கை: இந்த 4 ராசிக்காரர்களுக்கு பேன்க் பேலன்ஸ் டபுள் ஆகப்போகுது! -
இந்த 4 ராசி பெண்கள் ரொம்ப ரொம்ப பிடிவாதக்காரர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
அக்குள் கருமையை போக்கணுமா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணி பாருங்க..
திருமணத்துக்கு முன்னாடி இந்த 5 விஷயங்களை அவசியம் தெரிஞ்சிக்கோங்க... இல்லனா பின்னாடி ரொம்ப கஷ்டப்படுவீங்க...!
திருமணம் என்பது அனைவரின் வாழ்கையிலும் நிகழும் ஒரு திருப்புமுனை உறவாகும். ஒருவரின் வாழ்க்கையின் பிற்பகுதி எப்படி இருக்கப்போகிறது என்பது அவர்களுக்கு அமையும் வாழ்க்கைத்துணையை பொறுத்துதான் தீர்மானிக்கப்படுகிறது. அப்படிப்பட்ட திருமண உறவில் எப்போதும் அவசரமாக முடிவெடுக்கக் கூடாது.
திருமணத்திற்கு முந்தைய உரையாடல் என்பது திருமணம் செய்வதற்கு முன் அவசியமாக செய்ய வேண்டிய ஒரு விஷயமாகும். திருமணம் நீண்ட காலம் தொடரக்கூடிய அதிக அர்ப்பணிப்பு தேவைப்படும் உறவாகும் மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக தம்பதிகள் இருவரும் ஒருவருக்கொருவர் அனைத்து சூழ்நிலைகளிலும் ஆதரவாக இருக்க வேண்டும். திருமணத்திற்கு முன் ஒருவர் தனது துணையுடன் ஆலோசிக்க வேண்டிய சில விஷயங்கள் உள்ளன. அவை என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

நிதி மற்றும் வருமானம்
நிதி திட்டமிடல் இல்லாமையே பெரும்பாலான திருமணங்கள் தோல்வியடைவதற்கு பொதுவான காரணமாக இருக்கிறது. திருமணம் செய்வதற்கு முன் நிதி விஷயங்களைக் கருத்தில் கொள்வது ஒரு முக்கிய காரணியாகும். ஒரு உறவில் உள்ள இரு நபர்களும் தங்கள் திருமண வாழ்க்கையைத் தொடங்க நிதிரீதியாக ஸ்திரமாகவும் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும். மோதல்கள் மற்றும் தவறான புரிதல்களைத் தவிர்க்க கடன்கள், வருமானம் மற்றும் முதலீடுகள் பற்றிய வெளிப்படையான விவாதம் முக்கியம்.
கனவுகள் மற்றும் இலக்குகள்
ஒரு பெரிய நெருக்கம் ஒரு உறவில் பொதுவான உணர்வைப் பகிர்ந்து கொள்வதற்கு அவசியமானது. எனவே தம்பதிகள் தங்கள் தனிப்பட்ட மற்றும் கூட்டு அபிலாஷைகளை பற்றி விவாதித்துக் கொள்ள வேண்டும். இருவருமே தங்கள் திருமண வாழ்க்கையைப் பற்றிய பொதுவான பார்வையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
ஒரு ஆதரவு நிறைந்த திருமண உறவிற்கு ஒரு சிறந்த கூட்டாண்மை தேவைப்படுகிறது மற்றும் அது கூட்டு முயற்சிகள் மட்டுமே வருகிறது. எனவே கனவுகள் மற்றும் இலட்சியங்களைப் பற்றி விவாதிப்பது முக்கியம்.
குடும்ப பின்னணி மற்றும் கலாச்சாரம்
திருமணம் செய்து கொள்வதற்கு முன் உங்கள் வருங்கால வாழ்க்கைத்துணையின் சமூக நிலை மற்றும் குடும்ப பின்னணியை கருத்தில் கொள்வது அவசியம். ஒருவருக்கொருவர் கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் குடும்ப பழக்கவழக்கங்களைப் புரிந்துகொள்வது ஒரு நிறைவான உறவை வளர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. கலாச்சார வேறுபாடுகளை உணர்ந்து ஒருவருக்கொருவர் குடும்பத்துடன் பழகுவது உறவின் ஆரம்ப கட்டங்களில் கையாளப்பட வேண்டும்.
குடும்பக் கட்டுப்பாடு
குடும்பக் கட்டுப்பாடு மற்றொரு முக்கியமான திருமணத்திற்கு முன்பு விவாதிக்கப்பட வேண்டிய விஷயமாகும், இது புறக்கணிக்கப்பட்டால் பின்னாளில்விவாகரத்து மற்றும் பிரிவை ஏற்படுத்தும். திருமணத்திற்கு முன் குடும்பக் கட்டுப்பாடு பற்றிய வெளிப்படையான விவாதம் நடத்தப்பட வேண்டும். பெற்றோர் மற்றும் குடும்பக் கட்டுப்பாடு ஆகியவற்றைப் பற்றி தம்பதிகள் சிந்திக்க வேண்டும்.
வேலையின் தன்மை
உங்கள் வேலையின் தன்மை உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் உறவுகளை பாதிக்கலாம். சில வேலைகளுக்கு அடிக்கடி இடமாற்றம் மற்றும் இரவு நேரங்களில் நேரங்களில் வேலை செய்ய தேவைகள் இருக்கும். அந்த வகையில் வேலை விருப்பத்தேர்வுகள் மற்றும் சவால்கள் பற்றிய விவாதங்கள் வேலை-வாழ்க்கை சமநிலையை ஏற்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு உறவில் உள்ள இரு நபர்களும் ஒருவருக்கொருவர் தங்கள் வேலை தேர்வுகளுக்கு ஆதரவாக இருக்க வேண்டும்.



Click it and Unblock the Notifications

