Just In
- 9 hrs ago
புதிதாக திருமணமான தம்பதிகள் படுக்கையறைக்கு செல்வதற்கு முன்பு என்ன செய்கிறார்கள் தெரியுமா?
- 11 hrs ago
2019 மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டியில் கலந்து கொண்ட முதல் லெஸ்பியன் போட்டியாளர்!
- 13 hrs ago
கார்த்திகை தீப நாளில் சொக்கப்பனை கொளுத்துவது ஏன் தெரியுமா?
- 14 hrs ago
கார்த்திகை தீபத்தன்று வீட்டில் விளக்குகள் ஏற்றுவதால் என்ன பலன்கள் கிடைக்கும்?
Don't Miss
- News
எதிர்க்கட்சியினர் வதந்தி பரப்புகிறார்கள், சிறுபான்மையினர் பயப்படாதீர்கள்: லோக்சபாவில் அமித் ஷா உறுதி
- Finance
நல்ல லாபம் கொடுக்கும் மிட் கேப் மியூச்சுவல் ஃபண்டுகள்..!
- Sports
ஏன் இப்படி பண்றீங்க? மைதானம் முழுக்க ஒலித்த தோனி பெயர்.. கடுப்பான கோலி!
- Automobiles
"வாகன துறையில் வேலையிழப்பே கிடையாது" - சர்ச்சை பதிலை கூறிய பாஜக தலைவர் யார் தெரியுமா..?
- Movies
உண்மையான ஹீரோ சொந்த சகோதரியை காயப்படுத்தி ஏமாற்ற மாட்டான்.. அருண்விஜய் மீது பாய்ந்த வனிதா!
- Education
TNPSC Group 1: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு!
- Technology
மொபைல்போன் வாங்கினால் 1கிலோ வெங்காயம் இலவசம்.!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
உங்களுக்கு பிடித்தவர்களுக்கு உங்களை பிடிக்காமல் போகக் காரணம் உங்களின் இந்த செயல்தான்...!
அனைவருக்குமே பிடித்தவர்களாக இருக்க வேண்டுமென்ற ஆசை அனைவருக்குமே இருக்கும். ஆனால் அனைவருக்கும் பிடித்தவராக இருப்பது என்பது யாருக்குமே கிடைக்காத வரமாகும். நாம் எவ்வளவு நல்லவராக இருந்தாலும் நம்மை வெறுப்பவர்கள் இருக்கத்தான் செய்வார்கள். உங்களை வெறுக்க நீங்கள் தவறான காரியங்களை செய்ய வேண்டும் என்று அவசியமில்லை.
நீங்கள் சரியான காரியங்கள் அல்லது சாதாரண செயல்கள் என நினைத்தும் செய்யும் செயல்கள் கூட மற்றவர்கள் உங்களை வெறுக்க காரணமாக மாறிவிடும். உங்களின் எந்தெந்த செயல்களால் உங்களுக்கு பிடித்தவர்கள் உங்களை வெறுக்கத் தொடங்குகிறார்கள் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

செல்போனை நோண்டுவது
ஒருவரிடம் நீங்கள் பேசத் தொடங்கும்போது அவர்கள் தங்கள் போனை எடுத்து நோண்ட ஆரம்பித்தால் உங்களுக்கு எவ்வளவு கோபம் வரும். அதேபோலத்தான் நீங்கள் இதனை செய்யும்போது மற்றவர்களுக்கும் உங்கள் மீது கோபம் வரும். எந்த காரணமாக இருந்தாலும் இதனை செய்வது எதிரில் இருப்பவர்களுக்கு எரிச்சலையும், அவமரியாதையையும் ஏற்படுத்தும். எதிரில் இருப்பவர்களை மதித்து பேசும்போதே நீங்கள் அவர்களுக்கு பிடித்தவர்களாக மாறிவிடுவீர்கள்.

