Latest Updates
-
ஆந்திரா ஸ்டைல் பாலக் கீரை தொக்கு ரெசிபி - செஞ்சு பாருங்க, டிபன், சாதத்துக்கு செமையா இருக்கும் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா.. ஒருவாட்டி இந்த தொக்கு செய்யுங்க.. இட்லி, தோசை, சாதத்துக்கு செமயா இருக்கும்.. -
ஐபிஎல் மோகத்தால் உறவில் விரிசலா? கிரிக்கெட் ஜுரத்திலும் குடும்ப அமைதியை காப்பது எப்படி? -
இந்த 4 ராசி பெண்கள் உலகின் சிறந்த அம்மாவாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
கோடைக்கால சரும பிரச்சனைகளை தடுக்கணுமா? அப்ப தேனை இப்படி யூஸ் பண்ணுங்க.. -
ஜான்வி கபூர் - ஷிகர் பஹாரியா திருமணம்? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த போனி கபூரின் அதிரடி விளக்கம்! -
உங்க கிட்னி ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப இந்த பழங்களை அடிக்கடி சாப்பிடுங்க -
2 ஆண்டுகள் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் செவ்வாய்: இந்த 4 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
காரைக்குடி சுரைக்காய் மசியல் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, செம சைடிஷா இருக்கும் -
2 முருங்கைக்காய் இருந்தா.. இந்த பக்குவத்துல கிரேவி செய்யுங்க.. சாதம், சப்பாத்தி-ன்னு எல்லாத்தும் அள்ளும்..
பெண்களே உங்களுக்கு இந்த வகை காதலன்கள் மட்டும்தான் கிடைப்பார்களாம்… வேற வழியே இல்ல…!
ஒரு பெண் ஒரு ஆணைக் காதலித்து, பின்னர் தன் காதலனின் ஆளுமை காரணமாக உறவை முடித்துக்கொள்வதும் இங்கு நடந்து கொண்டுதான் இருக்கிறது.
"சிங்கள் பசங்க நாங்க சிங்கள் பாங்க" என்று வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் வைக்கும் சிங்கள் பசங்களே உண்மையாக உங்கள யாரும் காதலிச்சிருக்க மாட்டாங்க. அப்படி இல்லான நீங்க ஃபுரப்போஸ் பண்ணவங்களும் உங்க ரிஜக்ட் பண்ணிருப்பாங்க. ஆனா நீங்க நினைச்சி இருப்பீங்க சில பசங்கள மட்டும் எப்படி பொண்ணுங்க விழுந்து விழுந்து காதலிக்கிறாங்கனு. சில வகையான ஆண்கள பொண்ணுங்களுக்கு பிடிக்க காரணம் இருக்கு.
இந்த உலகில் ஆண்கள், பெண்களும் ஒரே மாதிரியாக இல்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு குணநலன்கள் இருக்கும். அந்த வகையில் ஆணும், பெண்ணும் காதலிக்கிறார்கள். காதலிக்கும் அனைவரும் கல்யாணத்தில் இணைகிறார்களா? என்றால் அது மிக குறைவு. சாதி, மதம், பொருளாதாரம் என்று குடும்பமும், சமூகமும் வைக்கும் காரணங்கள் ஒருபுறம் இருந்தாலும், நிறைய காதல் பிரிவுக்கு ஆண்களில் சில நடவடிக்கைகளே காரணமாகிறதாக கூறப்படுகிறது.

ஒரு பெண் ஒரு ஆணைக் காதலித்து, பின்னர் தன் காதலனின் ஆளுமை காரணமாக உறவை முடித்துக்கொள்வதும் இங்கு நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஒரு சில குணங்கள் உங்கள் காதலியை மிகவும் எரிச்சலூட்டும். ஒரு சில குணங்கள் காதலனுக்கு இருந்தால் அவர்கள் சிறந்த ஜோடியாக முடியும். ஒரு சில குணாதிசியங்கள் கொண்ட ஆண்களே பெரும்பான்மையான பெண்களின் வாழ்க்கையில் வருகின்றனர்.பொதுவாக எந்த மாதிரியான ஆண்கள் பெரும்பாலன பெண்கள் வாழ்க்கையில் வர வாய்ப்பு அதிகம் அப்படினு பாக்கலாம்.

