Latest Updates
-
May 2026 Monthly Horoscope: மே மாதம் ராஜவாழ்க்கை வாழப்போற 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்து மாற்றங்கள்: ஏப்ரல் 24-ல் இந்த சின்ன மாற்றத்தை செஞ்சா பணமழை கொட்டுமா? -
ஆண்களே! உங்க விந்துவை கெட்டிபடுத்தணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
நீல் ஆம்ஸ்ட்ராங் நிலாவிலிருந்து ரகசியமாக கொண்டுவந்த பொருட்கள் இப்ப கிடைச்சிருக்கு - அதுல என்னென்ன இருக்கு? -
12 ஆண்டுகள் கழித்து கடகம் செல்லும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு போதும் போதும் என்ற அளவுக்கு பணம் கொட்டபோகுது! -
5 பச்சை மிளகாயும், 1/4 கப் தேங்காயும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இப்படி சட்னி செய்யுங்க.. செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 24 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும் -
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம்
Happy Friendship Day 2024 : உங்க நண்பருக்கு என்ன பரிசு கொடுக்கலாம்? இதோ சில ஐடியாஸ்..!
நன்பன் என்ற உறவைக் கொண்டாட உருவாக்கப்பட்ட நாள்தான் இந்த நண்பர்கள் தினம். சர்வதேச நண்பர்கள் தினம் ஆண்டுதோறும் ஜூலை 30 கொண்டாடப்படும்.. 2011 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட தேதி.
அதே வேளையில், இந்தியா, வங்கதேசம் மற்றும் மலேசியா உள்ளிட்ட நாடுகளில் ஆகஸ்ட் மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. மேலும் 2024 இல் இது ஞாயிற்றுக்கிழமை ஆகஸ்ட் 04ஆம் தேதி கொண்டாடப்படுகிறது..

முக்கியத்துவம்
நம் அனைவருக்கும் இருக்கும் ஒரு மதிப்புமிக்க விஷயம் எதுவென்றால்.. அது கண்டிப்பாக நட்புதான். ஆம் நட்பு என்பது அன்பின் மற்றொரு சொல் என்றால் மிகையாகாது. வாழ்வில் எந்த சூழலிலும் பாசிட்டிவாக இருக்க ஒரே ஒரு சிறந்த நண்பர் இருந்தால் கூட போதும். நண்பர்கள் இல்லாத ஒரு மனிதனை இந்த உலகில் பார்க்கவே முடியாது.. நட்புக்காக உயிரையே விட்ட கதைகளாம் இந்த தமிழகத்தில் நிறைய உள்ளது.. இந்த அழகான உறவின் முக்கியத்துவத்தைக் குறிக்கும் வகையில், ஆகஸ்ட் மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் நண்பர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது.
மேலும் நட்பு என்பது ஜாதி, இனம், மதம் அல்லது மொழியை பொருட்படுத்தாமல் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களை ஒன்றிணைக்கும் ஒரு வலுவான உறவை உற்சாகமாக கொண்டாடும் வகையில் இந்நாள் கொண்டாடப்படுகிறது. நம் அனைவரையும் பாதுகாக்கும் ஒரு பாதுகாப்பு வலையை உருவாக்கலாம்.
கருப்பொருள் 2024
2024 ஆம் ஆண்டு நட்பு தினத்தின் கருப்பொருள் " பன்முகத்தன்மையை தழுவுதல், ஒற்றுமையை வளர்ப்பது" என்பதாகும் . நட்பு என்பது மக்களிடையே அமைதி மற்றும் செழிப்பை உறுதி செய்வதற்கான ஒரு அடிப்படை ஆயுதமாக இருக்கிறது. மேலும் சமூகங்களுக்கு இடையே சமூக நல்லிணக்கத்தையும் பேணுகிறது.
கிஃப்ட் ஐடியாஸ் 2024
1.பிரெண்ட்ஷிப் பேண்ட்
நண்பர்கள் பொதுவாக இந்த தினத்தில் ஒருவருக்கொருவர் பிரெண்ட்ஷிப் பேண்ட் கட்டி கொள்வார்கள். நண்பர்கள் தினத்தில் தங்கள் நபர்களை நேரில் பார்க்க முடியாமல் தொலைதூரத்தில் இருக்கும் மக்கள் தங்கள் நண்பர்களுக்கு சோஷியல் மீடியாக்கள் மூலம் வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்கிறார்கள்..
2. சாக்லேட்
உங்கள் நண்பர்களுக்கு சாக்லேட் பிடிக்கும் பட்சத்தில், இந்த நண்பர்கள் தினத்திற்கு உங்க பிரெண்ட்க்கு பிடித்த சாக்லேட்டுகள் ஒரு சிறந்த கிஃப்ட் ஐடியாவாக இருக்கும். நண்பர்கள் மீதான உங்கள் பாசத்தை வெளிப்படுத்த நீங்களே உங்கள் கைகளால் சாக்லேட்டுகள் தயாரித்து அதை அவர்களுக்கு பரிசாக அளிக்கலாம்.
3. டெடி பியர்
டெடி பியர் ஒரு பரிசாக ஆழமான முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது, இது ஆறுதல், அன்பு மற்றும் தோழமை ஆகியவற்றைக் குறிக்கிறது. அதன் மென்மையான, அன்பான இயல்பு அரவணைப்பு மற்றும் பாதுகாப்பின் உணர்வுகளைத் தூண்டுகிறது, இது கவனிப்பு மற்றும் பாசத்தை வெளிப்படுத்த சிறந்த பரிசாக அமைகிறது. பெரும்பாலும் குழந்தைப்பருவத்துடன் தொடர்புடைய, ஒரு கரடி கரடி, அப்பாவித்தனம் மற்றும் எளிமையான நேரங்களின் ஏக்கம் நிறைந்த நினைவுகளை மீண்டும் கொண்டு வர முடியும், இது ஒரு உணர்ச்சித் தொடுதலைச் சேர்க்கிறது.
4. பிரெண்ட்ஷிப் மக் (Friendship day Mug)
உங்கள் நண்பருக்கு நீங்கள் அவர்களுக்காக எப்போதும் இருப்பதை தெரிவிக்கும் வகையில் இந்த பிரெண்ட்ஷிப் டே மக் பரிசளிக்கலாம். ஆன்லைனில் உண்மை நட்பை பிரதிபலிக்கும் வகையில் பலவிதமான கவிதைகள் மற்றும் வார்த்தைகள் அடங்கிய ஏராளமான பிரெண்ட்ஷிப் டே மக் விற்பனையில் இருக்கின்றன.
5. பிரெண்ட்ஷிப் டே கார்டு
நட்பை கொண்டாடும் வகையிலான கவிதைகள் அடங்கிய பிரெண்ட்ஷிப் டே கிரீட்டிங் கார்டுகளை உங்கள் நண்பர்களுக்கு பரிசளிப்பதன் மூலம் அவர்களை மகிழ்ச்சியடைய செய்யலாம்.
6. உணவுகளை நீங்களே சமைத்து ட்ரீட் வைக்கலாம்
உங்கள் நண்பர்களுக்கு பிடித்த உணவு பதார்த்தங்களை நீங்களே வீட்டில் சமைத்து சர்பிரைஸாக அவர்களை அழைத்து பலவிதமான உணவுகளை சாப்பாடு சாப்பிடும் டெபிலில் அழகாக அழகு படுத்தி வைத்து, அன்பாக பரிமாறி ட்ரீட் வைத்து அசத்தலாம்.



Click it and Unblock the Notifications