Latest Updates
-
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்!
தம்பதிகளே! சோஷியல் மீடியாவில் நீங்க பண்ணும் 'இந்த' 5 தப்பு... உங்க திருமண வாழ்க்கையே வீணாக்கிடுமாம்!
இன்றைய நவீன மற்றும் தொழில்நுட்ப உலகில் சமூக ஊடகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. காலையில் தூங்கி எழுந்ததிலிருந்து இரவு தூங்க செல்வது வரை என பல விஷயங்களை மக்கள் அதில் பகிர்ந்து கொள்கிறார்கள். சிலர் தங்கள் தனிப்பட்ட மற்றும் உறவு வாழ்க்கையை பற்றியும் பகிர்கிறார்கள்.
சமூக ஊடகங்கள் தம்பதிகளின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். அதை தம்பதிகள் எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பதை பொறுத்து சமூக ஊடகங்கள் தம்பதிகள் வாழ்க்கையில் நன்மை மற்றும் தீமைகளை ஏற்படுத்தும். சமூக ஊடகங்கள் மக்களிடையே, குறிப்பாக திருமணமான தம்பதிகளிடையே பல மோதல்களைத் தூண்டுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

சமூக ஊடகங்களில் ஆரோக்கியமான உறவுகளைப் பேணுவது சவாலானது. மேலும் நீங்கள் செய்யும் சில தவறுகள் உங்கள் இருக்கும் உறவுகளில், குறிப்பாக திருமணத்தில் மிகவும் மோசமான விளைவை ஏற்படுத்தும். உங்கள் உறவு வாழ்க்கைக்கு தீங்கு விளைவிக்கும் ஆறு பொதுவான சமூக ஊடக தவறுகள் பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளலாம்.
அதிகப்படியாக பகிர்வது
உங்கள் உறவு, தனிப்பட்ட வாழ்க்கை அல்லது உங்கள் துணையை பற்றிய அந்தரங்க விவரங்களை அவர்களின் அனுமதியின்றி சமூக ஊடகங்களில் தொடர்ந்து பகிர்வது மற்றவருக்கு சங்கடமானதாகவும் வெறுப்பாகவும் இருக்கும். நீங்கள் ஒரு சமூக ஊடக காதலராக இருக்கலாம். அதற்காக, உங்களை போல உங்கள் துணையையும் இருக்க வேண்டும் என நீங்கள் கட்டாயப்படுத்த முடியாது.
உங்கள் கூட்டாளியின் தனியுரிமைக்கு மதிப்பளித்து, நீங்கள் சமூக ஊடகங்களில் பதிவிடும் பதிவுகளில் அவர்களின் எல்லைகளைக் கடக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
பொதுவான வாதங்கள்
உங்களுக்கும் உங்க துணைக்கும் இடையில் இருக்கும் தனிப்பட்ட வாதங்கள் மற்றும் பிரச்சனைகளை சமூக ஊடகங்களில் பகிர்வது உறவின் பேரழிவுக்கான செய்முறையாகும். இது தம்பதிகள் இருவருக்குள் இருக்கும் பிரச்சனை பொது இடத்தில் தம்பட்டம் அடிப்பதை தவிர வேறில்லை.
இது உங்கள் ஆன்லைன் நண்பர்கள் மற்றும் பின்தொடர்பவர்களிடமிருந்து தேவையற்ற கருத்துகளையும் தீர்ப்புகளையும் வழங்கலாம். இது உங்கள் உறவில் குறிப்பிடத்தக்க பாதிப்பை ஏற்படுத்தும். தம்பதிகளுக்குள் இருக்கும் பிரச்சனைகளை தனிப்பட்ட முறையில் மற்றும் மரியாதையுடன் மோதல்களைத் தீர்க்க முயற்சி செய்ய வேண்டும்.
உறவை ஒப்பிடுதல்
இங்கு எல்லா நபர்களும், அவர்களின் வாழ்க்கையையும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. சமூக ஊடகங்களில் நீங்கள் பார்ப்பவர்களுடன் உங்கள் உறவை ஒப்பிடுவது போதாமை அல்லது பொறாமை உணர்வுகளுக்கு வழிவகுக்கும்.
பெரும்பாலான நேரங்களில், சமூக ஊடகங்களில் நீங்கள் பார்ப்பது உண்மையிலிருந்து பெரிதும் வேறுபடுகிறது. நீங்கள் வேறொரு தம்பதியின் சிறப்பம்சங்களை பார்க்கிறீர்கள், உறவுகளின் திரைக்குப் பின்னால் நடக்கும் போராட்டங்களை அல்ல. உறவு என்பது எந்நேரமும் மகிழ்ச்சியானதாக மட்டும் இருக்காது, பிரச்சனைகள் நிறைந்ததாகவும் இருக்கும்.
தரமான நேரத்தை செலவிடாமல் இருப்பது
ஓர் உறவு வலுவானதாக மாற்ற தம்பதிகள் இருவரும் தினமும் தரமான நேரத்தை செலவிட வேண்டும். ஆனால், நீங்கள் உங்கள் துணையுடன் தரமான நேரத்தை செலவழிப்பதை விட உங்கள் தொலைபேசி அல்லது சமூக ஊடகங்களுக்கு முன்னுரிமை அளித்தால், அது உறவில் புறக்கணிப்பு மற்றும் தூர உணர்வுகளுக்கு வழிவகுக்கும்.
சமூக ஊடகங்கள் உங்களுக்குள் இருக்கும் இடைவெளியை அதிகரிக்கும். தம்பதிகள் இருவரும் நேருக்கு நேர் உரையாடலில் ஈடுபட முயற்சி செய்யுங்கள்.
கடலை போடுவது அல்லது அதிகப்படியான விருப்பம்
விஷயங்களை எல்லா நபர்களும் ஒரே மாதிரியாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். நீங்கள் சமூக ஊடகங்களில் மற்றவரிடம் கடலை போடுவது அல்லது அதிகப்படியான விருப்பம் தெரிவிப்பது, உங்கள் உறவுக்கு நல்லதல்ல.
மற்றவர்களை ஈர்க்கும் வகையில் நடந்துகொள்வது அல்லது அதிக விருப்பு மற்றும் சாத்தியமான காதல் ஆர்வங்களின் இடுகைகளில் கருத்து தெரிவிப்பது உங்கள் தற்போதைய உறவில் நம்பிக்கையைக் குறைக்கும். உங்கள் துணையுடனான நம்பிக்கையையும் மரியாதையையும் பாதுகாக்க தெளிவான எல்லைகளை பராமரிக்க வேண்டியது முக்கியம்.



Click it and Unblock the Notifications