பொறாமை கொண்ட காதலன்
பொறாமை என்பது காதலில் பொஸசிவ்னெஸ் என்று கூட சொல்லுவார்கள். உண்மையில் பொறாமை என்பதும் பொஸசிவ்னெஸ் என்பதும் வேறுவேறு. இரண்டிற்கும் அதிக வித்தியாசம் இருக்கிறது. ஒருவரின் மிகச்சிறந்த நடத்தை, சாதனை அல்லது உடைமை ஆகியவற்றை பெறமுடியாமல் போகும் போதும் மற்றும் அதைப் பெற விரும்பும் போதும் அல்லது மற்றொருவர் அதைப் பெறக்கூடாது என விரும்பும் போதும் நிகழுவது பொறாமை. ஆனால், பொஸசிவ்னஸ் என்பது அதீத காதலால் தோன்றுவது. அமிர்தமே என்றாலும் அளவோடுதான் எனபதுபோல பொஸசிவ்னஸும் அளவோடு இருந்தால் அந்த காதல் நன்றாக இருக்கும். அதுவே அதிகமாக ஆகும்போது அந்த இடத்தில் சந்தேகம் உண்டாகும். இது காதல் முறிவுக்கே காரணமாகிவிடும்.
பொறாமை கொண்ட காதலன் வெறுமனே அன்பின் கருத்தை புரிந்து கொள்ள முடியாது. அதாவது அவருடைய காதலி வேறு ஆண் நண்பர்களுடன் பேசும்போதோ, அவளுக்கு நெருக்கமான நண்பன் ஏன் எதிர் பாலினத்தைச் சேர்ந்தவராக இருக்கிறார் என்றும் காதலனால் புரிந்து கொள்ள முடியாது. தனது காதலி வேறொரு ஆணுடன் நேரத்தை செலவிடுகிறாள் என்ற எண்ணத்தில் அவன் தன்னையே கஷ்படுத்திக்கொள்வான். பொறாமை கொண்ட காதலன் தனது காதலியை ஆதிக்கம் செலுத்துவதற்கோ கட்டுப்படுத்துவதற்கோ பார்க்கவில்லை. ஆனால் அவனது மனம் தீவிர பொறாமையை எரியூட்டுகிறது.

பாதுகாப்பற்ற காதலன்
பாதுகாப்பற்ற காதலன் பொறாமை கொண்டவனுடன் சிறிது ஒற்றுமையைக் கொண்டிருந்தாலும், இந்த வகை காதலன் ஒரு சுய வெறி கொண்டவராக இருப்பார். தேவையற்ற பொறாமையை கொண்டவராகவும் இவர்கள் இருப்பார்கள்.
பாதுகாப்பற்ற காதலன் பெண் நண்பர்கள் உட்பட உங்கள் நண்பர்களுடன் நீங்கள் செலவிடும்போது நேரத்தை பார்த்து பொறாமைப்படுகிறார்கள். நீங்கள் அவர்களுக்கு போதுமான நேரமோ முன்னுரிமையோ கொடுக்கவில்லை என்று அவர்கள் புகார் கூறுவார்கள். உங்கள் காதலன் அருகில் நீங்கள் இல்லாதபோது, உங்கள் இருப்பிடத்தை அறிந்து கொள்வதற்காக அவர் தொடர்ந்து உங்களுடன் உரையாடல் மற்றும் மெசஜ் அனுப்பி சோதித்து வருவார்கள்.
இந்த வகை ஆண்கள் நீ என்னை விரும்புகிறாயா? நீ என்னை எவ்வளவு நேசிக்கிறாய்? என்று காதலியிடம் கேட்டுக்கொண்டே இருப்பார்கள். இவர்கள் எப்போதும் ஒரு சந்தேகத்துடனே இருப்பார்கள். மேலும், தனது காதலியின் அழைப்புகள் அல்லது குறுஞ்செய்திகளுக்கு இடையில் பதிலளிக்கும் நேரம் அதிகமாக இருந்தால் மிகவும் மன உளைச்சலுக்கு உள்ளாவர்கள். இந்த வகை காதலன்கள் பொதுவாக சுய வெறுப்பு மற்றும் குறைந்த சுயமரியாதையால் பாதிக்கப்படுகிறார்கள்.

மிகவும் சென்டிமென்ட் காதலன்
மிகவும் செண்டிமெண்ட் ஆன காதலன் என்றால் பெண்களுக்கு ரொம்ப பிடிக்கும். ஏனென்றால் பெண்களும் அதிகளவு செண்டிமெண்ட் கொண்டிருப்பார்கள். குறிப்பிட்ட சில சிறப்பான தினங்கள் அல்லது அவருடனான ஒரு சிறிய உரையாடல் கூட உங்களை மிக இலகுவாக கவரும்.
கைகளைப் பிடித்துக் கொள்வது, உங்களுக்குப் பிடித்த பூக்கள் மற்றும் சாக்லேட்டுகளுடன் உங்கள் வீட்டிற்கு வெளியே நிற்பது, உங்களுக்கு உடல்நிலை சரியில்லாத நேரங்களில் அல்லது நீங்கள் துன்பப்படும் காலங்களில் உங்களுடன் கூட இருப்பது போன்ற ஒரு அருமையான காதல் விஷயங்களை அவர் செய்வார்.
உங்கள் நெற்றியில் ஒரு முத்தத்தை கொடுப்பதன் மூலம் அவர் அன்பை உங்களிடம் வெளிப்படுத்துவதைத் தவிர்ப்பதில்லை. இந்த வகை காதலன்கள் உங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருவார்கள். அவர் விரலின் நுனியில் காதல் கிடைப்பதில் பெண்களுக்கு ஆச்சரியமில்லை.

