Latest Updates
-
இந்த 5 ராசி பெண்கள் காதலில் துரோகம் செய்பவர்களாக இருப்பார்களாம் - உங்க காதலி ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க வாயை திறந்தாலே பிரச்சனையை சந்திப்பாங்க.. உஷார்! -
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் உள்ளவர்கள் சமூகத்தில் எல்லோராலும் மதிக்கப்படுவார்களாம் - உங்ககிட்ட இருக்கா? -
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட..
இந்த அறிகுறிங்க இருந்தால் உங்க காதலி உங்களை கழட்டிவிட போறாங்களாம்... உஷாரா இருங்க...!
நேர்மையான பெண்கள் தங்களை உறவில் இருந்து வெளியேற்றிக்கொள்ள முடிவெடுத்துவிட்டால் உடனடியாக அதனை செய்துவிடுவார்கள், ஆனால் அப்படிப்பட்ட பெண்கள் அரிதிலும் அரிதே.
காதல் என்பது ஒரு அற்புதமான உணர்வாகும். அனைவரின் வாழ்க்கையிலும் காதல் இன்றியமையாத ஒரு முக்கிய இடத்தை வகிக்கிறது. ஆனால் மாறிவிட்ட இன்றைய கால சூழலில் காதலின் அர்த்தமே பெரிதும் மாறிவிட்டது. ஒரே நேரத்தில் பலரை காதலிப்பது என்பது இன்று பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. ஆனால் இதற்கு பெயர் காதலே அல்ல.

காதலில் இன்று ஆண், பெண் இருவருமேதான் கழட்டி விடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்கள். நேர்மையான பெண்கள் தங்களை உறவில் இருந்து வெளியேற்றிக்கொள்ள முடிவெடுத்துவிட்டால் உடனடியாக அதனை செய்துவிடுவார்கள், ஆனால் அப்படிப்பட்ட பெண்கள் அரிதிலும் அரிதே. ஏனைய பெண்கள் தாங்கள் உறவில் இருந்து வெளியேறுவதற்கு முன் பல குறிப்புகளை கொடுத்து காரணங்களை உருவாக்கிக் கொள்வார்கள். பெண்கள் காதலை முறித்துக் கொள்ள போவதை எப்படி கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்படுத்துவார்கள் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

மெசேஜ் அனுப்புவதை நிறுத்துவார்கள்
மெசேஜ் அனுப்புவது என்பது பெண்களுக்கு மிகவும் முக்கியமானதாகும். தாங்கள் அருகில் இல்லாவிட்டாலும் தங்களின் அன்பை வெளிப்படுத்த உதவும் சிறந்த வழியாக பெண்கள் நினைப்பது மெசேஜ் அனுப்புவதைத்தான். அக்கறையுள்ள பெண்கள் எவ்வளவு வேலையிருந்தாலும் மெசேஜ் அனுப்ப மறக்க மாட்டார்கள். உங்களின் மீதான அவர்களின் விருப்பம் குறையும்போது உங்களின் திரையை அவர்களின் மெசேஜ் அலங்கரிக்காது.

தங்கள் வாழ்க்கை, நண்பர்களை பற்றி பேசுவதை நிறுத்துவார்கள்
பெண்கள் பொதுவாக தங்கள் நம்பிக்கைக்கு உரிய ஆணிடம் தங்களின் வாழ்க்கைப் பற்றியும், நண்பர்களைப் பற்றியும் எப்பொழுதும் விவாதிப்பார்கள். உங்களுடன் காதலில் இருக்கும்போது அவர்களின் நாள் எப்படிச் சென்றது போன்ற தகவல்கள் தானாகவே வரும். ஒரு பெண் தனது நாள் மற்றும் அவரது வாழ்க்கையில் உள்ளவர்களைப் பற்றி பேசுவதை நிறுத்தினால் அவர் உங்கள் மீது இருக்கும் காதலை முறித்துக் கொள்ள நினைக்கிறார்.

சமூக வாழ்க்கையில் இருந்து உங்களை வெளியேற்றுவார்கள்
தங்கள் நண்பர்களுடன் அல்லது குடும்பத்தினருடன் வெளியே செல்ல உங்களுக்கு அழைப்பு இல்லாமலோ அல்லது அவரின் பிறந்த நாளை மறந்ததற்கு உங்களிடம் சண்டை போடாமல் இருந்தாலோ அவர்களின் வாழ்க்கையில் நீங்கள் ஒரு பகுதியாக இருப்பதை அவர்கள் விரும்பவில்லை என்று அர்த்தம். நீங்கள் அவர்களின் நண்பர்களுடனும், உறவினர்களுடனும் பழகுவதை அவர்கள் தவிர்க்க விரும்புகிறார்கள் என்பதன் சிக்னல்தான் இது.

