Latest Updates
-
ஜூலை 27-ல் சனிபகவான் வக்ர பெயர்ச்சியை தொடங்குவதால் 138 நாட்கள் துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
மணமணக்கும் மல்லி வெண் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
இந்த 5 ரேகைகளில் ஒன்று கையில் இருப்பவர்களுக்கு நிச்சயம் காதல் திருமணம்தான் நடக்குமாம் - உங்க கையில் இருக்கா? -
சூரியன்-ராகு உருவாக்கும் ஷடாஷ்டக யோகத்தால் சகல துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
கோலாப்பூரி முட்டை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு டக்கரா இருக்கும் -
22 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் அதிசய முலாம்பழம் - இந்த பழத்தில் அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா? -
கர்நாடகா ஸ்டைல் சிக்கன் தொன்னை பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் அருமையா இருக்கும் -
பணக்காரர்களை விட இந்த குணம் உள்ளவர்கள்தான் சமூகத்திற்கு முக்கியமானவர்களாம் - சாணக்கிய தந்திரம் -
பூரி, சப்பாத்திக்கு ஏற்ற மட்டன் கிரேவி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க! -
இன்றைய ராசிபலன் 19 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்
ஆண்களே! உங்க மனைவிக்கு உடலுறவில் ஆர்வம் குறையுதா? அப்ப அதுக்கு காரணம் இதுதானாம்...!
பாலியல் கவலை என்பது பல பெண்கள் எதிர்கொள்ளும் ஒரு பொதுவான பிரச்சினை. ஆனால் ஒரு சிலர் மட்டுமே அதைப் பற்றி பேசுகிறார்கள். பெரும்பாலும் பெண்கள் பாலியல் விருப்பத்தை பற்றியும் ஆசையை பற்றியும் வெளியில் கூற தயங்குகிறார்கள்.
உடலுறவை பற்றிய பல கேள்விகள் பெண்கள் மனதில் பெரும்பாலும் ஓடிக்கொண்டிருக்கும். முதல் முறை உடலுறவு கொள்ளும்போது யாருக்கும் சற்று பயம் மற்றும் பதட்டம் இருக்கத்தான் செய்யும் என்பது புரிந்துகொள்ளக்கூடியது. இருப்பினும், உடலுறவைப் பற்றி எப்போதும் கவலையாக அல்லது மன அழுத்தமாக நினைக்கக்கூடாது.

ஏனெனில், பாலியல் கவலையானது உடலுறவின் போது இன்பத்தை அனுபவிப்பதில் இருந்து உங்களை திசைதிருப்பலாம். உங்கள் துணையின் தொடுதலில் இருந்து தெரிந்தோ தெரியாமலோ நீங்கள் வெட்கப்படுவதைக் காணலாம். பாலியல் கவலையின் தூண்டுதல்களைப் பற்றியும், அதை எவ்வாறு சமாளிப்பது என்பதை பற்றியும் இக்கட்டுரையை படித்து தெரிந்துகொள்ளுங்கள்.
பாலியல் கவலை
பாலியல் கவலை அல்லது பாலியல் செயல்திறன் கவலை ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமமாக பொதுவானது என்றாலும், மிகச் சில பெண்களே அதைப் பற்றி புகாரளிக்கிறார்கள். பாலியல் கவலை ஆண்களுக்கு விறைப்புத்தன்மை மற்றும் முன்கூட்டிய விந்துதள்ளல் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்று நாம் கேள்விப்பட்டிருந்தாலும், அது பெண்களின் வஜினிஸ்மஸ் என்ற நிலைக்கும் காரணமாகும் என்பது உங்களுக்குத் தெரியுமா?
வஜினிஸ்மஸ் என்பது யோனி தசைகளில் பிடிப்பை ஏற்படுத்துகிறது மற்றும் உடலுறவு ஊடுருவும் பயம் காரணமாக இறுக்கமடைகிறது. பாலியல் கவலைக்கு என்ன காரணம் என்பதை தம்பதிகள் கண்டுபிடித்து, அதை எப்படி தடுக்க வேண்டும் என்று யோசிக்க வேண்டும். பெண்கள் இதைப் பற்றி வெளிப்படையாக தங்கள் கணவனிடம் பேச வேண்டும்.
