For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெண்களை பற்றிய இந்த விஷயங்களை ஆண்கள் புரிஞ்சிகிட்டா அவங்கள ஈஸியா கவரலாமாம்...!

உண்மை எவ்வளவு கசப்பாக இருந்தாலும் சரி, அசிங்கமாக இருந்தாலும் சரி, உங்கள் காதலி அல்லது மனைவியிடம் நேர்மையாக இருங்கள். பொய் சொல்வதும் அவளுக்கு துரோகம் செய்வதும் நிலைமையை மோசமாக்கும்.

|

ஒரு உறவு மகிழ்ச்சியாகவோ சுவாரஸ்யம் நிறைந்ததாகவோ இருக்க தம்பதிகள் இருவரும்தான் காரணம். நம் உறவை உயிர்ப்போடும் காதலோடும் வைத்திருக்க உறவில் பல விஷயங்களை நாம் தொடர்ந்து செய்ய வேண்டும். அது உங்களுக்குள் இருக்கும் காதலையும் நெருக்கத்தையும் அதிகரிக்கும். இதற்கு தம்பதிகளுக்குள் நல்ல புரிதல் இருப்பது முக்கியம். பொதுவாக ஆண்கள் சில விஷயங்களை பெண்களிடம் எதிர்பார்ப்பார்கள், பெண்கள் சில விஷயங்களை ஆண்களிடம் எதிர்பார்ப்பார்க்கிறார்கள். அவை, இருவருக்கும் கிடைக்கும்போது உறவு சுமுகமாக செல்லும். சில சமயங்களில், "ஆண்கள் நம்மைப் புரிந்துகொள்ளத் தவறிவிடுகிறார்கள்" என்று பெண்கள் நினைக்கிறார்கள்.

truths-women-wish-men-always-understood-in-tamil

பல நேரங்களில் பெண்கள் உண்மையில் என்ன விரும்புகிறார்கள் என்பதைப் பற்றி ஆண்கள் தெரிந்துகொள்வதில்லை. சில ஆண்கள் பெண்ணைப் பற்றி எல்லாவற்றையும் அறிந்திருப்பதாக கருதுகின்றனர். ஆனால் கடைசியில், அவற்றில் பெரும்பாலானவை தவறானவை. எல்லா பெண்களும் ஆண்கள் புரிந்து கொள்ள விரும்பும் சில உண்மைகள் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அவளுக்கு துணையாக இருங்கள்

அவளுக்கு துணையாக இருங்கள்

எப்போதும் ஒரே மாதிரியாக உறவில் இருக்காதீர்கள். இது உங்கள் உறவில் சலிப்பை ஏற்படுத்தலாம். கொஞ்சம் வேடிக்கையும் சச்சரவும் இருந்தால் உறவு சுவாரஸ்யமாக நன்றாக இருக்கும். ஆனால் உங்கள் காதலி அல்லது மனைவியை யாரும் கேலி செய்யும்போது மற்றும் பிரச்சனையில் இருக்கும்போதும் அவளுக்காக துணை நிற்கவும். எதுவாக இருந்தாலும் நீங்கள் அவளுக்காக நிற்க வேண்டும் என்று அவள் ரகசியமாக விரும்புகிறாள். அவள் ஒரு வலிமையான பெண்ணாக இருக்கலாம், ஆனால் சில சமயங்களில், குறிப்பாக எல்லோருக்கும் முன்பாக உங்கள் ஆதரவையும் அவள் விரும்பலாம்.

உங்கள் பெண்ணை பிடிப்பது

உங்கள் பெண்ணை பிடிப்பது

எப்பொழுதும் தங்கள் துணையிடம் சிறிதளவு பாசத்தைக் காட்ட வேண்டும் என்று பெண்கள் விரும்புகிறார்கள். கைகளைப் பிடிப்பது அல்லது இடுப்பைப் பிடிப்பது அவள் உன்னுடையவள் என்பதை உலகுக்கும் அவளுக்கும் காட்ட சிறிய வழிகளாக இவை இருக்கலாம். இந்த சிறிய செயல்களை நிச்சயமாக உங்கள் காதலி அல்லது மனைவி விரும்புவாள். இது உங்களுக்குள் புரிதலையும் நெருக்கத்தையும் அதிகரிக்கும்.

