Latest Updates
-
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால்… அதிர்ஷ்டமும் பணமும் தேடி வரும்! -
காலிஃப்ளவரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி இப்படி மிளகு வறுவல் செய்யுங்க.. அள்ளும்.. -
ஐயங்கார் ஸ்டைல் அப்பளக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப மூளையில் கட்டி இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் டாக்டர்! -
இந்த 5 ராசி பெண்கள் காதலில் துரோகம் செய்பவர்களாக இருப்பார்களாம் - உங்க காதலி ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க வாயை திறந்தாலே பிரச்சனையை சந்திப்பாங்க.. உஷார்! -
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் உள்ளவர்கள் சமூகத்தில் எல்லோராலும் மதிக்கப்படுவார்களாம் - உங்ககிட்ட இருக்கா? -
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்!
இந்த அறிகுறிகள் இருப்பவர்கள் செக்ஸ்க்கு அடிமையாகி இருப்பார்கள்..., இவங்ககிட்ட ரொம்ப உஷாரா இருங்க...!
சிகரெட், மது, போதைப்பொருட்கள் போல செக்ஸும் ஒருவகை போதைதான். மற்ற போதைகளைக் காட்டிலும் இது மிகவும் ஆபத்தான போதையாகும்.
இந்த உலகத்தில் பலவகையான போதைகள் உள்ளது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விஷயத்திற்கு அடிமையாக இருப்பார்கள். சிகரெட், மது, போதைப்பொருட்கள் போல செக்ஸும் ஒருவகை போதைதான். மற்ற போதைகளைக் காட்டிலும் இது மிகவும் ஆபத்தான போதையாகும். ஏனெனில் இது உங்களை உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் பலவீனப்படுத்துவதுடன் சமூகத்தில் உங்களுக்கு கேவலமான அடையாளத்தை பெற்றுத்தரும்.

அனைத்து மனிதர்களுக்கும் காம உணர்வு என்பது பொதுவானது, அது இருக்க வேண்டியதும் அவசியமானது. ஆனால் அந்த உணர்வு எல்லைமீறி செல்லும்போது அதற்கு நீங்கள் அடிமையாக மாறிவிடுவீர்கள். இதில் மோசமானது என்னவெனில் தாங்கள் இதற்கு அடிமையாக இருப்பதை பலரும் உணர்வதேயில்லை. இந்த அறிகுறிகளில் ஏதெனும் உங்களுக்கு இருந்தால் நீங்கள் பாலியல் அடிமைகளாக இருக்கிறீர்கள் என்று அர்த்தம். உடனடியாக மருத்துவரை அணுகுங்கள்.

இரட்டை வாழ்க்கை வாழ்வீர்கள்
இது ஒரு தந்திரமானது. ஒருவேளை நீங்கள் எப்போதுமே ஏமாற்றி, நீங்கள் எங்கிருக்கிறீர்கள், உங்கள் பணத்தை எவ்வாறு செலவிடுகிறீர்கள் என்று பொய் சொல்லலாம். அதுவே உங்களை அடிமையாக்குவதில்லை. ஆனால், நீங்கள் யாருடனும் பகிர்ந்து கொள்ள மறுக்கும் பாலியல் ரகசியங்கள் இருந்தால், அல்லது எப்படியாவது இரண்டு வெவ்வேறு பெண்களுடன் நேரத்தை கழிப்பதற்கான வழிகளைக் கண்டால் நீங்கள் பாலியலுக்கு அடிமையாக இருக்க வாய்ப்புள்ளது. செக்ஸ் மற்றும் பாலியல் வாய்ப்புகள் தனிப்பட்டவை, ஆனால் நீங்கள் யாரென்று மற்றவர்களுக்கு தெரியக்கூடாது என்று நீங்கள் தொடர்ந்து பொய் கூறினால் நீங்கள் பிரச்சினையின் ஆரம்ப நிலையில் இருக்க வாய்ப்புள்ளது.

மற்றவர்களை பாலியல் தேவைக்காக பயன்படுத்துவது
அடிப்படையில் நீங்கள் நல்லவராக இருக்கலாம், மற்றவர்களின் துன்பங்களில் பங்கு கொண்டு அவர்களுக்கு உதவி செய்பவர்களாக இருக்கலாம். ஆனால் உடலுறவு என்று வரும்போது நீங்கள் மற்றவர்களைப் பற்றி மிகக்குறைவாகவே கவலைப்படுவீர்கள், அவர்களை நீங்கள் வெறும் பொருளாகவே பார்ப்பீர்கள். கலவி முடிந்ததும் அவர்களைப் பற்றி கவலைப்படமாட்டீர்கள். உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப அவர்களை எப்படி வேண்டுமென்றாலும் பயன்படுத்திக் கொள்வீர்கள்.

