Latest Updates
-
பெண்களே! தொப்பை குறையணுமா? அப்ப இந்த ஃபிட்னஸ் கோச் சொல்ற 5 உடற்பயிற்சியை வீட்லயே செய்யுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் இந்த 5 ராசிக்கு சுக்கிர திசை ஆரம்பிக்குது.. இனி கையில் பணம் குவியப்போகுது.. -
சிக்கன வாங்குனா இந்த 4 பொருட்களை சேர்த்து கேரளா ஸ்டைல் சிக்கன் 65 செய்யுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
இந்த வாரம் மட்டன் வாங்குனா.. இந்த சுக்கா கிரேவி செய்யுங்க.. எல்லாத்துக்குமே செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 08 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் சில அற்புதங்கள் நடக்குமாம்...! -
வார ராசிபலன் (01 March 2026-07 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த வாரமாக இருக்கும்! -
மட்டன் வாங்குனா இந்த மாதிரி நெல்லூர் ஸ்டைலில் குழம்பு வைச்சு பாருங்க... தோசை, சாதத்துக்கு சூப்பரா இருக்கும்... -
திரிகிரக யோகம் கும்ப ராசியில் உருவாவதால் இந்த 3 ராசிக்காரர்களை தோல்வியும், துரதிர்ஷ்டமும் துரத்தப்போகுதாம்...! -
1 கப் கோதுமை ரவா இருந்தா இந்த மாதிரி அடை செஞ்சு பாருங்க... சூப்பரான காலை உணவா இருக்கும்... ட்ரை பண்ணுங்க...! -
இந்தியாவின் முதல் பெண்களுக்கான பள்ளி எப்போது திறக்கப்பட்டது? எந்த ஊரில் திறக்கப்பட்டது தெரியுமா?
உங்க காதலியிடம் இந்த அறிகுறிகள் இருந்தால் நீங்க ஒரு ஆபத்தான பெண்ணிடம் சிக்கியிருக்கீங்கனு அர்த்தமாம்...!
எந்தவொரு உறவிலும் தீவிர பொறாமை ஒருபோதும் நல்லதல்ல. பொறாமை கொள்வதும், தங்கள் துணையின் பொறாமையை காதல் என்று நினைக்கும் பல தம்பதிகள் உள்ளனர்.
எந்தவொரு உறவிலும் தீவிர பொறாமை ஒருபோதும் நல்லதல்ல. பொறாமை கொள்வதும், தங்கள் துணையின் பொறாமையை காதல் என்று நினைக்கும் பல தம்பதிகள் உள்ளனர். இருப்பினும், பொறாமை மற்றும் அக்கறைக்கு இடையே ஒரு சிறிய கோடு இருப்பதை மறந்து விடாதீர்கள். அந்த கோடு சீராக இருக்கும் வரைதான் உங்கள் உறவு ஆரோக்கியமானதாக இருக்கும். எப்போதும் ஃபோனைச் சரிபார்ப்பது, புகார் கூறுவது, வெறுக்கத்தக்க பேச்சுக்கள் மற்றும் பிடிவாதமான நடத்தை ஆகியவை பொறாமை மற்றும் பொஸசிவான காதலியின் சில அறிகுறிகளாகும்.

ஒரு பெண்ணின் இந்த செய்லபாடுகள் உண்மையில் எரிச்சலூட்டும். உங்கள் காதலி இந்த அறிகுறிகளில் சிலவற்றைக் காட்டும் ஒரு உறவில் நீங்கள் இருந்தால், அதை அடுத்த கட்டத்திற்கு செல்வதற்கு உங்கள் உறவை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நேரம் இது. ஒருவேளை உங்கள் உறவு ஏற்கனவே தீவிரமான கட்டத்தை எட்டியிருந்தால், விரைவில் அந்த உறவை விட்டு வெளியேறுவது நல்லது. மேலே கூறப்பட்டவை மட்டுமின்றி மோசமான காதலியிடம் இருக்கும் வேறு சில அறிகுறிகளும் உள்ளன. அவை என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

போன் காலை அட்டென்ட் பண்ணாதபோது கோபம் அடைவது
இது பொறாமை மற்றும் பொஸசிவ் உணர்வின் தெளிவான அறிகுறியாகும். நீங்கள் ஒரு முறை அவர்களின் அழைப்பை எடுக்காமல் விட்டால், தொடர்ந்து போன் வந்துக் கொண்டே இருக்கிறதா? ஆம் எனில், அதன் அர்த்தம் உங்களின் மீதிருக்கும் பொஸசிவ் எண்ணம்தான். உங்கள் சூழ்நிலை என்னவாக இருந்தாலும் அவர்களின் அழைப்பை தவறவிட்டதை அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியாது.

