Latest Updates
-
சனிப்பெயர்ச்சி 2026: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், எந்த ராசிக்கு ஆபத்தாகவும் இருக்கப்போகுது தெரியுமா? -
4 வெங்காயம் இருந்தா.. இட்லிக்கு இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப மோசமான நாளாக இருக்குமாம்...! -
கேதுவின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம்... உங்க ராசி என்ன? -
ஹோட்டல் ஸ்டைல் ராயல் தேங்காய் சட்னி ரெசிபி... இந்த பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க... செமையா இருக்கும்...! -
புடலங்காய் வாங்குனா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க...எல்லாத்துக்கும் செம சைடிஷா இருக்கும்! -
ஆரோக்கியமான விந்தணுவின் அறிகுறிகள்... உங்ககிட்ட இந்த அறிகுறிகள் இருக்கா? செக் பண்ணிக்கோங்க...! -
இந்த 4 ராசிக்காரங்க சாத்தானின் செல்ல குழந்தைகளாம்... தீய குணங்கள்தான் இவங்ககிட்ட அதிகமா இருக்குமாம்,,,! -
கொங்குநாடு தக்காளி குருமா ரெசிபி... இதை ஒருதடவை செஞ்சு பாருங்க...இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும்...! -
2K கிட்ஸ் அதிகம் விரும்பும் Slow Dating என்றால் என்ன? இளைஞர்கள் ஏன் டேட்டிங்கை விரும்புகிறார்கள் தெரியுமா?
ஸ்பெயின் இளவரசியை திருமணம் செய்யும் வாய்ப்பை வேண்டாமென உதறிய விளையாட்டு வீரர்... காரணம் என்ன தெரியுமா?
பொதுவாக இளவரசிகள் நினைத்ததெல்லாம் நடக்கும் என்று நினைப்பார்கள். ஆனால் நிஜ வாழ்க்கையில் அப்படி நடப்பதில்லை. சமீபத்தில் ஒரு அரச குடும்பத்தை சேர்ந்த அழகான நிஜ வாழ்க்கை இளவரசியின் காதல் கதையில் எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஸ்பெயினின் பட்டத்து இளவரசி லியோனர், இளம் கால்பந்து வீரர் ஒருவரின் மீது காதல் கொண்டதாக சொல்லப்படுகிறது. அந்த வீரர் FC Barcelona அணியின் வளர்ந்து வந்த திறமையான பாப்லோ கவி என்பவராவார்.
இந்த கதையில் சுவாரசியமான பகுதி என்னவென்றால், பாப்லோ கவி இளவரசியின் காதலை நிராகரித்ததாக சொல்லப்படுகிறது. அரச குடும்பத்தில் திருமணம் செய்வது என்பது சாதாரண மனிதர்களின் கனவாகும், இந்த வாய்ப்பு கிடைத்தால் யாருமே விடமாட்டார்கள். ஆனால் பாப்லோ கவி ஒரு நாட்டின் அரசருடைய மாப்பிளையாகும் வாய்ப்பை நிராகரித்து, அவர் காதலியின் மீது கொண்ட காதலில் உறுதியாக இருந்திருக்கிறார் என சொல்லப்படுகிறது.

இளவரசி லியோனர்
ஸ்பெயின் மன்னர் ஆறாம் ஃபெலிப் மற்றும் ராணி லெடிசியாவின் மூத்த மகள் தான் இளவரசி லியோனர். அக்டோபர் 31, 2005 இல் இவர் பிறந்துள்ளார். இவர் தான் ஸ்பானிஷ் சிம்மாசனத்தின் பட்டத்து இளவரசியாவார். இளவரசி புத்திக்கூர்மை, ஆடம்பரம் மற்றும் வசீகரமான அழகு போன்ற அற்புத குணங்கள் நிறைந்தவராக வர்ணிக்கப்படுகிறார். சிறந்த திரைப்பட நடிகைகளுடன் அவரது வசீகரம் போட்டியிடுவதாக மக்கள் பேசிக் கொள்கிறார்கள். பிறப்பிலேயே புகழ் மிக்கவராக இருந்த போதிலும், லியோனர் தனித் தன்மையால் அறியப்படுகிறார். அவரது தனிப்பட்ட வாழ்க்கையின் மீது மற்றவர்களின் கவனத்தை ஈர்க்காமல் பார்த்து கொண்டார். அதனால்தான் அவரது உறவு மற்றும் காதல் பற்றி ரகசியமாகவே உள்ளது.