வாழ்க்கை தொடர்ந்து நெருக்கடியில் இருப்பது
செக்ஸிற்கு எப்போதும் முதலிடம் கொடுப்பதால், மற்ற விஷயங்களில் எப்போதும் குழப்பமாக காணப்படுவீர்கள். உங்களின் பாலியல் தேவைக்கு பலர் தேவைப்படுவதால் எப்போதும் அதனை பெறுவதற்கான முயற்சியில் இருப்பீர்கள். எப்படி பெண்களை கவர்வது, எப்படி அவர்களை உடலுறவுக்கு இணங்க வைப்பது, எப்படி சமாளிப்பது என்று எப்போதும் சிந்தித்துக் கொண்டே இருப்பீர்கள். படிப்பு, வேலை, காதல் எல்லாமே உங்களுக்கு இரண்டாம் பட்சமாகத்தான் இருக்கும்.

எப்போதும் சுயஇன்பம் செய்து கொண்டிருப்பது
உண்மைதான், பாலியலுக்கு அடிமையானவர்கள் காலை, மதியம், மாலை என நேரம் கிடைக்கும் போதெல்லாம் சுயஇன்பம் காண்பார்கள். இது அறிகுறிதானே தவிர இறுதி முடிவல்ல. ஆனால் வாரத்திற்கு 20 முறைக்கு மேல் சுயஇன்பம் செய்பவராக இருந்தால் நிச்சயம் அவர் செக்ஸிற்கு அடிமையானவர்கள்.

காதலில் எப்பொழுதும் குழப்பங்கள் இருக்கும்
பாலியல் தொடர்பான பைத்தியக்காரத்தனமான செயல்களை செய்வதால் இவர்களின் காதல் எப்போதும் பிரச்சினையில் இருக்கும், சிலசமயம் முறிந்து கொண்டேயிருக்கும். பெரும்பாலும் காதலை தாண்டிய உறவுகளில் ஈடுபடுவது அதன்மூலம் மாட்டிக்கொள்வது என இவர்களின் காதல் வாழ்க்கை எப்போதும் மோசமானதாக இருக்கும்.

உடலுறவால் ஈர்க்கப்படுவது
இது சாதாரணமான ஒன்றுதான். ஆனால் 10 நிமிடத்திற்கு மேல் எதன்மீதும் கவனம் செலுத்த முடியாமல் உங்களின் எண்ணங்கள் உடலுறவை நோக்கி நகர்ந்தால் அது ஆபத்தானதாகும். கற்பனை முடிந்தவுடன் நீங்கள் எப்படி உடலுறவு கொள்ளலாம் என்று திட்டமிடுவீர்கள். உடலுறவு முடிந்தபின் மீண்டும் உங்கள் கற்பனையை தொடருவீர்கள். இது நீங்கள் பாலியலுக்கு எவ்வளவு அடிமையாக இருக்கிறீர்கள் என்பதை உணர்த்தும்.

விளைவுகளைப் பொருட்படுத்தாமல் உடலுறவு கொள்வது
செக்ஸிற்கு அடிமையாக இருப்பவர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் இருக்க மாட்டார்கள். உங்களின் மனைவியை தவிர்த்து பல்வேறு பெண்களுடன் தொடர்பில் இருப்பது அது உங்கள் வாழ்க்கையை மோசமாக்குவதை உணராமல் இருப்பது போன்றது மிகவும் ஆபத்தான செயல்பாடாகும். இது உங்கள் எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்காமல் எந்நேரமும் காமத்தில் மூழ்கியிருப்பது நீங்கள் தீவிர அடிமையானதன் அறிகுறியாகும்.

சக்தியற்றவராக உணர்வது
நீங்கள் உடலுறவில் ஈடுபடுவதை நிறுத்த முடியாது, நீங்கள் நிறுத்த முயற்சித்தாலும் முடியாமல் அனைத்தையும் இழந்தது போல உணருவீர்கள். பாலியல் அடிமைகள் கொஞ்சம் கொஞ்சமாக தங்கள் ஆற்றலை இழப்பீர்கள். இறக்கும் வரை உங்களால் இதனை நிறுத்த முடியாது என்று நீங்கள் நினைத்தால் நீங்கள் முழு அடிமையாகி விட்டீர்கள் என்று அர்த்தம்.

உங்களை நீங்களே வெறுப்பது
உங்களின் செயல்கள் உங்களுக்கே வெறுப்பை ஏற்படுத்தினாலோ அல்லது எப்போதும் குற்ற உணர்வில் தவித்தாலோ அல்லது உங்களை நீங்களே தொடர்ந்து துன்புறுத்திக் கொண்டிருந்தாலோ உங்களின் மீது நீங்களே கோபத்தில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம். இந்த உணர்வுக்கு உங்களின் தீராத பாலியல் வேட்கையும் காரணமாக இருக்கலாம்.



Click it and Unblock the Notifications