நிமிடத்திற்கு நிமிடம் அப்டேட் கேட்பது
உங்கள் நாளின்ன் ஒவ்வொரு நிமிடத்தைப் பற்றியும் அவர்களிடம் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். இது உண்மையில் உங்களை எரிச்சலாக்கும். இந்த வகை காதலி இருந்தால் உங்கள் வாழ்க்கை இனி உங்கள் வாழ்க்கையாக இருக்காது, ஏனென்றால் அவருடைய இருப்பு மற்றும் தலையீடு உங்கள் வாழ்க்கையின் அனைத்து தருணங்களிலும் இருக்கும்.

உங்களின் அனைத்து பாஸ்வேர்டுகளையும் கேட்பது
உங்களின் அனைத்து சமூக ஊடக கணக்குகளின் பாஸ்வேர்டுகளையும் கேட்பவர்கள் நிச்சயம் உங்களின் நல்ல காதலியாக இருக்க முடியாது. உங்களிடம் கெஞ்சியோ, அடம் பிடித்தோ அல்லது உங்களுக்கேத் தெரியாமலோ அவர்கள் உங்களின் பாஸ்வேர்டுகளைப் பெறலாம். உங்களின் அக்கவுண்ட்டை நீங்கள் இல்லாதபோது ஓபன் செய்து பார்ப்பது நிச்சயமாக ஒரு உறவின் அறிகுறியாகும்.

பொது இடங்களில் சண்டையிடுவது
பொது இடத்தில் சண்டையிடுவதை யாருமே விரும்புவதில்லை. உங்கள் காதலி தங்களின்கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாமல், பொது இடத்தில் சண்டையிட ஆரம்பித்து, சத்தமாக கத்த ஆரம்பித்தால் அல்லது அழ ஆரம்பித்தால், உங்களை துஷ்பிரயோகம் செய்தால், நீங்கள் உடனடியாக அதை நிறுத்த வேண்டும். உங்களால் அதனை நிறுத்த முடியாவிட்டால் அந்த உறவை விட்டு வெளியேற வேண்டிய நேரமிது. ஏனெனில் முதிர்ச்சியடைந்த உறவுகளில் நிறைய பொறுமை மற்றும் நம்பிக்கை நிறைந்திருக்கும்.

ஆதிக்கம் செலுத்தி வேண்டியதை செய்ய வைப்பது
ஆதிக்கம் செலுத்துவது ஒரு பண்பு, சரியாகக் கையாளப்படாவிட்டால் அது ஆபத்தாக மாறிவிடும். உங்கள் காதலி உங்கள் மீது விதிகளை விதித்தால், நீங்கள் வேறு எந்தப் பெண்ணுடனும் பேசக்கூடாது அல்லது குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு வெளியே செல்லக்கூடாது என வரையறுக்கப்பட்ட விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் விதித்தால், உங்கள் உறவு நச்சுத்தன்மை நிறைந்ததாக இருக்கிறது. அவர் உங்கள் காதலியாக இருக்க வேண்டும், உங்கள் முதலாளியாக அல்ல.

அடிக்கடி அவமதிப்பது
ஒரு ஆரோக்கியமான உறவில் பரஸ்பர மரியாதை இருக்க வேண்டியது அவசியம். சண்டை, சச்சரவுகள் மற்றும் கருத்து வேறுபாடுகள் மிகவும் பொதுவானவை. இருப்பினும், தொடர்ந்து அவமதிப்பு ஏற்பட்டால், உங்கள் உறவைப் பற்றி நீங்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டும். உங்கள் காதலி உங்கள் யோசனைகள், உங்கள் வேலை அல்லது நீங்கள் செய்யும் எதையும் அடிக்கடி விமர்சித்தால், இது ஒரு நல்ல அறிகுறி அல்ல. உங்கள் குறைபாடுகளில் தொடர்ந்து கவனம் செலுத்துவதிலோ அல்லது குறைபாடுகளைக் கண்டறிவதிலோ மட்டுமே கவனம் செலுத்தினால் அது நச்சு உறவின் அறிகுறியாகும்.

சுற்றியிருக்கும் அனைவரை பற்றியும் தவறாக பேசுவது
உங்கள் காதலி சுற்றியுள்ள அனைவரையும் பற்றி தவறாக பேசினால்,அது வெறுப்பின் அறிகுறியாகும். உங்கள் காதலிக்கு அவர்களைச் சுற்றிலும் அதிக நல்ல உறவுகள் இல்லை என்பதை நீங்கள் கவனித்திருந்தால், அவருக்கு வாழ்க்கையில் நிறைய பிரச்சனைகள் உள்ளன என்று அர்த்தம். மேலும் வேறு யாரும் உங்களுக்கு நல்லவர்களாக இருப்பதையோ அல்லது நீங்கள் அவர்களைத் தவிர வேறு யாருக்கும் நல்லவர்களாக இருப்பதையோ அவர்கள் ளால் பொறுத்துக்கொள்ள முடியாது.



Click it and Unblock the Notifications