நேரத்தை செலவிடுங்கள்

நேரத்தை செலவிடுங்கள்

உங்கள் காதலி அல்லது மனைவி அருகில் இருக்கும்போது, அவளுடன் போதுமான நேரத்தை செலவிடுங்கள். அவள் உங்களுடைய கவனத்தை விரும்புகிறாள். எனவே உங்கள் தொலைபேசி அல்லது வேலையை ஒதுக்கி வைத்துவிட்டு அவளுடன் நேரத்தை செலவிடுங்கள். ஒன்றாக ஒரு திரைப்படத்தைப் பாருங்கள் அல்லது சில வீட்டு வேலைகளை ஒன்றாகச் செய்யுங்கள். இது உங்களை பற்றி அவளை நன்றாக உணர வைக்கும்.

நேர்மையாகவும் வெளிப்படையாகவும் இருங்கள்

நேர்மையாகவும் வெளிப்படையாகவும் இருங்கள்

உண்மை எவ்வளவு கசப்பாக இருந்தாலும் சரி, அசிங்கமாக இருந்தாலும் சரி, உங்கள் காதலி அல்லது மனைவியிடம் நேர்மையாக இருங்கள். பொய் சொல்வதும் அவளுக்கு துரோகம் செய்வதும் நிலைமையை மோசமாக்கும். நீங்கள் தொடர்ந்து பொய் சொல்வதை விட உண்மையைச் சொல்ல அவள் விரும்புகிறாள். அவளுடன் நேர்மையாக இருப்பதற்கான உங்கள் வாக்குறுதிகளை காப்பாற்றுங்கள். அந்த நம்பிக்கையை நீங்கள் உடைக்க வேண்டாம்.

அவள் சொல்வதைக் கேளுங்கள்

அவள் சொல்வதைக் கேளுங்கள்

உங்கள் காதலி அல்லது மனைவி சொல்வதைக் கேளுங்கள். உங்கள் சொந்த ஆலோசனை அல்லது நீங்கள் என்ன சொல்ல வேண்டும் என்பதை அவள் பேசும்போது குறுக்கிடாதீர்கள். சில சமயங்களில், அவள் விரும்புவது கேட்பதற்கு எது வழியும் இல்லாமல் போய்விடும். ஒவ்வொரு விஷயத்திலும் உங்கள் மனைவி அல்லது காதலியை கேட்பது, அவள் மீது நீங்கள் வைத்திருக்கும் அன்பை காட்டும். அதை அவள் நிச்சயமாகப் பாராட்டுவாள்.

அவளை சிறப்பாக நடத்துங்கள்

அவளை சிறப்பாக நடத்துங்கள்

நீங்கள் உங்கள் காதலி அல்லது மனைவியை உங்கள் விசுவாசமான தோழியாக நடத்தினால் பரவாயில்லை. அவள் அதைப் பாராட்டலாம். ஆனால், நீங்கள் எப்போதும் உங்கள் தோழியைப் போல நடத்த அவள் விரும்புவதில்லை. அவள் உங்கள் தோழியாகவோ அல்லது துணையாகவோ இருந்தால், அவளைப் போலவே நடத்துங்கள். அவள் உங்கள் வாழ்க்கையில் ஒரு சிறப்பு வாய்ந்த நபர், அதற்காக அவள் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறாள். இது எல்லா பெண்களுக்கும் இருக்கும் ஒரு எதிர்பார்ப்பு.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Truths women wish men always understood in tamil

Here we are talking about the Truths women wish men always understood in tamil.
Story first published: Thursday, January 12, 2023, 21:51 [IST]
Desktop Bottom Promotion