Latest Updates
-
மட்டன் வாங்குனா இந்த மாதிரி நெல்லூர் ஸ்டைலில் குழம்பு வைச்சு பாருங்க... தோசை, சாதத்துக்கு சூப்பரா இருக்கும்... -
திரிகிரக யோகம் கும்ப ராசியில் உருவாவதால் இந்த 3 ராசிக்காரர்களை தோல்வியும், துரதிர்ஷ்டமும் துரத்தப்போகுதாம்...! -
1 கப் கோதுமை ரவா இருந்தா இந்த மாதிரி அடை செஞ்சு பாருங்க... சூப்பரான காலை உணவா இருக்கும்... ட்ரை பண்ணுங்க...! -
இந்தியாவின் முதல் பெண்களுக்கான பள்ளி எப்போது திறக்கப்பட்டது? எந்த ஊரில் திறக்கப்பட்டது தெரியுமா? -
உருளைக்கிழங்கை ஒருதடவை இந்த மாதிரி கொங்குநாடு ஸ்டைலில் குருமா வைச்சு பாருங்க...டக்கரான சைடிஷா இருக்கும்...! -
அமெரிக்க-ஈரான் போரால் துபாயில் சரசரவென குறையும் தங்கம் விலை...இந்தியாவிலும் தங்கம் விலை குறையுமா? உண்மை என்ன? -
இந்த 4 ராசிக்காரங்க உயிரை கொடுத்தாவது குடும்பத்தை பாதுகாக்கும் ரியல் ஹீரோவாக இருப்பார்களாம்...உங்க ராசி என்ன? -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. தொப்பையும், உடல் எடையும் இருமடங்கு வேகத்துல குறையும்.. -
இன்றைய ராசிபலன் 07 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஆரோக்கிய பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருக்காம்...! -
சனிப்பெயர்ச்சி 2026: இந்த 5 ராசிக்காரங்க ரொம்ப ரொம்ப கவனமாக இருக்கணுமாம்... உங்க ராசி இதுல இருக்கா?
உங்களிடம் இந்த அறிகுறிகள் இருந்தா... நீங்க எல்லாரையும் ஈஸியா கவர்ந்திடுவீங்களாம் தெரியுமா?
சில நேரங்களில், மிகவும் வசீகரமாக இருக்கும் நபர்கள் அதை உணர மாட்டார்கள். நீங்கள் வசீகரமாக இல்லை என்று நினைக்கிறீர்கள் எனில், நீங்கள் மிகவும் கவர்ச்சியாக இருக்கிறீர்கள் என்பதற்கான அறிகுறியாக இருக்கலாம்.
அழகு, கவர்ச்சி, வசீகரம் என்ற வார்த்தைகள் அழகான பொருளையோ, இடத்தையோ அல்லது நபரையோ குறிக்கும் ஒன்றாக இருக்கும். ஆனால், அழகு என்ற பொருளுக்கு ஒவ்வொரு நபரின் விளக்கமும் வேறுபடும். சிலர், வெறும் வெளித்தோற்றத்தை மட்டும் வைத்து அழகு என்று கூறுவார்கள், பலர் அகம் சார்ந்ததை அழகு என்று கூறுவார்கள். அகம் எனில், உங்கள் மனம், குணம் ஆகியவற்றை வைத்து நீங்கள் அழகு என்று கூறுவது. பெரும்பாலும் வசீகரம் என்பது அகநிலையை சார்ந்ததாகதான் இருக்கும். மேலும் ஒருவர் வசீகரமானதாகக் கருதுவது மற்றவருக்கு ஒரே மாதிரியாக இருக்காது. ஆனால் சில சமயங்களில் நமது குறைந்த தன்னம்பிக்கை கூட நம் மனதை குழப்பும் மற்றும் நாம் அழகு இல்லாதவர்கள் மற்றும் அசிங்கமானவர்கள் என்று உணர வைக்கலாம்.

இது உங்களுடைய தாழ்வு மனப்பான்மை. இவ்வுலகில் எல்லாமே அழகுதான். பார்ப்பவரின் கண்கள் மற்றும் எண்ணங்களை பொறுத்து அழகுக்கு விளக்கங்கள் மாறுகின்றன. இருப்பினும், இக்கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகளில் ஏதேனும் ஒன்றை நீங்கள் கவனித்தால், நீங்கள் மிகவும் வசீகரமாக இருக்கிறீர்கள் மற்றும் அதை நீங்கள் உணரவில்லை என்பதற்கான அறிகுறியாக இருக்கலாம்.

