Just In
- 38 min ago
அதிர்ஷ்டக்காத்து இன்னைக்கு இந்த ரெண்டு ராசிக்காரங்க பக்கம்தான் ஜமாய்ங்க...! உங்க ராசிக்கு எப்படி?
- 13 hrs ago
வெஸ்டன் டாய்லட் Vs இந்தியன் டாய்லட்: எது நல்லது தெரியுமா?
- 15 hrs ago
ஓரின சேர்க்கையாளருக்கு ஏற்பட்டுள்ள புதிய ஆரோக்கிய பிரச்சனை என்னவென்று தெரியுமா?
- 19 hrs ago
கட்டுக்கடங்காமல் ஓடும் குதிரையை கட்டுப்படுத்த இந்த இளைஞர் செய்யும் வேலையை நீங்களே பாருங்களேன்…!
Don't Miss
- News
மார்கழி மாத ராசி பலன்கள் 2019 - தனுசு முதல் மீனம் வரை பலன்கள்
- Finance
இந்திய பொருளாதாரத்துக்கு ஒத்தடம் கொடுத்த நல்ல செய்தி..!
- Automobiles
மோடி அரசின் அதிரடி... இந்தியா தெறிக்க விடப்போகுது... இந்த வளர்ச்சி தெரிந்தால் அசந்து போயிருவீங்க...
- Sports
வெறித்தனமாக மோதப் போகும் இரு அணிகள்.. ஐஎஸ்எல் தொடரில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய போட்டி!
- Movies
சென்சார் போர்ட்டுகே டஃப் கொடுத்த இயக்குனர்… ரோபோ சங்கர் பேச்சு
- Education
TNPSC: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வெழுதியவரா நீங்க? அப்ப இந்த அறிவிப்பு உங்களுக்குத்தான்!
- Technology
இனி பூமியின் மிக ஆழமான பகுதி இதுதான்! போட்டு உடைத்த விஞ்ஞானிகள்!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
உலக சிங்கிள் தினமான இன்று முரட்டு சிங்கிளா இருக்குறதுல என்ன நன்மை இருக்குனு தெரிஞ்சுக்கோங்க...!
இன்று உலக சிங்கிள் தினம். காதலர் தினம் கொண்டாடப்படும் அளவிற்கு இந்த சிங்கிள் தினத்தை எவரும் கண்டுகொள்வதில்லை. உண்மையில் காதலர் தினம் கொண்டாப்படுவது போல சிங்கிள் தினமும் கொண்டாடப்பட வேண்டும். ஏனெனில் காதலிப்பதை விட சிங்கிளாக இருப்பதில் பல நன்மைகள் இருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?
ஆண்கள் மட்டும்தான் சிங்கிளாக இருப்பார்கள் என்று இல்லை, பல பெண்களும் சிங்கிளாகத்தான் இருகின்றனர். காதலில் இருப்பது உங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கலாம், ஆனால் சிங்கிளாக இருப்பதில் பல நன்மைகளும், ஆதாயங்களும் இருக்கிறது. தனிமையில் இருப்பது உங்களுக்கு ஆச்சரியமளிக்கும் வகையில் பல நன்மைகளை ஏற்படுத்தும் என உளவியல் நிபுணர்கள் கூறுகிறார்கள். சிங்கிளாக இருப்பதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

நீங்கள் விரும்பும் இடத்திற்கு பயணிக்கலாம்
காதலில் இருக்கும்போது பயணங்கள் மேற்கொள்வது என்பது மிகவும் முக்கியமானது. ஆனால் இருவரும் ஒரே இடத்திற்குத்தான் செல்ல விரும்புவார்களா என்றால் இல்லை என்றுதான் கூறவேண்டும். எங்கு செல்ல வேண்டுமென்பதில் காதலர் இருவருக்கும் இடையில் அடிக்கடி வாக்குவாதங்கள் எழலாம். இதுவே நீங்கள் சிங்கிளாக இருக்கும் பட்சத்தில் உங்களுக்கு முழுமையான பயண சுதந்திரம் இருக்கும். நீங்கள் விரும்பும் இடங்களுக்கு எவரிடமும் அனுமதி கேட்காமல் செல்லலாம்.

