கள்ளக்காதலில் இருப்பவர்கள் எந்தெந்த வழிகளில் தங்கள் உறவை மறைப்பார்கள் தெரியுமா? இந்த அறிகுறிகளை கவனிங்க...!

காதல் மற்றும் திருமண உறவுகளில் தங்கள் துணைக்கு துரோகம் செய்வது என்பது கவலையளிக்கும் விதமாக வேகமாக அதிகரித்து வருகிறது. தினமும் நூற்றுக்கணக்கான கள்ளக்காதல் விவகாரங்கள் வெளிவருகிறது. ஒருவர் கள்ள உறவில் ஈடுபடுவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். துரோகத்தை ஒரு உறவிலிருந்து வெளியேறும் உத்தியாகப் பயன்படுத்தலாம், பின்னர் அதை தங்களின் துணைக்கு தெரியப்படுத்தி அவர்களே பிரிவைத் தொடங்க வேண்டும் என்று விரும்புவார்கள்.

பெரும்பாலான மக்கள் தங்கள் கள்ள உறவை தங்களின் துணைக்கு தெரியாமல் பார்த்துக் கொள்வதில் எச்சரிக்கையாக இருக்கிறார்கள். ஏனெனில் அவர்கள் தங்களின் திருமண உறவையும், கள்ள உறவையும் ஒரே நேரத்தில் பாதுகாக்க விரும்புகிறார்கள். இதுபோன்ற சூழலில் தங்களின் கள்ள உறவை கணவன்/மனைவியிடமிருந்து ரகசியமாக வைத்திருக்க அவர்கள் எந்த எல்லைக்கும் செல்வார்கள்.

Common Strategies People Use To Hide Their Affair From Their Partner

இதுபற்றி நடத்தப்பட்ட ஆய்வில் பலர் தங்களின் கள்ள உறவை மறைப்பதற்கு என்னென்ன செய்கிறார்கள் என்பதை பகிர்ந்துள்ளார்கள். அதன் அடிப்படையில் கள்ள உறவில் இருப்பவர்கள் தங்கள் துணையிடம் அதை மறைப்பதற்கு என்னென்ன செய்வார்கள் என்பதை கிட்டதட்ட கணித்துள்ளார்கள். அவை என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

டிஜிட்டல் ஆதாரங்களை அழித்துவிடுவார்கள்

இன்றைய தொழில்நுட்ப உலகில் ஒருவரின் செல்போன்தான் அவர்களின் தலையெழுத்தை நிர்ணயிப்பதாக உள்ளது. தங்கள் கள்ள காதலன்/காதலியிடம் பேசும் மெசேஜ்கள் அல்லது புகைப்படங்களை பாதுகாக்கப்படாத தொலைபேசியில் எளிதாகப் படிக்க முடியும். தங்கள் கள்ள உறவை ரகசியமாக வைத்திருக்க விரும்புபவர்கள், தங்கள் காதல் துணையுடனான தொடர்பை வெளிப்படுத்தும் அனைத்து ஆதாரங்களையும் அவ்வப்போது நீக்கிவிடுவார்கள். அவர்கள் போனுக்கு கடுமையான செக்யூரிட்டி இருக்கும், வாட்சப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற அனைத்து ஆப்களும் பாஸ்வேர்டுகளால் பாதுகாக்கப்பட்டிருக்கும்.

மிகவும் சகஜமாக நடந்து கொள்வார்கள்

வழக்கத்திற்கு மாறான நடத்தைகள் தங்களின் துணைக்கு சந்தேகத்தை தூண்டும், எனவே துரோகம் செய்பவர்கள் மிகவும் கவனமாக இருப்பார்கள், அதனால் தங்கள் துணையுடனான உறவில் மிகவும் இயல்பாகவே நடந்து கொள்வார்கள். அவர்களின் வழக்கமான பேச்சு மற்றும் நடத்தை எப்படி இருந்தாலும் கள்ள உறவு தொடங்கிய பிறகும் அதே பாணியைத் தொடர்வார்கள். தங்கள் உறவின் இயல்பை மாற்றாமல் இருப்பதன் மூலம், அவர்கள் சந்தேகத்தைத் தவிர்க்க முயற்சிப்பார்கள்.

வழக்கத்தை மாற்றிக்கொள்ள மாட்டார்கள்

கள்ள உறவில் இருப்பவர்கள் தங்கள் துணையுடன் இருக்கும் வழக்கத்தை மாற்ற மாட்டார்கள், தங்களின் அன்றாட பழக்கவழக்கங்களையும், வாழ்க்கை முறையையும் மாற்றிக்கொள்ள மாட்டார்கள். தங்களின் தோற்றத்தில் கூட மிகவும் கவனமாக இருப்பார்கள். ஒருவேளை தங்களின் தோற்றம், முடி, ஸ்டைல் போன்றவற்றை மாற்ற நினைத்தாலும் அது தங்களின் துணைக்கு சந்தேகத்தை ஏற்படுத்தாத வண்ணம் கவனமாக நடந்து கொள்வார்கள், செலவுகளை கூட மிகவும் ரகசியமாக, சந்தேகம் வராதபடி செய்வார்கள். புத்திசாலித்தனமான துரோகிகள், தங்கள் கள்ள உறவை மறைப்பதற்காக, தங்களின் அன்றாடப் பழக்கவழக்கங்களில் கவனம் செலுத்தி, சீராக நடந்துகொள்வார்கள்.

