Latest Updates
-
Krishna Jayanthi 2026: இன்று உங்க ராசிப்படி கிருஷ்ணருக்கு இத வாங்கி கொடுங்க.. உங்க கனவுகள் சீக்கிரம் நனவாகும்! -
1/2 கப் கொள்ளு இருந்தா.. இப்படி ஒருவாட்டி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 04 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம் -
செவ்வாய் சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு செல்வம் பெருகும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
Krishna Jayanti 2026: இந்த 4 ராசிக்காரங்க பகவான் கிருஷ்ணரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாம் -
1 கப் அவலும், 1/4 கப் எள்ளும் இருந்தா.. கிருஷ்ண ஜெயந்திக்கு இந்த ஸ்வீட் செய்யுங்க.. -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் உன்னியப்பம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - நெய் மணக்க சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி பெண்கள் அவங்க பழைய காதலை மறக்கவே மாட்டார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
Krishna Jayanthi 2026: கிருஷ்ண ஜெயந்திக்கு என்னலாம் செய்வாங்க-ன்னு தெரியுமா? -
2026-ன் சூப்பர் எல் நினோ இந்தியாவிலும், உலகிலும் ஏற்படுத்தப்போகும் பாதிப்புகள் - எச்சரிக்கும் விஞ்ஞானிகள்
ஆண்களே! உறவில் உங்க மனைவியை பாதுகாப்பா உணர வைக்க... நீங்க என்ன செய்யணும் தெரியுமா?
இன்றைய நாளில் திருமணமான தம்பதிகளுக்குள் பல்வேறு பிரச்சனைகள் சிக்கல்கள் எழுகின்றன. பொதுவாக ஆண், பெண் உறவு என்பது மிகவும் சிக்கலானது. அவற்றை நாம் புரிந்துகொண்டு வாழ்க்கையை எப்படி வாழ்கிறோம் என்பதில்தான் மகிழ்ச்சியும் துன்பமும் இருக்கிறது.
சில பெண்கள் தங்கள் கணவனோடு வாழும்போது, மிகவும் பாதுகாப்பற்றதாக உணரலாம். பெரும்பாலான பெண்கள் தங்கள் கணவனோடு இருக்கும்போது, எதை பற்றியும் கவலைப்படாமல் பாதுகாப்பாக உணரலாம். இந்த இரண்டு வகையான மனைவிகளில் நீங்கள் என்னவாக இருக்கிறீர்கள் என்பது முக்கியம்.

சில செயல்கள் தங்கள் மனைவியை மிகவும் பாதுகாப்பற்றதாக உணரவைக்கும் என்பதை பெரும்பாலும் ஆண்கள் உணருவதில்லை. ஆனால் ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான உறவில் இருக்க வேண்டும் என்று மட்டும் விரும்புவார்கள். ஆண்களே! உங்கள் மனைவியை உறவில் பாதுகாப்பாக உணர வைப்பதற்கான வழிகளை பற்றி இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.
தகவல் தொடர்பு
எந்தவொரு உறவுக்கும் மிக முக்கியமான அம்சமாக இருப்பது தகவல் தொடர்பு. திறந்த மனதுடனும் நேர்மையாகவும் தகவல் தொடர்பு கொள்வது ஆரோக்கியமான உறவுக்கு நல்லது. உங்கள் துணை உங்களுடன் எதை பற்றியும் மற்றும் எல்லாவற்றையும் பற்றி பேச வசதியாக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
உங்கள் மனைவி உங்களுடன் பேசும்போது கவனமாகக் கேட்கவும், இரக்கம் கொள்ளவும் மற்றும் புரிதலுடன் பதிலளிக்கவும் வேண்டும். தம்பதிகள் இருவரும் மனம்விட்டு பேசும்போது, எந்த பிரச்சனைகளும் சிக்கல்களும் எளிதில் தீர்வு கிடைக்கும்.
