உங்க காதலரிடம் இந்த அறிகுறிகள் இருந்தால் அவங்க உங்களை 'யூஸ்' பண்ணிக்க மட்டும்தான் பழகுகிறார்களாம்...!

காதல் எப்போதும் பாதுகாப்பு உணர்வு அளிப்பதாக இருக்க வேண்டும், அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி. துரதிர்ஷ்டவசமாக தற்போதைய காலக்கட்டத்தில், பல பெண்கள், இளம் பெண்கள் உட்பட, பெரும்பாலும் தங்கள் காதல் உறவுகளில் பாதுகாப்பற்றவராக உணர்கிறார்கள். தங்கள் காதலன் தங்களைப் பயன்படுத்து மட்டும் கொள்கிறார்களோ என்று அவர்கள் எப்போதும் பயப்படுகிறார்கள்.

புதிய உறவுகளில், உங்கள் துணையை மதிப்பிடுவது அவ்வளவு எளிதானதல்ல; எனவே, நீங்கள் அவர்களின் செயல்பாடுகளை கவனிக்க வேண்டும். ஒரு நபரின் பழக்கவழக்கங்கள் பொதுவாக அவரது நடத்தையை வெளிப்படுத்துகின்றன. சில அறிகுறிகளை உங்கள் துணையிடம் நீங்கள் அவசியம் கண்காணிக்க வேண்டும். இந்த அறிகுறிகள் உங்கள் துணை உங்களைப் பயன்படுத்துகிறாரா அல்லது உங்களை ஆர்வத்துடன் நேசிக்கிறாரா என்பதைப் புரிந்துகொள்ள உதவும்.

How To Find Your Boyfriend Is Using You in Tamil

உங்களை சிறப்பானவராக உணர வைக்கிறார்களா?
உறவுகளில் ஒருவரையொருவர் பாராட்டுவது அவசியம், ஏனெனில் இது ஒரு உறவில் நெருக்கத்தைக் கொண்டுவருகிறது. சில இளைஞர்கள் தங்கள் காதலியை மற்ற பெண்களுடன் ஒப்பிடுகிறார்கள், அவர்களின் தனிப்பட்ட உரிமையில் தலையிடுகிறார்கள் மற்றும் அவர்களை ஒருபோதும் சிறப்பாக உணர வைக்க மாட்டார்கள். இது உங்களுக்கு தொடர்ந்து நடந்தால், உங்கள் உறவில் ஏதோ தவறு இருக்கிறது என்று அர்த்தம். உங்கள் காதலன் உங்களைப் பயன்படுத்திக் கொண்டு மட்டுமே இருக்கலாம்.

அவருடன் உறவில் இருப்பது குற்ற உணர்வை ஏற்படுத்துகிறதா?
உங்களுக்குள் சின்ன சின்ன விஷயங்களில் சண்டை வந்தால், அதற்கு எப்போதும் நீங்களே பொறுப்பாக்கப் பட்டால், அது உறவில் அன்பின் பற்றாக்குறையைக் குறிக்கிறது. நீங்கள் தவறு செய்யாதபோது குற்றவாளியாக உணர்வதை நிறுத்துங்கள். நீங்கள் தொடர்ந்து உறவில் குற்றவாளியாக்கப்பட்டால் அந்த உறவை முறித்துக் கொள்வது புத்திசாலித்தனமாக இருக்கும். மேலும், உங்களை ஒரு சிறந்த நபராக மாற்ற முயற்சிப்பதில் தவறில்லை. ஆனால் இந்த மாற்றங்கள் அன்பு மற்றும் கவனிப்பின் மூலம் செய்யப்பட வேண்டும், குற்ற உணர்ச்சியால் அல்ல.

அடிக்கடி காணாமல் போவது
நீங்கள் உங்கள் துணையுடன் வெளியே செல்ல திட்டமிடும் போது திடீரென அவர்கள் அதனை கேன்சல் செய்யலாம். அவர் தொடர்ச்சியாக இதனை செய்தால் உங்களை விட அவருக்கு முக்கியமான விஷயம் ஏதோ இருக்கிறது என்று அர்த்தம். அவருக்கு வசதியான நேரத்தில் மட்டுமே உங்களுடன் நேரம் செலவழிப்பதை வழக்கமாக வைத்திருந்தால் அவர் உங்களை பயன்படுத்தி மட்டுமே கொண்டிருக்கலாம்.

உறவில் சமநிலையின்மை
உங்கள் உறவு புதியதாக இருந்தால்,அதில் சமரசம் செய்வது கடினம். இருப்பினும், உங்கள் காதலர் உங்கள் கருத்தை மதித்து, அந்த சமநிலையை பராமரிக்க எப்போதும் தயாராக இருந்தால் உங்கள் உறவில் எப்போதும் சமநிலை இருக்கும். ஆனால் அவர் தனது "அதிகாரத்தை" விட்டுக்கொடுக்க விரும்பவில்லை என்றால், அத்தகைய கட்டுப்படுத்தும் உறவைத் தவிர்ப்பதற்கு இதுதான் சரியான நேரம்.

உணர்ச்சிகரமாக முட்டாளாக்குவது
உங்கள் காதலன் உங்கள் பலம் மற்றும் பலவீனங்களை அறிந்திருக்கிறார், மேலும் அதை உங்களுக்கு எதிரான உணர்ச்சிகரமான கருவியாக அடிக்கடி பயன்படுத்துகிறார். இந்த நிலைமை உங்கள் உறவில் பொருந்தினால், நீங்கள் அந்த உறவை உடனடியாக புறக்கணிக்க வேண்டும். நீங்கள் எப்போதும் குற்ற உணர்வை உணர்ந்தால் அல்லது உங்கள் துணை உங்கள் மீது ஆதிக்கம் செலுத்துவதை நீங்கள் கவனித்தால், உங்கள் உறவு தேவையானதா என்பதை சிந்திக்க வேண்டும்.

Desktop Bottom Promotion