Latest Updates
-
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் பணம் சம்பாதிக்க கஷ்டப்படுவாங்களாம்.. உங்க பிறந்த தேதி இதுல இருக்கா? -
பூண்டும், கறிவேப்பிலையும் இருந்தா.. இப்படி தொக்கு செய்யுங்க.. 3 மாதம் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
சுக்கிரன் சனிபகவான் ஆளும் நட்சத்திரத்திற்கு செல்வதால் இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுதாம் -
எந்த ஆரோக்கிய பிரச்சனைக்கு எந்தப் பழம் சிறந்தது? விளக்கும் டாக்டர்.சிவகுமார்! -
சாணக்கிய நீதி படி இந்த 6 நபர்கள் உங்களுக்கு எதிரியானால் உங்களை யாராலும் காப்பாற்ற முடியாதாம் - ஜாக்கிரதை -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது..! -
1 கப் தேங்காயும், 1 கைப்பிடி புதினாவும் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 04 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம் -
100 ஆண்டுகள் கழித்து நிகழும் அபூர்வ கிரக பெயர்ச்சி: ஜூன் 11-ல் இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்! -
1 மாங்காயும், 3 தக்காளியும் இருந்தா.. ஒருவாட்டி இந்த சட்னியை செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்..
உங்க ஆபிஸில எல்லார் முன்னாடியும் அவமானப்பட்டு நின்னு இருக்கீங்களா? அப்ப இத கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க!
நாம் அனைவரும் ஏதோ ஒரு அலுவலகத்தில் அல்லது நிறுவனத்தில் வேலை செய்துகொண்டிருக்கிறோம். அங்கு நாம் ஒவ்வொருவரும் சந்திக்கும் பிரச்சனைகள் வெவ்வேறு மாதிரி இருக்கலாம். ஆனால், பணியிடத்தில் கட்டாயம் சில பிரச்சனைகளை நாம் சந்திக்க வேண்டியிருக்கும்.
நீங்கள் பணிபுரியும் இடத்தில் இதுவரை ஏதேனும் மோசமான சூழ்நிலைகளை கையாண்டு உள்ளீர்களா? இல்லை கையாள முடியாமல் திணறி இருக்கிறீர்களா? அலுவலகத்தில் சூழ்நிலைகளை சமாளிக்க முடியாமல் இருப்பது முற்றிலும் சங்கடமானதாகவும் மன அழுத்தம் நிறைந்ததாகவும் இருக்கும். இது உங்களுக்கு தாழ்வு மனப்பான்மையையும் ஏற்படுத்தலாம்.

எல்லாவற்றிலும் மோசமான பகுதி என்னவென்றால், உங்கள் முதலாளி அல்லது பணியிடத்தில் உள்ள சக ஊழியர்களால் நீங்கள் குறிவைக்கப்படுவீர்கள் என்ற பயத்தில், விரும்பும் விதத்தில் கூட உங்களால் செயல்பட முடியாது. மிகவும் மோசமான பணியிட சூழ்நிலைகளில் சிலவற்றையும் அவற்றை நீங்கள் எவ்வாறு கையாளலாம் என்பதை பற்றியும் இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.
சக பணியாளர் உங்கள் யோசனைகளைத் திருடும்போது
உங்கள் அலுவலகத்தில் குழுப்பணியில் அனைவரும் சேர்ந்து ஈடுபடலாம். ஆனால் உங்கள் வேலையைப் பற்றிய சொந்த கருத்துக்களை நீங்கள் மட்டுமே பதிவு செய்ய வேண்டும். இல்லையென்றால், உங்கள் சக பணியாளர் உங்கள் வேலையின் யோசனைகள் மற்றும் கருத்துக்களை திருடும் எண்ணத்தைக் கொண்டிருக்கலாம்.
ஆதலால், உங்களுடைய யோசனைகள் மற்றும் கருத்துக்களை பொதுவில் செல்ல தயங்காதீர்கள். வேலையைப் பற்றிய கருத்துக்காக நீங்கள் காத்திருக்க விரும்பினால், அது பரவாயில்லை, ஆனால் உங்கள் யோசனைகளை உரக்கச் சொல்லத் தொடங்குங்கள். ஏனென்றால் உங்கள் சக பணியாளர்கள் தந்திரமாக உங்கள் யோசனைகளைத் திருடி, அவர்களே யோசித்ததுபோல கூறலாம். இது உங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகள் மற்றும் பாராட்டுக்களை தடுக்கலாம்.
