Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
உங்க மனைவியை சந்தோஷப்படுத்த சிம்பிளான 7 வழிகள்.. இதை ட்ரை பண்ணுங்கள்..!
தினமும் காலையில் நீங்கள் எழுந்தவுடன் உங்கள் மனைவியிடம் சிரித்துக்கொண்டே குட் மார்னிங் சொல்வதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.. அது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. நீங்கள் விழித்தெழுந்து ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியுடன் பேசத் தொடங்கும் போது, ஒரு பாசிடிவான எனர்ஜியால் மகிழ்ச்சியாக உணர்வீர்கள்..
அப்படி காலை வணக்கம் சொல்லும் போது ஒரு சிறிய அணைப்பு கொடுத்து சொல்லுவது இன்னும் சிறப்பு.. உங்கள் அரவணைப்பு நிச்சயமாக உங்கள் மனைவிக்கு மகிழ்ச்சியைத் தரும். உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் இடையிலான பிணைப்பை நன்கு வலுப்படுத்தும்.. இந்த பழக்கங்களில் சிலவற்றை வழக்கமாக செய்ய நீங்கள் ஆர்வமாக இருந்தால். கணவன்-மனைவி இடையே வலுவான மற்றும் ஆரோக்கியமான உறவை வளர்க்க முடியும்.. வாங்க இதுபோல இன்னும் சில பழக்க வழக்கங்கள கூறித்து இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்..

1. கணவன் மனைவி இருவரும் எப்போதும் ஒருவருக்கொருவர் வெளிப்படையாகவும் நேர்மையாகவும் இருப்பதைப் பழக்கப்படுத்துங்கள். இது உங்கள் எண்ணங்கள், உணர்வுகள் மற்றும் கவலைகளை மரியாதையுடன் பகிர்ந்து கொள்வது மற்றும் உங்கள் துணையிடம் முக்கியமான விஷயங்களை கேட்பது ஆகியவை தயக்கம் இல்லாம இருக்க உதவும்..
2. மனைவி சொல்லுவதை கேட்கும் போது எந்தவிதமான குறிப்பாக போனில் வீடியோ பார்ப்பது அல்லது போன் கால் பேசுவது உள்ளட்டவை இல்லாமல் கவனச்சிதறல்கள் இல்லாமல் கேட்க வேண்டும்..
3. மனைவியுடன் ஒன்றாக செலவழிக்க அர்ப்பணிப்பு நேரத்தை ஒதுக்குங்கள். அது ஒரு வார இரவாகவோ, வார இறுதிப் பயணமாகவோ அல்லது வீட்டில் அமைதியான மாலை நேரமாகவோ இருக்கலாம்.
4. உங்கள் மனைவி செய்யும் பெரிய மற்றும் சிறிய விஷயங்களுக்கு நன்றி தெரிவிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். இது ஒருவருக்கொருவர் நேர்மறையான உணர்வுகளையும் பாராட்டுகளையும் வலுப்படுத்த உதவுகிறது.
5. எப்போதுமே உங்களுடைய தவறுகளை ஒப்புக்கொள்ளவும். அதற்காக மன்னிப்பு கேட்க தயங்க வேண்டாம். மறுபடியும் இதே போல் தவறுகள் நடக்காத வண்ணம் முடிந்தளவு பார்த்துக் கொள்கிறேன் என்ற உறுதியை உங்கள் மனைவியிடம் சொல்லுங்கள் . உங்கள் பேச்சின் உறுதி தன்மையை வைத்தே மனைவி மிகவும் மகிழ்ச்சி அடைவார். உளமாற தவறுகளை ஒப்புக் கொள்ளும்போது நீங்கள் எப்போதும் தவறான பாதைக்கு செல்லவே முடியாது.
6. உங்கள் மனைவி எதை சொன்னாலலும் அதனை மறுப்பு சொல்லாமல் அப்படியே செய்து முடிக்கவும். இதில் தவறு ஒன்றும் இல்லை. ஒவ்வொரு நாள் காலையில் நான் உனக்கு ஏதாவது உதவி செய்யவா என தாராளமாகவே அவரிடம் கேட்கவும். அப்படி உதவி செய்வதில் கொஞ்சம் சிரமம் ஏற்பட்டாலும் சீரான முறையில் செய்ய முயலுஙகள்..
7. உங்கள் மனைவியை நல்ல குடும்ப பெண்ணாக, நல்ல மனைவியாக, ஒரு நல்ல தாயாக, நல்ல மருமகளாக நீங்கள் நினைக்க ஆரம்பித்து அப்படியே தொடர்ந்து நினைவில் ஓடவிட்டு வந்தாலே நீங்கள் எப்படி எல்லாம் உங்கள் மனைவி இருக்க வேண்டும் என்று நடக்க வேண்டும் என்று நினைத்தீர்களோ அப்படியே அவர் உருமாறி விடுவார் என்பது உண்மை.



Click it and Unblock the Notifications