Latest Updates
-
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்! -
வாஸ்து படி இந்த தவறுகள் உங்கள் வீட்டில் இருந்தால் ராகுவின் சாபம் உங்களை பாடாய்படுத்துமாம் - ஜாக்கிரதை -
உங்க கழுத்து கருப்பா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க... -
பட்டாணி மசாலா சாதம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, பிரியாணி மாதிரியே இருக்கும் -
சனி பகவான் உதயமாகியிருப்பதால் இன்று முதல் இந்த 5 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருந்தால் உங்க உடலில் நீரின் அளவு ஆபத்தான கட்டத்திற்கு சென்றுவிட்டதாம் - ஜாக்கிரதை -
கோடை வெயிலில் வீடு அனல் பறக்குதா? இந்த வாஸ்து செடிகள் இருந்தா போதும்… குளிர்ச்சியும் அதிர்ஷ்டமும் தேடி வரும்! -
வாஸ்துப்படி மணி பிளாண்ட் வைக்கும் திசை இதுவா? பணவரவு தடையின்றி கொழிக்க இதை உடனே மாற்றுங்க! -
கசப்பில்லாத பொன்னாங்கண்ணி கீரை கூட்டு - 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு சாப்பிடுங்க..
ஆண்களே! உங்க மனைவியோடு நீங்க எமோஷ்னலாக இணைத்திருக்க என்ன பண்ணனும் தெரியுமா?
உறவுகளில் ஆண்கள் உணர்ச்சி ரீதியாக இணைந்திருக்க மாட்டார்கள், தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த மாட்டார்கள் என்பது பொதுவான கருத்து. இளம் வயது முதலே அவர்கள், தங்களை வலிமையானவர்களாக காட்டிக்கொள்கிறார்கள்.
பொதுவாக உறவுகளில் பெண்கள் மட்டும் தான் உணர்ச்சி ரீதியாக பிணைந்திருப்பார்கள். ஆனால், மனிதர்களாய் பிறந்த அனைவருக்குமே உணர்ச்சிகள் இருக்கும். இது இயல்பானது. ஆனால், ஆண்கள் தங்கள் உணர்ச்சிகளை தங்களுக்குள்ளே கட்டுப்படுத்த சமூகத்தால் நிர்பந்திக்கப்படுகிறார்கள். இது பெரும்பாலும் அவர்களின் திருமண வாழ்க்கையிலும் காணப்படுகிறது.

பல ஆண்கள் தங்கள் துணையுடன் உணர்வுபூர்வமாக இணைந்திருக்கத் தவறிவிடுகிறார்கள். இது இறுதியில் அவர்களின் உறவுகளுக்குள் பாதிப்பை ஏற்படுத்தலாம். ஆண்களே! உங்கள் மனைவியுடன் உணர்வுபூர்வமாக இணைந்திருக்க உதவும் வழிகளைப் பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.
உடல் ரீதியாக நெருக்கமாக இருங்கள்
உடல் ரீதியாக நெருக்கமாக இருங்கள். உடல் ரீதியாக நெருக்கமாக இருப்பது என்பது செக்ஸை மட்டும் குறிக்கவில்லை. ஒவ்வொரு சிறுசிறு விஷயங்களிலும், செயல்பாடுகளிலும் அவளோடு நெருக்கமாக இருக்க முயற்சி செய்யுங்கள்.
நடைபயிற்சி போது மற்றும் டிவி பார்க்கும்போது அவள் கையைப் பிடித்துக் கொள்ளுங்கள் அல்லது சமைலறையில் சென்று அவளுக்கு உதவுவதோடு, உடல் ரீதியான அணைப்பையும் கொடுங்கள். இந்த பாலியல் அல்லாத தொடுதல்கள் அனைத்தும் உங்கள் மனைவியுடன் உணர்ச்சி ரீதியான தொடர்பை வெளிப்படுத்துகின்றன.