உறுதியாக இருப்பது
உங்கள் செயல்களிலும் வார்த்தைகளிலும் எப்போதும் உறுதியாக இருக்க வேண்டும். நீங்கள் ஏதாவது செய்யப் போகிறீர்கள் என்று சொன்னால், அதைப் பின்பற்றுங்கள். அந்த விஷயத்தை செய்து முடியுங்கள். எந்த விஷயத்திலும் நீங்கள் உறுதியாக இருக்கும்போது, உங்கள் மனைவி உங்கள் மீது முழு நம்பிக்கை கொண்டிருப்பார்.
நம்பிக்கை
மகிழ்ச்சியான ஆரோக்கியமான உறவுக்கு நம்பிக்கை மிக அவசியம். தம்பதிகள் இருவருக்கும் ஒருவர் மீது ஒருவருக்கு நம்பிக்கை இருக்க வேண்டும். உங்கள் துணையுடன் நேர்மையாகவும் வெளிப்படையாகவும் இருப்பதன் மூலம் நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள்.
நீங்கள் கொடுக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள் மற்றும் உங்கள் மீதான நம்பிக்கையை இழக்கச் செய்யக்கூடிய எந்த விஷயத்தையும் செய்யாதீர்கள். ஒருமுறை உங்கள் மீதான நம்பிக்கையை இழந்துவீட்டிர்கள் எனில், மீண்டும் அந்த நம்பிக்கையை பெறுவது கடினம்.
அன்பு(காதல்)
ஒரு உறவை உயிர்ப்போடு வைத்திருப்பதற்கு அன்பு மிக அவசியம். உங்கள் துணையின் மீது உள்ள அன்பை காதலை அவ்வவ்போது வெளிப்படுத்துங்கள். கைகளைப் பிடிப்பது, கட்டிப்பிடிப்பது மற்றும் முத்தமிடுவது போன்ற சிறிய சைகைகள் அவர்களை அன்பாகவும் பாதுகாப்பாகவும் உணர வைக்கும். உங்கள் துணையை எவ்வளவு காதலிக்கிறீர்கள் என்பதை அவர்களுக்கு செயல்கள் மூலம் காட்டுங்கள்.
மரியாதை
உங்கள் துணையை எப்போதும் மரியாதையுடன் நடத்துங்கள். ஒவ்வொரு நபரும் சுய மரியாதையுடன் வாழத்தான் விரும்புவார்கள். உறவில் மரியாதை குறையும்போது, அது விரிசல்களை ஏற்படுத்தலாம். உங்கள் துணையை சிறுமைப்படுத்தி பேசுவது அல்லது அவமரியாதைக்குரிய வகையில் நடத்துவது நல்லதல்ல. உங்கள் துணையின் கருத்துக்கள் மற்றும் உணர்வுகளை எப்போதும் மதிக்க வேண்டும்.
புரிதல் இருக்க வேண்டும்
உங்கள் மனைவி சொல்ல வருவதை அல்லது சொல்வதை புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். அவர்களின் உணர்வுகள் மற்றும் விருப்பங்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்ற புரிதல் உங்களுக்கு இருக்க வேண்டும். அவர்கள் கடினமான சூழ்நிலைகளைச் சந்தித்தால், உங்களால் முடிந்த எந்த வகையிலும் அவர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும்.
தரமான நேரம்
உங்கள் உறவுக்கு முன்னுரிமை கொடுத்து, துணைக்காக நேரம் ஒதுக்குங்கள். தம்பதிகள் இருவருக்குள்ளும் நெருக்கம் மற்றும் பிணைப்பு அதிகரிக்க ஒன்றாக நேரம் செலவிட வேண்டியது அவசியம்.
உங்கள் பிணைப்பை வலுப்படுத்தும் டேட்டிங், உரையாடல்கள் மற்றும் ஒன்றாக பயணிப்பது போன்று பல்வேறு வழிகளில் தரமான நேரத்தை செலவிடலாம். சில நேரங்களில், ஒன்றாக அமர்ந்து புத்தகங்களைப் படிப்பது மற்றும் அதுகுறித்து கருத்து உரையாடல் செய்வது போன்று தரமான நேரத்தை செலவிடலாம்.



Click it and Unblock the Notifications