உங்களை குறை கூறுவது
உங்கள் முதலாளி செய்த தவறுக்களுக்கு உங்களை குறை கூறுவது மிகவும் தந்திரமானதாக இருக்கலாம். இது மிகவும் தவறான விஷயம். உங்கள் முதலாளியுடன் எந்த பெரிய சண்டையும், அசிங்கமான மோதலையும் தவிர்க்க விரும்பினால், அதை விட்டுவிடுங்கள். ஆனால் உங்கள் முதலாளி அவர்களின் தவறுகளுக்காக உங்களைத் தொடர்ந்து குற்றம் சாட்டினால், நீங்கள் உங்கள் முதலாளியுடன் தனிப்பட்ட முறையில் பேசலாம்.
என்ன தவறு என்று அவர்களிடம் மிகவும் நிதானமாகவும் உணர்வுபூர்வமாகவும் கேளுங்கள். அந்த தவறை நீங்கள் செய்யவில்லை என்று அவர்களிடம் சொல்லுங்கள். இதை உங்கள் முதலாளியின் கவனத்திற்குக் கொண்டு வருவதன் மூலம், உங்கள் மேலாளருக்கு நீங்கள் 'அவர்களுடைய செயல்களைப் பற்றித் தெரியும்' என்பதைத் தெரியப்படுத்துகிறீர்கள். எதிர்காலத்தில் அவர்கள் இந்தத் தவறைச் செய்ய மாட்டார்கள் என்று நம்புங்கள்.
சரியான நேரத்தில் முடித்து கொடுங்கள்
முதலில், நீங்கள் ஏன் தாமதமாக வேலை செய்ய வேண்டும் என்று உங்கள் முதலாளி விரும்புகிறார் என்பதன் காரணத்தை புரிந்துகொள்ள முயற்சிக்கவும். அன்றிரவுக்குள் சமர்ப்பிக்க வேண்டிய திட்டம் பற்றியா அல்லது மறுநாள் காலைக்கு மாற்றலாமா? என்பதை பற்றி உங்கள் முதலாளியிடம் ஆலோசனை செய்யுங்கள்.
திட்டத்தின் சில பகுதிகளை சிறிது நேரத்திற்குள் செய்து முடிப்பதாகவும், மறுநாள் காலையில் சீக்கிரம் எழுந்து சரியான நேரத்தில் செய்து முடிப்பதாகவும் உங்கள் முதலாளிக்கு உறுதியளிக்கலாம். உங்களுக்கு ஒரு குறிப்பிட்ட வேலை கொடுக்கப்பட்டிருந்தால், அதைத் தவிர்க்க முடியாது, ஆனால் நீங்கள் அதை சரியான நேரத்தில் முடித்துக்கொடுக்க வேண்டும்.
உங்களைப் பற்றிய ஆதாரமற்ற வதந்திகள்
பணியிடத்தில் உங்களைப் பற்றிய வதந்திகளைக் கையாள்வது மிகவும் மோசமான சூழ்நிலையாக இருக்கலாம். இருப்பினும், உங்கள் கேள்விகள் மற்றும் பதில்களுடன் நீங்கள் நேர்மையாக நடந்துகொள்ள வேண்டும். உங்கள் சக ஊழியர்களிடம் அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று கேளுங்கள் - வதந்திகள் உண்மை என்று நினைக்கிறீர்களா?
வதந்திகள் உண்மையல்ல என்று கதையின் உங்கள் பக்கத்தை விளக்குவதன் மூலம் நீங்கள் தொடங்கலாம். பின்னர் நீங்கள் சொல்லலாம், தயவுசெய்து இந்த வதந்தியை மீண்டும் பரப்பாமல் இருக்க அவர்களிடம் கேட்டுக்கொள்ளலாம். நீங்கள் உறுதியாக இருக்க வேண்டும் ஆனால் உங்கள் தொனியில் அமைதியாகவும் இருக்க வேண்டும்.



Click it and Unblock the Notifications