மக்கள் உங்களை உற்று நோக்குகிறார்கள்
யார் அழகாக இருந்தாலும் அல்லது அழகாக தோற்றமளித்தாலும் அவர்களை மற்றவர்கள் உற்று பார்ப்பார்கள். அப்படி மக்கள் உங்களை அடிக்கடி உற்றுப் பார்ப்பதை நீங்கள் கவனித்தால், நீங்கள் வசீகரமாக இருக்கிறீர்கள் என்று அர்த்தம். ஏனெனில், மக்கள் இயற்கையாகவே அழகின் மீது ஈர்க்கப்படுகிறார்கள். உங்களிடம் அது இருந்தால், அதை அறியாமலேயே மக்களின் கவனத்தை நீங்கள் எளிதில் ஈர்க்கலாம்.

மக்கள் உங்களை வித்தியாசமாக நடத்துகிறார்கள்
மக்கள் உங்களை மற்றவர்களிடமிருந்து வித்தியாசமாக நடத்துவதை நீங்கள் கண்டால், நீங்கள் வசீகரமாகவோ அல்லது மற்றவர்களை கவரும் நபராக இருப்பதற்கான அறிகுறியாக இருக்கலாம். உதாரணமாக, மக்கள் உங்களிடம் மிகவும் கண்ணியமாக நடந்து கொள்ளலாம், அதிக உதவிகளை செய்யலாம், உங்களைச் சுற்றி இருக்க விரும்பலாம் அல்லது உங்களை சுற்றி அவர்கள் பதட்டமாக இருக்கலாம்.

பாராட்டுகளைப் பெறுவீர்கள்
நீங்கள் மக்களிடமிருந்து பாராட்டுகளைப் பெற்றால், நீங்கள் கவர்ச்சிகரமானவர் என்பதற்கான அறிகுறியாக இருக்கலாம். மக்கள் கவர்ச்சிகரமானதாகக் கருதும் விஷயங்களில் மற்றவர்களைப் பாராட்ட விரும்புகிறார்கள். உங்கள் தோற்றத்தில் நீங்கள் பாராட்டுக்களைப் பெறுகிறீர்கள் என்றால், அது நீங்கள் வசீகரமானவர் என்பதற்கான அறிகுறியாக இருக்கலாம்.

நீங்கள் கவர்ச்சியாக இல்லை என்று உணர்கிறீர்கள்
சில நேரங்களில், மிகவும் வசீகரமாக இருக்கும் நபர்கள் அதை உணர மாட்டார்கள். நீங்கள் வசீகரமாக இல்லை என்று நினைக்கிறீர்கள் எனில், நீங்கள் மிகவும் கவர்ச்சியாக இருக்கிறீர்கள் என்பதற்கான அறிகுறியாக இருக்கலாம். அது உங்களுக்குத் தெரியாது. இதை நீங்கள் மற்றவர்களிடம் கூறினால், அவர்கள் கடுமையாக உங்களை விமர்சிப்பார்கள். எனவே நீங்கள் கவர்ச்சிகரமானவர் என்று நினைக்கவில்லை என்றால், நீங்கள் நம்பத்தகாத தரத்துடன் உங்களை ஒப்பிட்டு மக்கள் கூறுவார்கள்.

உங்கள் மீது ஆர்வம் கொண்டவர்கள் அதிகம்
நிறைய பேர் உங்கள் மீது ஆர்வமாக இருந்தால் அல்லது உங்களைப் பின்தொடர்ந்தால், நீங்கள் வசீகரமானவர் என்பதற்கான அறிகுறியாக இருக்கலாம். மக்கள் இயற்கையாகவே அழகின் மீது ஈர்க்கப்படுகிறார்கள். உங்களிடம் அது இருந்தால், உங்களுக்கு நிறைய ரசிகர்கள் இருப்பதை நீங்கள் காணலாம். அவர்கள் உங்கள் மீது மிகுந்த ஆர்வம் மற்றும் அன்பை கொண்டிருக்கலாம்.



Click it and Unblock the Notifications











