Latest Updates
-
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்.. -
உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க..
இந்த அறிகுறிகள் உங்களிடம் இருந்தா... நீங்க தன்பாலின ஈர்ப்பாளரா இருக்க வாய்பிருக்காம் தெரியுமா?
எதிர் பாலினத்தவர்களுடன் ஊர்சுற்றுவது அல்லது வெளியில் செல்வது உங்களுக்கு அசௌகரியமாக இருந்தால், அவர்கள் மீது காதல் அல்லது பாலியல் ரீதியாக உங்களுக்கு எந்த ஆர்வமும் இல்லை என்பதற்கான உறுதியான அறிகுறியாகும்.
காதல் என்பது இயற்கையானது. இது எல்லாருக்கும் ஏற்படும் ஓர் பொதுவான உணர்வு. இனம், மொழி, மதம், சாதி, பாலினம் பார்த்து வருவதல்ல காதல். இவற்றிற்கு அப்பாற்பட்டதுதான் காதல். காதல் என்றாலே ஆண்-பெண் இருவரும் காதலிப்பது மட்டுமல்ல. ஆணும் ஆணும் காதலிப்பதும் பெண்ணும் பெண்ணும் காதலிப்பதும் காதல்தான். 'அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாழ்' என்பதற்கு ஏற்ப அன்பை பாலினத்திற்குள் அடைக்க முடியாது. பாலியல் விருப்பம் என்பது ஒவ்வொரு நபரின் தனிப்பட்ட விருப்பம். இதில், கலாச்சாரம் மற்றும் சடங்குகளுக்கு எந்த இடமும் இல்லை. அந்த வகையில், பாலியல் நோக்குநிலை என்பது ஒருவரின் அடையாளத்தின் தனிப்பட்ட அம்சமாகும்.

மக்கள்தொகையில் பெரும்பாலான மக்கள் எதிர் பாலினத்தவர்களிடம் ஈர்க்கப்பட்டாலும், அதே பாலினத்தவர்களிடம் ஈர்க்கப்படுபவர்களும் உள்ளனர். உங்கள் பாலியல் நோக்குநிலையைப் பற்றி நீங்கள் மிகவும் குழப்பமடைந்திருந்தால், எதிர் பாலினத்தவரிடம் நீங்கள் ஆர்வம் காட்டவில்லை என்பதைக் குறிக்கும் சில உறுதியான அறிகுறிகள் பற்றி இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

ஈர்ப்பு இல்லாமை
எதிர் பாலினத்தவரிடம் ஒருவர் ஆர்வம் காட்டவில்லை என்பதற்கான மிகத் தெளிவான அறிகுறிகளில் ஒன்று, அவர்கள் மேல் ஈர்ப்பு இல்லாமல் இருப்பது. அவர்கள் தங்கள் எதிர் பாலினத்தவரிடம் பாலியல் ரீதியாகவோ அல்லது காதல் ரீதியாகவோ ஈர்க்கப்படுவதில்லை. எதிர் பாலினத்தவர்களிடம் நீங்கள் ஈர்க்கப்படவில்லை எனில், நீங்கள் தன்பாலின ஈர்ப்பாளராக இருக்கலாம். ஆணாகவோ, பெண்ணாகவோ இருக்கும் பட்சத்தில் ஒரே பாலினத்தவரிடம் நீங்கள் ஈர்க்கப்பட்டலாம்.

ஊர்சுற்றுவதில் அசௌகரியம்
எதிர் பாலினத்தவர்களுடன் ஊர்சுற்றுவது அல்லது வெளியில் செல்வது உங்களுக்கு அசௌகரியமாக இருந்தால், அவர்கள் மீது காதல் அல்லது பாலியல் ரீதியாக உங்களுக்கு எந்த ஆர்வமும் இல்லை என்பதற்கான உறுதியான அறிகுறியாகும். நீங்கள் ஒருவருடன் ஊர்சுற்ற வேண்டும் என்ற எண்ணத்தை உணரும்போது, நீங்கள் அவர்களை நோக்கி ஈர்க்கப்படுவீர்கள் அப்படி உங்களுக்கு தோன்றவில்லை என்றால், நீங்கள் தன்பாலின ஈர்ப்பாளராக இருக்கலாம்.

ஆசை இல்லாமை
எதிர் பாலினத்தவர் மீது உங்களுக்கு உடல் ரீதியான விருப்பம் துளிக்கூட இல்லையென்றால், நீங்கள் நிச்சயமாக அவர்களுடன் உறவில் ஈடுபட மாட்டீர்கள். நீங்கள் ஒருவரால் ஈர்க்கப்படும்போது, உடலுறவுக்கான ஆசையை உணர்கிறீர்கள். அதில் முத்தங்கள் கொடுப்பது, கட்டிப்பிடிப்பது, கை மற்றும் முதுகு அல்லது இடுப்பு பகுதியில் தொடுதல் போன்ற உடல் செயல்பாடுகளும் உங்களுக்கு பிடிக்கவில்லை அல்லது விரும்பவில்லை எனில், நீங்கள் ஓரின சேர்க்கரையாளராக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.

ஒரே பாலின மக்கள் மீது ஈர்ப்பு
ஒரே பாலினத்துடன் நட்பை உருவாக்குவதற்கான நிலையான தூண்டுதலை நீங்கள் அதிகமாக உணர்ந்தால், அதே பாலினத்தவருடன் நீங்கள் ஈர்க்கப்படுகிறீர்கள் என்பதற்கான அறிகுறியாகும். நீங்கள் அவர்களுடன் காதல் உறவைத் தொடர விரும்பலாம். இது நீங்கள் ஓரினச்சேர்க்கையாளர் என்பதற்கான அறிகுறியாகும். காதல் என்பது எல்லாருக்கும் பொதுவானது. யார் மீது வேண்டுமானலும் யாருக்கும் காதல் வரலாம்.

பாலின பாத்திரங்களில் ஆர்வமின்மை
பாலின பாத்திரங்கள் என்பது கலாச்சாரம் நிறைந்தவை மற்றும் தனிப்பட்டவை. சமூகத்தின் சூழலில் ஆண்களும் பெண்களும் எவ்வாறு சிந்திக்க வேண்டும், பேச வேண்டும், உடை அணிய வேண்டும் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டும் என்பதை அவை தீர்மானிக்கின்றன. இந்த பாலின கட்டுப்பாடுகள் படி, நீங்கள் இருக்க வேண்டும் என்று கூறுவது உங்களுக்கு சங்கடமாகவோ விருப்பமில்லாமல் இருந்தாலோ, எதிர் பாலினத்தில் நீங்கள் ஆர்வம் காட்டவில்லை என்பதற்கான அறிகுறியாகும். பாலினத்தின் அடிப்படையில் தனிநபர்கள் மீது வைக்கப்பட்டுள்ள சமூக எதிர்பார்ப்புகளுடன் உங்களை நீங்கள் அடையாளம் காண வேண்டும்.



Click it and Unblock the Notifications