உங்கள் நாளின் விவரங்களை கேட்பதை நிறுத்துவார்கள்
உங்களை காதலிக்கும் பெண் நீங்கள் செய்யும் ஒவ்வொரு விஷயத்திலும் ஆர்வமாக இருப்பார்கள், உங்களின் மீது எப்பொழுதும் அக்கறையாக செயல்படுவார்கள். உங்களுடனான உரையாடலை வளர்த்துக் கொள்ள முயற்சிப்பார்கள். உங்களுடனான உரையாடலை வளர்த்துக் கொள்ள அவர்கள் எந்த முயற்சியும் செய்யாவிட்டால் உங்களின் காதலை அவர்கள் முறித்துக் கொள்ள நினைக்கிறார்கள் என்று அர்த்தம்.

எதிர்கால திட்டமிடலில் ஆர்வம் காட்டமாட்டார்கள்
ஒரு ஆணுடன் உண்மையான காதலில் இருக்கும் பெண் அவருடனான தன்னுடைய எதிர்காலம் குறித்து பல திட்டங்களைத் தயாராக வைத்திருப்பார்கள். ஆனால் உங்கள் காதலி அப்படி உங்களுடன் இதுபோன்ற எந்தவிதமான செயலிலும் ஈடுபடமாட்டார்கள். குறிப்பாக திருமணம் குறித்து எந்த பேச்சும் அவர்களிடம் இருக்காது. இது அவர்கள் உங்களை கழட்டி விடபோவதற்கான முக்கியமான அறிகுறியாகும்.

எப்போதும் வெறுப்புடன் இருப்பது
உங்களுடன் இருக்க விரும்பாத ஒரு பெண் அனைத்து விஷயங்களிலும் சுறுசுறுப்பு இன்றியும், எதிர்மறையாகவும் இருப்பார்கள். உங்களுடன் இருப்பது தனக்கு மகிழ்ச்சியை அளிக்கவில்லை என்பதை வெளிப்படுத்த இவ்வாறு அவர்கள் நடந்து கொள்ள தொடங்குவார்கள்.

உடல்ரீதியான நெருக்கத்தை தவிர்ப்பது
நீங்கள் அவர்கள் அருகில் செல்லும்போதோ அல்லது கட்டியணைக்க முயலும்போது அவர்கள் கோபமாக விலகினால் அது அவர்கள் கூறும் முக்கியமான அறிகுறியாகும். நீங்கள் மட்டும்தான் அவர்களிடம் உடல்ரீதியான நெருக்கத்தை விரும்புவீர்களே தவிர அவர்கள் விரும்பமாட்டார்கள். இது உங்களின் காதலை முறித்துக் கொள்ள அவர்கள் வெளிப்படுத்தும் ஆக்ரோஷமான அறிகுறி இதுவாகும்.

பாராட்டை ஏற்றுக்கொள்ள மறுப்பது
எந்தவொரு பெண்ணும் தன்னுடைய அழகைப் பற்றியும் கவர்ச்சியைப் பற்றியும் நீங்கள் கூறும் பாராட்டை ஏற்றுக்கொள்வார்கள். ஆனால் உங்கள் காதலி நீங்கள் அவ்வாறு செய்யும்போது அதனை ஏற்றுக்கொள்ளாததுடன் உங்களிடம் கோபமாகவும் நடந்து கொள்வது உங்கள் காதல் முறிவு வெகுநாட்களில் இல்லை என்பதற்கான அறிகுறியாகும்.

பொறாமை படமாட்டார்கள்
பொதுவாக பொறாமை என்பது பெண்களுக்கு கூடவே பிறந்த குணமாகும். காதலில் இருக்கும்போது பெண்கள் தங்கள் காதலனை பிற பெண்களிடம் பேசுவதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள். ஏனெனில் தங்களின் காதலை அவர்கள் பிரித்து விடுவார்கள் என்ற பயம் அவர்களுக்கு இருக்கும். ஆனால் உங்கள் காதலில் இருந்து விலக முடிவெடுத்து விட்டால் நீங்கள் எந்த பெண்ணிடம் பேசினாலும் அதைப்பற்றி உங்களிடம் சண்டை போடமாட்டார்கள்.

வாக்குவாதங்களில் வெற்றிபெற விடுவார்கள்
உங்களுடனான காதலை முறித்துக் கொள்ள விரும்பும் பெண் உங்களை அனைத்து விவாதங்களிலும் வெல்ல அனுமதிப்பார்கள். தங்களின் கருத்தை நிரூபிக்கவோ அல்லது தங்கள் பக்க நியாத்தை எடுத்துக் கூறவோ அவர்கள் நினைக்கமாட்டார்கள். அவர்களைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதைப் பற்றி அவர்கள் கவலைப்படமாட்டார்கள்.



Click it and Unblock the Notifications