Just In
- 5 hrs ago
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்களின் திருமணம் பற்றி வீட்டில் பேச தொடங்கலாம்...
- 14 hrs ago
Coconut Rice Recipe : சுவையான... தேங்காய் சாதம்
- 15 hrs ago
ஆண்களே! உங்க மனைவிகிட்ட இந்த அறிகுறிகள் தெரிஞ்சா ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணுமாம்...ஏன் தெரியுமா?
- 15 hrs ago
இந்த பிரச்சனை இருந்தா மாம்பழம் சாப்பிடாதீங்க... இல்லன்னா அது பெரிய ஆபத்தாயிடும்...
Don't Miss
- News
அண்ணாமலை ஒரு நகைச்சுவை நடிகர்... மோடி சான்ஸ மிஸ் பன்னிட்டாரு.. ஆனால் ஸ்டாலின்! - சுப.வீரபாண்டியன்
- Movies
நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணம் இங்க தான் நடக்குதா...திருப்பதியில் இல்லையா?
- Automobiles
தானே சார்ஜ் செய்யும் ஹைபிரிட் வசதியுடன் வரும் மாருதி சுஸுகி கார்! க்ரெட்டாவிற்கு வேற லெவல் ஆப்பு காத்திருக்கு!
- Finance
2000 ரூபாய் நோட்டுக்கு எண்ட் கார்டா? ரிசர்வ் வங்கியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது என்ன?
- Sports
தினேஷ் கார்த்திக் தான் காரணம்.. பதற்றத்தில் செய்த அந்த ஒரு தவறு.. ஆர்சிபி -ன் கனவு தகர்ந்தது எப்படி?
- Technology
ரீசார்ஜ் செய்தால் JioFi சாதனம் இலவசம்: ரூ.249, ரூ.299, ரூ.349 விலையில் மூன்று ரீசார்ஜ் திட்டங்கள் அறிமுகம்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஆண்கள் காதலில் செய்யும் மிகப்பெரிய தவறுகள் என்னென்ன தெரியுமா? மறந்தும் இத பண்ணிராதீங்க!
சில நேரங்களில் ஆண்கள் தங்களின் சாதாரண செயல்கள் தங்கள் பெண்களை விரட்டக்கூடும் என்ற உண்மையை மறந்துவிடுகிறார்கள். முரட்டுத்தனமாக, அவமரியாதையாக நடந்துகொள்வது, தொடர்ந்து வாதிடுவது ஆகியவை ஆண்கள் செய்யும் சில விஷயங்கள் மட்டுமே, அவை மெதுவாகத் தங்கள் துணையிலிருந்து விலகிச் செல்கின்றன.
ஆண்கள் அவர்களின் தவறுகளைத் திருத்திக் கொள்ள எந்த முயற்சியும் செய்யாதபோது, பெண்கள் அவர்களை விட்டு வெளியேற நேரத்தை வீணாக்க மாட்டார்கள். சற்றும் சிந்திக்காமல் தங்கள் உறவை விட்டு வெளியேறுவார்கள். ஆண்கள் பெண்களிடம் தவறாக செய்யும் சில விஷயங்கள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

நாசீசிஸ்டிக்காக இருப்பது
எப்பொழுதும் தன்னைப் பற்றி வெறித்தனமாக இருக்கும் ஒரு மனிதன் தனது துணையின் தேவைகளைப் பார்க்கவோ அல்லது புரிந்து கொள்ளவோ தவறிவிடுகிறார். ஒரு உறவைப் புரிந்துகொள்வதற்கும் அதை பாதுகாப்பதற்கும் இருவர் தேவைப்படுகிறார்கள், மேலும் ஆணால் தனது பெண்ணை தனது வாழ்க்கையில் வரவேற்க முயற்சி செய்ய முடியாவிட்டால், அவர் எல்லாவற்றையும் தவறாக செய்கிறார். இறுதியில் அவர்களின் உறவு முடிவுக்குத்தான் வரும்.

அதிகமாக பொய் கூறுவது
பொய் எவ்வளவு சிறியதாக இருந்தாலும் சரி, பெரியதாக இருந்தாலும் சரி, ஒரு பொய் பொய்தான். எந்தவொரு காரணத்திற்காகவும் பெண்கள் தங்கள் துணை தங்களிடம் பொய் சொல்வதை பொறுத்துக்கொள்ள மாட்டார்கள், ஏனென்றால் அது நம்பிக்கை மற்றும் விசுவாசத்தின் அனைத்து அடிப்படைகளையும் உடைக்கிறது. மோசமான விஷயம் என்னவென்றால், அந்தப் பெண் மீண்டும் தங்கள் ஆணை நம்புவதைப் பற்றி நினைத்துக் கூட பார்க்க மாட்டார்கள்.

சரியாக பேசாமல் இருப்பது
உறவு என்பது உங்கள் துணையுடன் நீங்கள் எப்படி பேசுகிறீர்கள் என்பதைப் பற்றியது. ஒரு ஆண் தன் பெண்ணிடம் பேச மறுத்து, தன்னைப் பற்றி அதிகம் பேசினால், அந்த பெண் எவ்வளவோ முயற்சி செய்தாலும், இறுதியில் அந்த உறவு நீடிக்காது. எந்தவொரு உறவுக்கும் தொடர்பு என்பது முக்கிய மற்றும் ஆக்ஸிஜன் போன்றதாகும். எனவே உங்கள் உறவை பாதுகாக்க விரும்பினால் நன்றாக பேச கற்றுக்கொள்ளுங்கள்.

அவர்களுக்கு பிடித்தது என்னவென்று தெரியாமல் இருப்பது
உங்கள் காதலி/மனைவிக்குப் பிடிக்காத பரிசைக் கொடுப்பது உறவின் தொடக்கத்தில் ஓரிரு முறை ஏற்றுக்கொள்ளத்தக்கது. ஆனால், ஒரு ஆண் தனக்குப் பிடிக்காத பொருட்களைப் பெற்றுக் கொண்டால், அது தன் பெண் எதை விரும்புகிறாள் என்று ஆணுக்குத் தெரியாது என்பதற்கான அறிகுறியாகும். மேலும் இது ஒரு நல்ல அறிகுறி அல்ல.

போதுமான நேரம் செலவழிக்காமல் இருப்பது
ஒரு ஆண் உறவைப் பாதுகாத்துக் கொள்வதற்கு ஒரு உறவில் போதுமான நேரத்தை செலவிட வேண்டும். அவர் தனது பெண்ணைப் புரிந்துகொள்வதற்கு நேரம் ஒதுக்கவில்லை என்றால், அல்லது தன் காதலி/மனைவிக்கு என்ன தேவை என்பதைப் பற்றி அவர் உண்மையில் கவலைப்படாமல் இருந்தால் அது மிகவும் தவறான ஒன்றாகும். ஆண்களால்தங்கள் காதலியின் உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடியாவிட்டால், அவர் உட்கார்ந்து அவர்களின் உணர்வுகளைப் பற்றி பேசுவதற்கு நேரம் ஒதுக்க வேண்டும்.