Latest Updates
-
கும்ப ராசியில் உதயமாகும் புதன்: மார்ச் 14 முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும்... -
எவ்வளவு வயசானாலும் இளமையா காட்சியளிக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க.. -
காலிஃப்ளவரும், பட்டாணியும் இருந்தா.. இந்த மாதிரி கிரேவி செய்யுங்க.. சப்பாத்தி வேற லெவல்-ல இருக்கும்.. -
குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைவதால் மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
ஆட்டு ஈரலை இப்படி வறுவல் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட போட்டி போட்டு காலி பண்ணுவாங்க... -
பெண்களே! தொப்பை குறையணுமா? அப்ப இந்த ஃபிட்னஸ் கோச் சொல்ற 5 உடற்பயிற்சியை வீட்லயே செய்யுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் இந்த 5 ராசிக்கு சுக்கிர திசை ஆரம்பிக்குது.. இனி கையில் பணம் குவியப்போகுது.. -
சிக்கன வாங்குனா இந்த 4 பொருட்களை சேர்த்து கேரளா ஸ்டைல் சிக்கன் 65 செய்யுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
இந்த வாரம் மட்டன் வாங்குனா.. இந்த சுக்கா கிரேவி செய்யுங்க.. எல்லாத்துக்குமே செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 08 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் சில அற்புதங்கள் நடக்குமாம்...!
உங்க ஆபிஸ் ப்ரண்ட்ஸ் கிட்ட இந்த அறிகுறிகள் இருக்கா? அப்ப அவங்க உங்களுக்கு ப்ரண்ட் இல்ல எதிரியாம்!
இன்றைய நவீன உலகம் என்பது பல போட்டிகள் மற்றும் பொறாமைகள் நிறைந்த உலகமாக இருந்து வருகிறது. இன்றைய நாளில் யாரை நம்புவது என்ற பெரிய கேள்வி உங்கள் ஒருவருக்குள்ளும் இருக்கலாம். நண்பர்களாக இருக்கும் பலர் நமக்கு பல வழிகளில் துரோகங்களை மட்டுமே செய்வார்கள்.
பெரும்பாலும், நீங்கள் பணிபுரியும் அலுவலகத்தில் உங்கள் நற்பெயருக்கு தீங்கு விளைவிக்க, உங்களை பதிவியிலிருந்து கீழே தள்ளிவிட பல முயற்சிகள் நடக்கலாம். இவற்றை எல்லாம் உங்களுடன் மிகவும் நெருக்கமாக இருக்கும் அலுவலக நண்பரே கூட செய்யலாம். எந்த உறவாக இருந்தாலும் துரோகம் செய்பவர்களை யாரும் மன்னிக்க மாட்டார்கள்.

உங்கள் அலுவலகத்தில் உங்களுக்கு இனிமையான நண்பராக ஒரு சக ஊழியர் எப்போதும் இருப்பார். ஆனால் நீங்கள் திரும்பும் தருணத்தில் அவர் உங்களை முதுகில் குத்த காத்திருக்கலாம். இதுபோன்ற நபர்கள் இன்றைய நாளில் அதிகமாக இருக்கிறார்கள்.
நட்பாக இருக்க முயற்சிக்கும் மற்றும் உங்கள் நல்ல பக்கத்தைப் பெற முயற்சிக்கும் ஒரு நண்பர், உங்கள் முதுகுக்குப் பின்னால் கிசுகிசுப்பது அல்லது வதந்திகளைப் பரப்புவதன் மூலம் பணியிடத்தில் உங்கள் பெயரை கெடுக்க முயற்சிக்கலாம். எனவே, உங்கள் ஆபிஸ் நண்பர் உண்மையில் உங்கள் எதிரியாக இருப்பதற்கான சில அறிகுறிகள் பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.
உங்களைப் பற்றி கிசுகிசுக்கிறார்கள்
உங்கள் பணி நண்பர் எப்போதும் உங்களைப் பற்றி கிசுகிசுத்துக் கொண்டிருந்தாலோ அல்லது உங்கள் தனிப்பட்ட தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டாலோ, அவர்கள் உங்களுக்கு எதிரியாக இருக்கலாம்.