பயமில்லாமல் கடலை போடலாம்
காதலில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் பிற பெண்களிடம் பேசுவது என்பது ஆண்களுக்கு எப்பொழுதும் பிடித்த ஒன்றாகும். பொதுவாக இது குற்ற செயல் அல்ல, ஆனால் ஒரு நபர் காதல் உணர்வுகளை வளர்த்துக் கொண்டால் அது ஒரு மோசமான சூழ்நிலைக்கு வழிவகுக்கும். காதலில் இருக்கும் போது பிற பெண்ணுடனோ, ஆணுடனோ பேசுவது என்பது பல விரும்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்தும். ஆனால் சிங்கிளாக இருக்கும்போது நீங்கள் தாராளமாக, பயமின்றி பிடித்த பெண்ணுடன் பேசலாம். இதனால் உங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படபோவதில்லை.

உடல் ஆரோக்கியம்
சமீபத்தில் லண்டனில் நடத்தப்பட்ட ஆய்வில் காதலில் இருப்பவர்கள் காதலிக்கத் தொடங்கிய பின்னர் தங்களின் எடை அதிகரித்ததாக கூறுகிறார்கள். இந்த எடை அதிகரிப்பு காதலிக்கத் தொடங்கிய பின் அவர்களின் வாழ்க்கை முறையில் ஏற்பட்ட மாற்றங்களுடன் நேரடித் தொடர்புடையது. உங்கள் மனதையும் உடலையும் மேம்படுத்துவதில் நீங்கள் கவனம் செலுத்த விரும்பினால் சிங்கிளாக இருப்பதே உங்களுக்கு சிறந்தது.
MOST READ: சர்க்கரை நோய் இருப்பவர்கள் இளநீர் குடிப்பதால் ஏற்படும் விளைவுகள் என்னென்ன தெரியுமா?

நேரத்தை மிச்சப்படுத்தலாம்
காதலிப்பவர்கள் தங்களின் பொன்னான நேரத்தை பெரும்பாலும் செலவழிப்பது தொலைபேசியில்தான். போன் தொடர்புகள் இல்லாதபோது அவர்கள் மிகவும் பதட்டமடைவார்கள். இந்த போன் உரையாடல்களும், தொலைபேசி அழைப்புகளும் பலமணி நேர இழப்பை ஏற்படுத்தும். ஆனால் நீங்கள் சிங்கிளாக இருக்கும்போது உங்களின் நேரத்தை உபயோகமான முறையில் பயன்படுத்த எந்த தடையும் இருக்காது.

தன்னம்பிக்கை அதிகரிக்கும்
காதல் என்பது ஒரு குழப்பமான சக்தியாகும், இது அழகாகவும் அழிவுகரமாகவும் இருக்கக்கூடும். உங்களின் உணர்வுகள் எப்பொழுதும் அமைதியாக இருக்காது, இருக்கவும்கூடாது. ஆனால் உங்களின் அனைத்து உணர்வுகளும் ஒற்றை நபரையே சுற்றி இருப்பது உங்களுக்கு மிகவும் ஆபத்தானதாகும். இவ்வாறு ஒரு சிறைக்குள் நீங்கள் மாட்டிக்கொள்ள விரும்பாவிட்டால் சிங்கிளாக இருப்பதுதான் நல்லது.

நண்பர்களை இழக்கத் தேவையில்லை
சிங்கிளாக இருப்பதால் கிடைக்கும் ஆகச்சிறந்த நன்மை இதுதான். ஏனெனில் காதலில் இருக்கும்போது உங்கள் இருவரின் சுதந்திரமும் மற்றொருவரின் விருப்பத்தை சார்ந்துதான் இருக்கும். எனவே உங்களால் உங்கள் நண்பர்களுடன் நேரம் செலவிட முடியாமல் போகலாம். காதலில் இருக்கும்போது உங்கள் நண்பர்களுடன் நேரம் செலவிடுவது என்பது கடினமான அதேசமயம் சிரமமான ஒன்றாகும். நண்பர்களை இழக்காமல் இருக்க விரும்பினால் சிங்கிளாக இருப்பதுதான் நல்லது.
MOST READ: இந்த விரல் சின்னதாக இருக்கும் ஆண்களின் பாலியல் வாழக்கை செம்மையா இருக்குமாம் தெரியுமா?

நீங்கள் நினைத்ததை செய்யலாம்
தண்ணீர் கொடுக்காவிட்டால் ஒரு மலர் வாடிவிடும் போல, சரியான கவனிப்பும் கவனமும் இல்லாமல் ஒரு உறவு பாதிக்கப்படும். உங்களுடைய குறிப்பிடத்தக்க மற்றவர் உங்களுடன் நேரத்தை செலவிட விரும்புவதில் "விசித்திரமான" எதுவும் இல்லை. வேறொரு நபரின் தேவைகளைக் கருத்தில் கொள்ள நீங்கள் தயாராக இல்லை என்றால் முரட்டு சிங்கிளாக இருப்பதே உங்களுக்கு சிறந்தது.