பெண்களே! இந்த 5 விஷயத்தை உங்க கணவனிடம் நீங்க சொல்லாம மறைக்கணுமாம்...ஏன் தெரியுமா?

பல பெண்கள் தங்கள் கணவனிடம் எல்லாவற்றையும் சொல்ல வேண்டும் என்று நம்புகிறார்கள். கணவனிடம் எந்த விஷயத்தையும் மறைக்கக்கூடாது என நினைக்கிறார்கள். இவை நல்லது என்றாலும், எல்லா நேரமும் நல்லதல்ல. ஆம், சில விஷயங்களை உங்கள் கணவனுக்கு சொல்ல வேண்டிய எந்த அவசியமும் இல்லை.

ஆண்கள், எப்போதும் தங்களை ஓர் வலுவான ஆளுமையாக காட்டிக் கொள்கிறார்கள். மேலும் அவர்கள் தங்கள் வழியில் வரும் எந்தவொரு விமர்சனத்தையும் புகாரையும் அவர்களால் கையாள முடியும் என்று நினைக்கிறார்கள். ஆனால், அது அவர்களால் முடியாது. உங்கள் கணவனால் சில விஷயங்களை கையாள முடியாது.

Five Things You Should Hide From Your Husband In Tamil

ஆதலால், உங்கள் கணவரின் உணர்வுகளைப் பற்றி நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். மேலும் அவர் உண்மையில் பேச விரும்பாதபோதும் கவனமாக இருங்கள். உங்கள் கணவரிடம் நீங்கள் சொல்லக்கூடாத ஐந்து விஷயங்கள் உள்ளன. அவை என்னென்ன என்று இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.

எதையும் சொல்ல வேண்டாம்
உங்கள் நண்பர் அல்லது குடும்ப உறுப்பினர் உங்களிடம் ஏதாவது சொன்னால், யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று குறிப்பாகக் கேட்டால், நீங்கள் கண்டிப்பாக அதை செய்யக்கூடாது. அவர்கள் தங்களை பற்றிய ரகசியத்தை அல்லது தங்களுக்கு தெரிந்த ரகசியத்தை நம்பிக்கையுடனும் உங்களிடம் கூறியுள்ளார்கள்.

அதனால், அந்த விஷயத்தை உங்கள் கணவனிடம் கூற வேண்டிய எந்த அவசியமில்லை மற்றும் அவர் அதைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியதும் அவசியமில்லை. இது உங்கள் கணவரை நேரடியாகப் பாதித்தால் அல்லது உங்கள் உறவில் சுமையை ஏற்படுத்தினால், அந்த ரகசியத்தை அவரிடம் கூறலாம்.

உடல் தோற்றத்தை பற்றி கூறுவது
திருமணம் ஆனவுடன் கொஞ்சம் உடல் எடை கூடுவது என்பது சகஜம். அவரது எடை அதிகரிக்கலாம் மற்றும் வயிற்றில் தொப்பை வளருவதை நீங்கள் கவனிக்கலாம். ஆனால் அதைப் பற்றி நீங்கள் உங்கள் கணவனிடம் ஏதும் சொல்லத் தேவையில்லை. அவரது உடல் எடை அதிகரித்து இருப்பதை அவரே நன்கு அறிவார்.

உங்கள் கணவனின் உடல்நிலை குறித்து நீங்கள் மிகவும் அக்கறை கொண்டிருந்தால், அவர் உங்களுடன் நடைப்பயிற்சி, உடற்பயிற்சி அல்லது ஜிம்மில் சேர விரும்புகிறாரா என்று கேட்கலாம். வாரம் முழுவதும் ஆரோக்கியமான உணவுகளைச் செய்து அவருக்கு கொடுங்கள். மன அழுத்தத்தைக் குறைக்க ஆரோக்கியமான வழிகளைக் கண்டறிய உதவுங்கள்.

உங்கள் நண்பர்களின் நாடகம்
பெரும்பாலும், உங்கள் கணவர் உங்கள் நண்பரின் வாழ்க்கையைப் பற்றி கவலைப்படுவதில்லை. உங்கள் நண்பர்களை பற்றிய எந்த விஷயத்தையும், அவரிடம் சொல்ல வேண்டிய அவசியமில்லை. சில நேரம், சமீபத்திய நாடகத்தைப் பற்றிய ஒரு கதை அல்லது இரண்டு கதைகளைக் கேட்க அவர் உற்சாகமாக இருக்கலாம். ஆனால், எல்லா நேரமும் அவர் அப்படி இருக்க மாட்டார்.

குடும்பத்தில் உங்களுக்கு ஏற்படும் சிறு பிரச்சனைகள்
ஒரு குடும்பத்தில் பெரிய பிரச்சினைகள் ஏற்படும்போது, நிச்சயமாக அதை இருவரும் சேர்ந்து தீர்க்க வேண்டும். ஆனால், சின்ன சின்ன பிரச்சனைகளை உங்கள் கணவனிடம் எடுத்துச் செல்ல வேண்டியது இல்லை.

பெரும்பாலும், குடும்பத்தில் மாமியார்- மருமகள் சண்டை மற்றும் வாக்குவாதம் அதிகம் நடைபெறும். ஆதலால், வீட்டில் நடக்கும் சின்னசின்ன சண்டைகளை ஒவ்வொரு முறையும் உங்கள் கணவரிடம் சொல்ல வேண்டிய அவசியமில்லை. இது உங்களுக்குள் பிரச்சனைகளை உருவாக்கலாம்.

ஏனெனில், உங்கள் கணவர் தனது குடும்பத்தை அதிகம் நேசிப்பார். நீங்கள் அவர்களைப் பற்றி புகார் செய்வதைக் கேட்பது அவருக்கு கடினமாக இருக்கும். ஒரு தீவிரமான பிரச்சனை இல்லாவிட்டால், உங்கள் குடும்பத்தைப் போல அவருடைய குடும்பத்தை நேசிக்க முயற்சி செய்யுங்கள். அதிலிருந்து உங்களுக்கு அற்புதமான உறவுகள் கிடைக்கலாம்.

உங்கள் பெற்றோர்கள் சொல்வதை கூற வேண்டாம்
சில பெண்கள், அவரது பெற்றோர், கணவனை பற்றி ஏதும் குறை கூறினால், அதை அப்படியே கணவனிடம் சொல்லி விடுகிறார்கள். உங்கள் கணவரை உங்கள் அப்பா, அம்மா மோசமானவர் என்று நினைத்தால், அதை அவருக்கு தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை. உங்கள் கணவனின் உணர்வுகளைப் பாதுகாக்க வேண்டிய இடம் இது.

அவர் இப்போதும் எப்போதும் உங்களுடையவர், உங்களுக்கானவர். நீங்கள் அதிர்ஷ்டசாலி என்றால், உங்கள் குடும்பம் முழுவதுமாக இருக்கும். உங்கள் பெற்றோர் அவரை புரிந்துகொள்ள சில காலம் ஆகலாம். அவர் நல்லவராக இருக்கும்போது, உங்களை நன்றாக பார்த்துக்கொள்ளும்போது, கண்டிப்பாக உங்கள் குடும்பத்தினர் அவரை நேசிப்பார்கள்.

Desktop Bottom Promotion