நடைமுறை காதலன்
கனவில் வாழ்வதற்கும், நடைமுறையில் வாழ்வதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. கனவில் இருப்பவர்கள் நடைமுறையை நினைப்பதில்லை. நடைமுறையில் இருப்பவர்கள் சரியாக கனவு காண்பார்கள். பொதுவாக நடைமுறை காதலனகளை பெரும்பாலான பெண்களுக்கு பிடிக்கும். இந்த வகையான காதலன் மிகவும் தர்க்கரீதியானவர். நடைமுறை காதலன் ஒருபோதும் உணர்ச்சிகளுக்காக தனது முடிவை மாற்ற மாட்டார். இதற்கு உதாரணம் சொல்ல வேண்டுமானல், சினிமாவில் வரும் காதல், திருமணம், மற்றும் குடும்பம் போன்று நடைமுறை வாழ்க்கையில் இருப்பதில்லை என்பதை கூறலாம்.
இந்த வகை ஆண்கள் பொருளாதார ரீதியாகவும் தங்களை சரியாக நிலைநிறுத்துகிறார். இவர்கள் உணர்ச்சிகளை பகுத்தறிவு வாதத்துடன் வழிநடத்துவதால், ஒரு முடிவுக்கு வருவதற்கு முன்பு பலமுறை உங்களிடம் கலந்துரையாடல் நடத்த கருதுவார்கள். ஆனால் நடைமுறை காதலன், அவனது இயல்பு காரணமாக, குறைந்த பட்சம் உணர்ச்சிவசப்படுபவனாக இருக்கிறார்.

மென்மையான காதலன்
இந்த வகையான காதலன் ஆண், பெண் இருவரும் சமம் என நினைக்கிறவர்கள். ஆண் நண்பர்களுடன் பேசுவதற்கோ, வெளியில் செல்லுவதற்கோ இவர்கள் மிகவும் இடமளிக்கிறார். பொறாமையோ, சந்தேகமோ ஏதும் கொள்ளாமல் இருப்பார்கள். இந்த வகை காதலன் உங்களுக்கு ஒரு சிறந்த நண்பனாக இருப்பார்.
மிகச் சிறந்த விஷயம் என்னவென்றால், அவர் எப்போதுமே தனது வழியை வளைத்து, உங்களுக்குத் தேவைப்படும்போது உங்களுக்கு இடம் கொடுக்கத் தயாராக இருப்பார். உங்களுடைய தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்வார். உங்களை அவர் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் எனவும் நினைக்கமாட்டார். உங்களுக்கான சுதந்திரத்தில் அவர் தலையிடமாட்டார். சில நேரங்களில், இந்த வகையான காதலன் ஒருவித மந்தமானவராகத் தோன்றலாம். ஆனால், இந்த வகையான ஆண்களை பெரும்பாலன பெண்கள் விரும்புவார்கள்.

ப்ளே பாய்ஸ்
இவர்கள் பெண்கள் மீது அதிக ஆர்வமும் மற்றும் பல காதலர்களைக் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். இந்த வகை காதலர்கள் மிகவும் மோசமானவர். இவர்கள் உண்மையானவர்களாக இருக்க மாட்டார்கள். தான் மிகவும் திறமைசாலி என்று தன்னைப் பற்றி வெறித்தனமாக நினைத்துக்கொண்டிருப்பார்கள். யாரிடம் எப்படி பேச வேண்டும், பழக வேண்டும் என்று இடத்திற்கு ஏற்றார் போல தன்னை மாற்றிக்கொள்வார்கள். இவர்கள் செய்யும் சில செயல்களினால் ஏராளமான பெண்களிடமிருந்து கவனத்தை ஈர்க்கிறார். நிறைய பெண்களை காதலிப்பதாக கூறி அவர்களுடன் உறவில் இருப்பார்.
இந்த வகை ஆண்கள் தற்போது அதிகமாக உள்ளனர். இவர்களிடம் பெரும்பாலான பெண்கள் ஏமார்ந்து காதலில் விழுந்துவிடுவார்கள். ஏனென்றால் இந்த வகை ஆண்கள் பெண்களை அதிகம் கவர நிறைய விஷயங்கள் செய்வார்கள். அந்த பெண்ணுடன் உடலுறவு முடிந்துவிட்டால் வேறு பெண்களை தேடிச்செல்வார்கள���.



Click it and Unblock the Notifications