பிரச்சனைகளை ஒன்றாகச் சமாளியுங்கள்
தம்பதிகள் இருவரும் சேர்ந்து ஒன்றாக பிரச்சனைகள் மற்றும் சவால்களை சந்திக்கும் போது, அது உங்களுக்குள் நெருக்கத்தை ஏற்படுத்தும். கஷ்டமான சூழ்நிலைகளில் ஒருவரை பற்றி ஒருவர் நன்றாக புரிந்துகொள்ள முடியும். அப்போது கிடைக்கும் ஆதரவும், அணைப்பும் உறவை நன்றாக வலுப்படுத்தும்.
ஆரோக்கியமான தொடர்பு கொள்ளுங்கள்
உங்கள் மனைவியுடன் பேச நேரம் ஒதுக்குங்கள். ஆரோக்கியமான தகவல் தொடர்பு உங்கள் உறவை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். குடும்ப விஷயங்களை பற்றி இருவரும் ஒன்றாக சேர்ந்து விவாதிக்கலாம்.
உரையாடலில் சுறுசுறுப்பாக பங்கேற்பதன் மூலம், உங்கள் மனைவியின் தேவையைப் பற்றி தெரிந்துகொண்டு, அவற்றைப் பூர்த்தி செய்ய முயற்சி செய்யுங்கள். உங்களின் இந்த எளிய முயற்சி உங்கள் மனைவியின் கருத்தை நீங்கள் எவ்வளவு மதிக்கிறீர்கள் என்பதைக் காட்டுகிறது. இது அவர்களை மேலும் உறவில் நெருக்கமாக வர வைக்கிறது.
அதிக கவனம் செலுத்துங்கள்
உங்கள் மனைவியுடன் உணர்வுபூர்வமாக இணைய, அதிக கவனம் செலுத்த வேண்டும். உங்கள் மனைவியின் ஒவ்வொரு தேவை மீதும் நீங்கள் கவனம் செலுத்துகிறீர்கள் என்பதை அவர் அறியும்போது, உங்களினால் நெருக்கமாக ஈர்க்கப்படுவார். உங்கள் மனைவி செய்யும் எல்லா விஷயங்களுக்கும் பாராட்டுக்களை கூறுங்கள். இது அவள் உறவில் புறக்கணிக்கப்பட்டதாக உணராமல் இருக்க வைக்கும்.
வெளியே அழைத்து செல்லுங்கள்
மாதம் ஒருமுறை ஓர் சிறிய பயணத்தை திட்டமிடலாம். இல்லையென்றால், டின்னர், படம் பார்க்க செல்வது மற்றும் பூங்காவிற்கு அழைத்து செல்வது போன்ற விஷயங்கள் மூலம் உங்கள் மனைவியை ஆச்சரியப்படுத்துங்கள்.
இதனால், உறவில் அவர் நெருக்கமாக உணரலாம். உணர்ச்சிபூர்வமாக இணைந்திருக்க புதிய விஷயங்களை ஒன்றாகத் திட்டமிடுவதன் மூலம், உங்கள் உறவை மகிழ்ச்சியாகவும் வலுவாகவும் வைத்திருக்கலாம்.
ஊக்குவிக்க வேண்டும்
உங்கள் மனைவியின் பொழுதுபோக்கு செயல்பாடுகளில் நீங்கள் ஆர்வத்தை வெளிப்படுத்தும்போது, அது உங்களிடையே நெருக்கத்தை அதிகரிக்க உதவும். உங்கள் மனைவியிடம், அவளது பொழுதுபோக்குகள் பற்றி கேட்கும்போது அவள் நேசிக்கப்படுவதையும் மதிக்கப்படுவதையும் உணருவாள். மேலும், அவர் நீண்ட காலமாக செய்ய விரும்பும் ஒன்றைத் தொடர உங்கள் மனைவியை நீங்கள் ஊக்குவிக்க வேண்டும்.



Click it and Unblock the Notifications