அதிகமாக பகிர்ந்து கொள்வது
உங்களின் ரகசியங்களை நீங்கள் யாரிடம் பகிர்ந்து கொள்கிறீர்கள், எவ்வளவு பகிர்ந்து கொள்கிறீர்கள் என்பது உங்களின் தனிப்பட்ட தோற்றத்தை நிர்வாகிப்பதில் முக்கியப்பங்கை வகிக்கிறது. எவ்வளவு நெருங்கிய நண்பராக இருந்தாலும் அவர்களிடம் குறிப்பிட்ட அளவான ரகசியங்களை மட்டும்தான் பகிர்ந்து கொள்ள வேண்டும். ஒருவரை நீங்கள் சந்தித்தால் உங்களைப் பற்றிய உணமைகளையும், ரகசியங்களையும் உங்களுக்குள்ளேயே வைத்திருங்கள். குறைந்தபட்சம் சிறிது காலமாவது எடுத்துக்கொள்ளுங்கள். உங்களின் சோகக் கதைகளை கூறுவதற்குப் பதிலாக அவர்களின் மீது அக்கறை செலுத்துவதில் கவனம் செலுத்துங்கள். எப்போதும் உங்களைப் பற்றியே பேசிக்கொண்டே இருப்பது உங்கள் உடனிருப்பவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தும்.
MOST READ: 70,000 பேரை பாலியல் அடிமையாக வைத்திருந்த அரசனுக்கு நேர்ந்த கொடூர முடிவு என்ன தெரியுமா?

கிசுகிசு
வதந்திகள் பரப்புவது என்பது நாம் அனைவரும் அடிக்கடி செய்யும் ஒரு செயலாகும். ஆனால் நீங்கள் எவ்வளவு வதந்திகளை பரப்புகிறீர்கள் என்பதற்கு ஒரு எல்லை உள்ளது. பெரிய மனது உடையவர்கள் கருத்துக்களை விவாதிப்பார்கள், சராசரி மனது உடையவர்கள் நிகழ்வுகளைப் பறரி விவாதிப்பார்கள், ஆனால் சிறிய மனது கொண்டவர்கள் மட்டுமே மக்களைப் பற்ரீ விவாதிப்பார்கள். எனவே மற்றவர்களைப் பற்றி அதிகம் வதந்திகளை பரப்புவது உங்களை மற்றவர்கள் வெறுக்க காரணமாகி விடும்.

வெளிப்படையாக இல்லாமல் இருப்பது
ஒரு விஷயத்தைப் பற்றி முடிவு செய்துவிட்டு பேசுபவர்களிடம் விவாதிப்பதில் எந்த சுவாரஸ்யமும் இருக்காது. தான் நினைப்பதுதான் சரி என்று நினைப்பவர்கள் எப்பொழுதும் வேடிக்கையானவர்களாக இருக்க மாட்டார்கள். அனைவருக்கும் பிடித்தவர்களாக இருப்பதன் முக்கியமான அங்கம் மற்றவர்கள் சொல்வதை கேட்பதும், அவர்கள் கூறும் கருத்துக்கு மரியாதை அளிப்பதும்தான். மற்றவர்கள் கூறும் அனைத்தையும் நீங்கள் ஒப்புக்கொள்ள வேண்டுமென்ற அவசியமில்லை, ஆனால் திறந்த மனதுடன் அவர்கள் பேசுவதை கேட்பது நல்லது.

ஆர்வமாக இல்லாமல் இருப்பது
மற்றவர்கள் எப்பொழுதும் பேச்சை நிறுத்துவார்கள் நீங்கள் எப்பொழுது பேசத் தொடங்கலாம் என்று நினைப்பது மற்றவர்கள் மீது உங்களுக்கு இருக்கும் ஆர்வமின்மையை குறிக்கும். மற்றவர்களின் பேச்சுக்களில் நீங்கள் காட்டும் ஆர்வமின்மை உங்களுக்கு அவர்களின் வெறுப்பைத்தான் பெற்றுத்தரும். இப்படிப்பட்டவர்களாக ஒருபோதும் இருக்காதீர்கள். மற்றவர்கள் பேச்சை போலி ஆர்வத்துடனாவது கேட்க கற்றுக்கொள்ளுங்கள்.
MOST READ: சுயஇன்பத்திற்கு பிறகு இதையெல்லாம் கண்டிப்பா பண்ணனுமாம்... இல்லைனா ஆபத்துதான்...!

தற்பெருமை
தற்பெருமை என்பது உங்களிடம் இருக்கும் மிகவும் மோசமான குணங்களில் ஒன்றாகும். எவ்வளவு நல்ல குணங்கள் இருந்தாலும் இந்த ஒற்றைக்குணம் உங்களை அனைவரையும் வெறுக்கும்படி செய்யும். அதிலும் மற்றவர்களை சிறுமைப்படுத்தி உங்களை பெருமையாக பேசிக் கொள்வது உங்களை அனைவரையும் வெறுக்க வைக்கும்.