பாப்லோ கவி
பாப்லோ மார்ட்டின் பயஸ் கவிரா என்கிற முழு பெயர் கொண்ட இவரை தான் பாப்லோ கவி என அழைக்கிறார்கள். இவர் ஸ்பெயினின் சிறந்த இளம் கால்பந்து வீரர்களில் ஒருவர். இவர் La Liga club FC Barcelona மற்றும் ஸ்பானிஷ் தேசிய அணிக்காக மைய மிட்ஃபீல்டராக விளையாடுகிறார். இவர் 2022 இல் உலகின் சிறந்த இளம் கால்பந்து வீரருக்கு வழங்கப்படும் கோல்டன் பாய் விருது மற்றும் கோபா டிராபியை வென்றார். இவர் ஆகஸ்ட் 5, 2004-ல் பிறந்தார். இவர் இளவரசி லியோனரை விட ஒரு வருடம் மூத்தவர் என்பது குறிப்பிட தக்கது.
இளவரசி லியோனர் கவியின் மீது காதல் வயப்பட்ட கதை
2022 FIFA உலகக் கோப்பை போட்டியில் ஸ்பெயின்க்கு எதிராக கோஸ்டா ரிகா விளையாடிய போது 7-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. அப்போது தான் அரச குடும்பத்தின் காதல் கதை பற்றிய வதந்திகள் தொடங்கியது. அந்த போட்டிக்கு பிறகு, மன்னர் ஆறாம் ஃபெலிப் கவியிடம் கையெழுத்திட்ட ஜெர்சியைக் கேட்டதாகவும், அது தனக்காக இல்லை என்றும் கூறி இருக்கிறார். ஆனால் அது அவரது மகள் இளவரசி லியோனருக்காகக் கேட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் தான் இளவரசிக்கும் அரச குடும்பத்திற்கும் கால்பந்து வீரர் மீது ஈர்ப்பு ஏற்பட்டிருக்கலாம் என்ற பேச்சு பரவத் தொடங்கியது.
2024-ல் ஸ்பெயின் யூரோ கோப்பையை வெற்றி கொண்டதும், தேசிய அணியை அரச அரண்மனைக்கு வெற்றியை கொண்டாட அழைக்கப்பட்ட போது இருவருக்கும் இடையே தொடர்பு இருப்பதற்கான சாத்தியம் இருப்பது பற்றிய கிசுகிசுக்கள் அதிக அளவில் பேசபட்டன. அந்த நிகழ்வின் போது, இளவரசி லியோனரும் கவியும் கைகுலுக்கி ஒருவருக்கொருவர் கொஞ்ச நேரம் பேசி கொண்டிருந்தார்கள். அந்த சமயத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மிக விரைவாக வைரலானது.
காதலுக்காக சிம்மாசனத்தை நிராகரித்தார்
ஊடக அறிக்கைகள் பாப்லோ கவி இளவரசி லியோனரின் காதலை நிராகரித்தார் என்று கூறின. இதற்கு காரணம் அவர் வேறொருவரை காதலித்து கொண்டிருப்பதுதான் என்று கூறப்பட்டது . அவர் கால்பந்து வீராங்கனையான அனா பெலாயோ என்ற இளம் பெண்ணைதான் காதலிக்கிறார் என்கிறார்கள். தற்போது மாணவியாக கல்லூரியில் படித்து கொண்டிருக்கும் இவருக்கு வயது 22 தான். இவர் சமூக வலைத்தளங்களில் மிகவும் பிரபலம். இவருக்கு இன்ஸ்டாகிராமில் 350,000 க்கும் மேற்பட்ட ஃ பாலோவர்கள் இருக்கிறார்கள். தனது காதலில் உறுதியாக இருந்து அதற்காக அரச சிம்மாசனத்தையே மறுத்த கவி அனைவராலும் பாராட்டப்படுகிறார்.



Click it and Unblock the Notifications