உடல் பற்றிய எண்ணம்
உடல் டிஸ்மார்ஃபியா பாலியல் கவலைக்குப் பின்னால் ஒரு பெரிய காரணமாக இருக்கலாம். ஏனெனில், தங்கள் உடலை பற்றி நீங்களே தாழ்வாக எண்ணிக்கொள்வதால், உடலுறவில் ஈடுபட தயங்களாம். இது மன அழுத்தத்திற்கு வழிவகுக்கும். முதலில் உங்களை நேசிக்க கற்றுக்கொள்ளுங்கள், உங்கள் உடலை நேசிக்க கற்றுக்கொள்ளுங்கள். இது உங்களுக்கு அளவற்ற இன்பத்தைக் கொடுக்கும்.
உடலுறவின் போது ஏற்படும் வலி
சில நேரங்களில் உடலுறவு வலி நிறைந்ததாக இருக்கும். குறிப்பாக முதல் முறை உடலுறவு கொள்ளும்போது, வலி ஏற்படுவது இயல்பானது. ஆனால், அதையே நினைத்து எல்லா நேரங்களிலும் இப்படி இருக்கும் என்று கற்பனை செய்வது நல்லதல்ல.
உடலுறவில் வலி ஏற்படாமல் இருக்க, ஃபோர்பிளேவில் அதிகம் ஈடுபடுங்கள். இது உங்கள் பாலியல் உணர்ச்சியை அதிகமாக தூண்டி, உச்சக்கட்டம் அடைய வழிவகுக்கும். ஃபோர்ப்ளே உங்களையும் உங்கள் துணையையும் நன்கு அறிந்துகொள்ளும் வாய்ப்பை வழங்குகிறது. இது உங்கள் இருவருக்கும் ஒருவரையொருவர் வசதியாக இருக்க நேரம் கொடுக்கிறது.
ஒரு பெண் தூண்டப்பட்டால், அவளது பாலியல் சுரப்பிகள் இயற்கையான உயவுத்தன்மையை சுரக்கின்றன. மேலும் உடலுறவின் போது வலி ஏற்படாமல் இருக்க யோனி விரிய ஆரம்பிக்கும். ஒரு பெண் தூண்டப்படாதபோது, அவளது பிறப்புறுப்பு சுமார் 2-4 அங்குல நீளம் விரியும். ஆனால் தூண்டுதலால் அது சுமார் 4-8 அங்குலம் வரை விரியும்.
உச்சியை அடைய பந்தயம் போட வேண்டாம்
உச்சக்கட்டத்தை இந்த நேரத்திற்குள் அடைய வேண்டும் என்று பந்தயத்தில் கலந்து கொண்டதுபோல செயல்பட வேண்டாம். உடலுறவை நிதனமாக பொறுமையாக அனுபவியுங்கள். நீங்கள் கர்ப்பமாக முயற்சிக்கிறீர்கள் எனில், நன்றாக உடலுறவு கொள்ளும்போது, அவை தனாகவே நடக்கும்.
கர்ப்பமாக அட்டவணைப்படி உடலுறவு கொள்ள வேண்டாம். இது தம்பதிகள் இருவரின் மனநிலையையும் பாதிக்கலாம். பாலியல் நெருக்கத்தின் முதல் ஆதாயம் உங்கள் துணையுடன் நெருக்கமாக இருப்பது. ஒவ்வொரு உடலுறவும் ஒரு உச்சக்கட்டத்தை அடைவதில்லை என்பதை தம்பதிகள் புரிந்துகொள்ள வேண்டும்.
உங்கள் துணையுடன் தொடர்புகொள்வதே சிறந்த தீர்வாகும்
துரதிர்ஷ்டவசமாக, டெலிபதியை பெரும்பலான தம்பதிகள் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். தம்பதிகள் இருவரும் மனதில் நினைத்துக்கொண்டு, அதை சொல்லமலே தங்கள் துணைக்கு புரிய வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.
யாருடைய மனதையும் யாராலும் முழுவதுமாக புரிந்துகொள்ள முடியாது. உங்கள் துணையிடம் பேச வேண்டிய விஷயங்களை மனம் திறந்து பேசுங்கள். ஆரோக்கியமான தகவல் தொடர்பு ஒவ்வொரு தம்பதிகளுக்கும் மிக முக்கியம். இவை உங்கள் பாலியல் வாழ்க்கையை மகிழ்ச்சியானதாக மாற்றும்.



Click it and Unblock the Notifications