நண்பர்களை பயன்படுத்திக் கொள்வார்கள்

ஒருவர் கள்ள உறவில் ஈடுபடும் போது அதில் அதிகமாக பாதிக்கப்படுவது அவர்களின் நண்பர்கள்தான். கள்ள உறவில் இருப்பவர்கள் தங்கள் புதிய துணையுடன் நேரத்தை செலவழிக்கவும், வெளியே செல்லவும் தங்களின் நண்பர்களை பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் தங்கள் நண்பர்களை வைத்தே பொய்களை சொல்ல வைப்பார்கள். அவர்களின் நண்பர்கள் அவர்களுக்கே தெரிந்தோ, தெரியாமலோ அவர்களின் கள்ள உறவுக்கு துணை போகலாம்.

கள்ள உறவில் தொடர்ச்சியாக ஈடுபட மாட்டார்கள்

தங்கள் திருமண உறவை பாதுகாக்க விரும்புபவர்கள் தங்களின் கள்ள உறவில் மிகவும் கவனமாக இருப்பார்கள். அவர்கள் தங்களின் கள்ள துணையை அடிக்கடி சந்திப்பதற்குப் பதிலாக, அவர்களைச் சந்திக்கும் எண்ணிக்கையை வேண்டுமென்றே கட்டுப்படுத்துவார்கள். இரகசியத்தைக் காப்பதன் ஒரு பகுதியாக, சந்திப்புகளின் எண்ணிக்கையில் கவனம் செலுத்துவது, உறவு அம்பலமாவதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது.

கேள்வி கேட்க மாட்டார்கள்

கள்ள உறவில் இருப்பவர்கள் தங்கள் உறவை மறைப்பதற்காக, தங்கள் துணையை எந்த கேள்வியும் கேட்க மாட்டார்கள், ஒருவேளை அவர்களின் துணை கள்ள உறவில் சந்தேகிப்பதாக இருந்தால் கூட அதைப்பற்றி கேள்வி கேட்க மாட்டார்கள். தங்கள் உறவு எப்போதும் போல நார்மலாக இருப்பது போல காட்டிக்கொள்வார்கள்.

வாழ்க்கைத்துணை மீது திடீர் பாசம் காட்டுவார்கள்

தங்களின் வாழ்க்கைத் துணைக்கு சந்தேகம் வராமல் இருப்பதற்காக, அவர்களை திசைதிருப்ப சிறந்த வழி, அவர்கள் மீது அதிக ஆர்வம், அன்பு மற்றும் கவனத்தைச் செலுத்துவதாகும். உதாரணமாக, அதிக அன்பாகவும் தாராள மனப்பான்மையுடன் நடந்துகொள்வது போன்ற உத்திகளை, ஒரு கள்ள உறவை மறைப்பதற்காக அவர்கள் பயன்படுத்தக்கூடும்.

புதிய சமூக வலைத்தள அக்கவுண்ட் மற்றும் போன்

கள்ள உறவை மறைப்பதற்கான மற்றொரு தொழில்நுட்ப அணுகுமுறை, வாழ்க்கைத் துணைக்கு தெரியாமல் புதிய சமூக ஊடக அக்கவுண்ட்களைத் தொடங்குவதும், ரகசியமாக போன் வாங்குவதுமாகும். இது தங்களின் கள்ளத் துணையுடன் மேற்கொள்ளப்படும் தகவல்தொடர்பைப் பாதுகாக்க உதவுகிறது, இதனால் அவர்களின் வாழ்க்கைத்துணையிடம் மாட்டிக்கொள்ளும் வாய்ப்புக் குறைவாகும்.

கள்ள துணையை கணவன்/மனைவிக்கு அறிமுகம் செய்வது

கள்ள உறவில் இருப்பவர்கள் தங்கள் வாழ்க்கைத்துணையை திசைதிருப்புவதற்குப் பயன்படுத்தும் ஒரு வியத்தகு வழி, தங்கள் கள்ளத் துணையை ஒரு நண்பராக, சக ஊழியராக அல்லது உறவினராக அறிமுகப்படுத்துவதாகும். தங்கள் கள்ளக் காதலரை வேறொருவராக அறிமுகப்படுத்துவதன் மூலம், அவர்கள் தங்கள் துணையின் விழிப்புணர்வைக் கட்டுப்படுத்துகிறார்கள் மற்றும் அவர்களின் சந்தேகங்களைத் திசைதிருப்புகிறார்கள்.

Story first published: Monday, December 15, 2025, 12:19 [IST]
Desktop Bottom Promotion