Latest Updates
-
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்!
இந்த சின்ன சின்ன பிரச்சினைகளை உறவில் சரிசெய்யவே முடியாதாம்... இதனால் நிரந்தர பிரிவு கூட வரலாமாம்...!
உறவுகளில் இருக்கும்போது தம்பதிகளுக்குள் சில சமயங்களில் கருத்து வேறுபாடுகள் இருக்கும். ஒவ்வொரு உறவிலும் பலமுறை பேசினாலும் தீர்க்க முடியாத சில பிரச்சனைகள் இருக்கும். இருப்பினும், தீர்க்க முடியாத இந்த சிக்கல்கள் எப்போதும் நச்சுத்தன்மை வாய்ந்தவை அல்லது உறவை அழிக்கக்கூடியவை என்று அர்த்தமல்ல.
இந்த தீர்க்க முடியாத சிக்கல்களை நிர்வகிப்பதற்கு இருவருமே தங்கள் அன்றாட பழக்கவழக்கங்களில் சிறிய மாற்றங்களைச் செய்ய வேண்டும், உறவை சரிசெய்ய வெளிப்படையாக இருக்க வேண்டும், மேலும் புதிய வாழ்க்கை முறைகளை முயற்சிக்க தயாராக இருக்க வேண்டும். இந்த பதிவில் காதலில் எழும் தீர்க்க முடியாத பிரச்சினைகள் என்னென்ன என்று பார்க்கலாம்.

ஓய்வு நேரத்தை செலவிடுவது
மக்கள் தங்கள் ஓய்வு நேரத்தை ஒன்றாக செலவிட விரும்பும் போது உறவுகளில் கருத்து வேறுபாடு ஏற்படுகிறது. உறவில் ஒருவர் சோம்பேறியாக இருக்க விரும்பும் போது, இன்னொருவர் வெளியே சென்று வேடிக்கை பார்க்க விரும்பலாம். இந்த வேறுபாடு நீண்ட காலமாக இருக்கலாம், ஆனால் இது உறவை அழிக்கக்கூடிய விஷயமல்ல.
மாமியாருடனான பிரச்சினை
மாமியாரும், மருமகளும் வெவ்வேறு குடுமபத்தில் இருந்து வருபவர்கள். எனவ ஒரு புதிய குடும்பத்துடன் குடியேறுவது அதன் சொந்த சவால்களைக் கொண்டிருக்கலாம். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், உங்கள் துணையுடன் இணைந்து செயல்படுவது மற்றும் இதுபோன்ற சிக்கல்களைத் தீர்ப்பது முக்கியம். ஒரு நல்ல கவுன்சிலர் இதற்கு உதவலாம்.
உறவின் ஸ்டைல்
நாம் விரும்பும் உறவின் ஸ்டைலும் உறவில் வாக்குவாதத்திற்கு காரணமாகலாம். ஒருவர் தன்னிச்சையான தற்காலிக உறவைத் தேடும்போது, உறவில் இருக்கும் மற்றொருவர் நிலையான உறவை விரும்பலாம். இது உறவில் சிக்கல்களுக்கு வழிவகுக்கும். இதுபோன்ற சூழலில் இருவரும் அமர்ந்து தங்கள் பிரச்சினைகளைக் குறித்து வெளிப்படையாக் கூற வேண்டும்.
சமூகத்தில் பழகும் விதம்
சிலர் வாயாடிகளாக இருப்பார்கள், சிலர் உள்முக சிந்தனையாளர்களாக இருப்பார்கள். இந்த இரண்டு வகையான நபர்களும் உறவில் இருக்கும்போது, அவர்கள் சமூகத்தில் எப்படி பழக்க வேண்டும் என்று தீர்மானிப்பது மிகவும் கடினமானதாக இருக்கும். அவர்கள் எப்படி உணர்கிறார்கள் மற்றும் நம்முடைய மற்றும் தங்கள் துணையின் வசதிக்கு ஏற்ப என்ன செய்ய வேண்டுமென்பதை பற்றி சிந்திக்க வேண்டும்.
சுத்தமின்மை
உறவில் ஒருவர் மற்றவரை விட அதிகமாக சுத்தத்தை விரும்புபவராக இருந்தால், அவர்கள் தங்கள் விதிமுறைகளின்படி விஷயங்களைச் செய்ய முயற்சி செய்வார்கள். இது பல சிக்கல்களுக்கு வழிவகுக்கும். இந்த சூழலில், சிறிது கட்டுப்பாட்டை தளர்த்த வேண்டும் மற்றும் சின்ன சின்ன விஷயங்களில் மகிழ்ச்சியைக் காண வேண்டும்.
செலவழிக்கும் பழக்கம்
இது உறவில் முறிவை ஏற்படுத்தும் காரணமாக இருக்கலாம். இரண்டு பேர் பணத்தின் மீது வெவ்வேறு கண்ணோட்டத்தைக் கொண்டிருக்கும்போது அல்லது செலவழிக்கும் வழக்கம் உள்ள போது, இருவரும் பொதுவான ஒரு காரணத்தைக் கண்டுபிடித்து பிரச்சினையை சரி செய்ய வேண்டும்.



Click it and Unblock the Notifications