ஏனெனில், இந்த நடத்தை அவர்களின் மனதில் உங்களைப் பற்றி நல்ல விதமாக நினைக்கவில்லை என்பதையும், உங்களைக் குறைமதிப்பிற்கு உட்படுத்த முயற்சிக்கக்கூடும் என்பதையும் காட்டுகிறது. இதனால், அவர்களால் நீங்கள் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். உங்களிடம் நண்பர் போல இருக்கும் அவர்கள் உங்களுக்கு எதிரியாகதான் இருப்பார்கள்.
உங்களுக்கான பாராட்டுக்களை எடுத்துக்கொள்வது
உங்கள் பணி அல்லது யோசனைகளுக்காக நீங்கள் பெற வேண்டிய பாராட்டுக்களை மற்றும் புகழை உங்கள் அலுவலக நண்பர் தொடர்ந்து எடுத்துக்கொள்கிறார்களா? ஆம். எனில், அவர்கள் உங்களுக்கு நண்பர்கள் இல்லை, எதிரியாக இருப்பார்கள்.
மேலும், அவர்கள் உங்களின் வேலையை பறிக்க முயற்சிக்கிறார்கள் என்பதற்கான அறிகுறியாகவும் இது இருக்கலாம். இந்த நடத்தை நெறிமுறையற்றது மட்டுமல்ல, உங்கள் தொழில் வாய்ப்புகளையும் பாதிக்கலாம். அவர்கள் உங்கள் பதவியை கைப்பற்றக்கூட முயற்சிக்கலாம். இவர்களிடம் கவனமாக இருக்க வேண்டும்.
உங்களை விமர்சிக்கிறார்கள்
ஆக்கபூர்வமான விமர்சனம் பயனுள்ளதாக இருக்கும். அதே வேளையில், உங்கள் பணி நண்பர் உங்களைத் தொடர்ந்து விமர்சித்தால் அல்லது உங்களைத் தாழ்த்திக் கொண்டிருந்தால், அவர்கள் உண்மையில் உங்கள் நண்பர் இல்லை என்பதற்கான அறிகுறியாக இவை இருக்கலாம்.
அதிகப்படியான விமர்சனம் மிகவும் எதிர்மறையான நச்சுப் பண்பாகும். உங்களையும் உங்கள் திறன்களையும் நீங்களே சந்தேகிக்கூடும். இதுபோன்று நபர்களிடம் நீங்கள் கவனமாகவும் ஜாக்கிரதையாகவும் இருக்க வேண்டும்.
உங்களை விலக்குகிறார்கள்
உங்கள் ஆபிஸ் நண்பர் உங்களை முக்கியமான சந்திப்புகள் அல்லது நிகழ்வுகளில் இருந்து விலக்கி வைக்க தொடர்ந்து முயன்றால், அவர்கள் உங்கள் வாய்ப்புகளை குறைக்க முயற்சி செய்கிறார்கள் என்பதற்கான அறிகுறியாக இருக்கலாம். அவர்கள் உங்கள் வாழ்க்கையில் வெற்றியின் படியில் நீங்கள் ஏற விடாமல் தடுக்கலாம்.
உங்கள் சக பணியாளர்களிடமிருந்தும் உங்கள் பணிச்சூழலில் இருந்தும் நீங்கள் தனிமைப்படுத்தப்பட்டதாக உணரலாம். இவ்வாறு நீங்கள் உங்கள் அலுவலக நண்பருடன் இருந்தால், அவர்கள் உங்களுக்கு எதிரியாக இருக்கலாம்.
உங்கள் மற்ற சக ஊழியர்களை மோசமாக பேசுகிறார்கள்
உங்கள் ஆபிஸ் நண்பர் எப்போதும் உங்கள் மற்ற சக ஊழியர்களைப் பற்றி மோசமாகப் பேசினால் அல்லது அவர்களுக்கு எதிராக உங்களைத் தூண்டிவிட முயன்றால், அவர்கள் மோதலை உருவாக்கி சந்தேகத்தை விதைக்க முயற்சி செய்கிறார்கள் என்பதற்கான அறிகுறியாகும்.
இந்த நடத்தை மற்ற சக ஊழியர்களுடனான உங்கள் உறவுகளை பாதிக்கும். மேலும், இது உங்கள் நற்பெயருக்கு தீங்கு விளைவிக்கும். எல்லா ஊழியர்களையும் சமமாக மதிக்க வேண்டும். இதுபோன்ற நேர்மையற்ற மனிதர்களோடு இருக்கும் பழக்கங்களை தவிர்ப்பது, உங்கள் வாழ்க்கைக்கு நல்லது.



Click it and Unblock the Notifications













