Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
ஆண்கள் காதலில் ஏமாற்றுவதை அவர்களின் இந்த செயல்களே காட்டிக்கொடுத்து விடுமாம் தெரியுமா?
ஆண்கள் காதலில் ஏமாற்றுவதை சில அறிகுறிகளை வைத்து கண்டுபிடித்துவிடலாம். ஏனெனில் ஆண்கள் தவறு செய்வார்கள் ஆனால் மறைக்கும் சாமர்த்தியம் அவர்களுக்கு மிகவும் குறைவுதான்.
எந்தவொரு உறவிலும் நம்பிக்கை என்பது மிகவும் முக்கியமானது. அதிலும் காதலை பொறுத்தவரையில் அதற்கு அடிப்படையாக இருப்பதே நம்பிக்கைகைதான். ஆனால் இந்த காலக்கட்டத்தில் காதலில் குறைவாக காணப்படுவதே இதுதான். யாருக்குமே ஏமாறுவது என்பது பிடிக்காது, குறிப்பாக காதலில் ஏமாறுவது என்பது யாருமே விரும்பாத ஒன்றாகும்.

காதலில் ஆண், பெண் இருவருமே தற்போது ஏமாற்றத்தான் செய்கிறார்கள். ஆண்கள் காதலில் ஏமாற்றுவதை சில அறிகுறிகளை வைத்து கண்டுபிடித்துவிடலாம். ஏனெனில் ஆண்கள் தவறு செய்வார்கள் ஆனால் மறைக்கும் சாமர்த்தியம் அவர்களுக்கு மிகவும் குறைவுதான். இந்த பதிவில் காதலில் ஏமாற்றும் ஆண்களை காட்டிக்கொடுக்கும் அறிகுறிகள் என்னென்ன என்று பார்க்கலாம்.

கடந்த கால உறவை மறைப்பது
உங்கள் காதலர் அவரின் கடந்த கால உறவுகளை வெறுப்பதோ அல்லது அவற்றைப் பற்றி பேச மறுப்பார்கள். இதற்கு காரணம் அவர் எப்பொழுதும் உங்களை சுற்றி இருக்கவும், உங்களை விட்டு பிரியாமல் இருக்கவும் தங்களின் கடந்தகால உறவைப் பற்றி மறைப்பார்கள். காதலில் ஏமாற்றும் ஆண்கள் கடந்தகால உறவு ஏன் முறிந்தது என்ற உண்மையை ஒருபோதும் கூறமாட்டார்கள்.

முன்னாள் காதலி வெறுப்பார்கள்
அவரின் முன்னாள் காதலிகள் அனைவரும் அவர்களை வெறுப்பார்கள், ஆனால் அவர் காதலித்த அனைத்து பெண்களும் அவர்களை வெறுத்தால் கண்டிப்பாக அவரிடம் ஏதாவது தவறு இருக்க வேண்டும். பொதுவாக பெண்கள் யாரையும் காரணமின்றி வெறுக்க மாட்டார்கள், அப்படி அவர்கள் உங்களின் காதலனை வெறுத்தால் நிச்சயம் அவரிடம் தவறு இருக்கிறது என்று தெரிந்து கொள்ளுங்கள்.

பொறாமைப்படுவார்கள்
அவர் அதிக பொறாமைப்படுபவர்களாக இருப்பார்கள், ஏனெனில் தவறான ஆண்கள் என்ன எதிர்பார்ப்பார்கள் என்பது அவர்களுக்குத் தெரியும், ஏனெனில் அவர்களும் அதில் ஒருவர். ஆண்கள் பெண்களை எப்படி கையாளுவார்கள் என்று இவர்களுக்கு நன்கு தெரியும், ஏனெனில் இவர்கள் அதனை செய்தவர்களாக இருப்பார்கள். உங்களை பாதுகாப்பதைக் காட்டிலும் உங்களுக்கு அவர் மட்டும்தான் இருக்க வேண்டும் என்றே அவர்கள் நினைப்பார்கள்.

விருந்துக்கு அழைக்க மறுப்பார்கள்
ஏமாற்றும் ஆண்கள் பெரும்பாலும் தங்கள் காதலியை பார்ட்டிகளுக்கு அழைக்க மாட்டார்கள். உங்களுக்கு வந்தால் போரடிக்கும், பிடிக்காது என்று காரணம் சொல்லுவார்கள். ஆனால் உண்மையில் காதலிக்கும் ஆண்கள் தங்கள் காதலி எப்போதும் அருகில் இருக்க வேண்டுமென்று விரும்புவார்கள். ஒருவேளை அது சலிப்பான நிகழ்ச்சியாக இருந்தாலும் தங்களின் உலகத்தை உங்களுக்கு காட்ட நினைக்கும் ஆண்களே உண்மையில் காதலிக்கும் ஆண்கள்.

அர்ப்பணிப்புடன் இருக்கமாட்டார்கள்
உங்களுடன் அர்ப்பணிப்பு செலுத்த மறுக்கும் ஆண்கள் சரியான ஆணாக இருக்க வாய்ப்பில்லை, இது மிகவும் எளிது. உங்கள் காதலர் அர்ப்பணிப்புக்கு அஞ்சினால் அவர் உங்களை விட்டு விலகும் திட்டத்தில் இருக்கிறார் என்று அர்த்தம். அவருடன் இருக்கும்போது நீங்கள் அந்நியமாக உணர்ந்தால் அவர்கள் உங்களை உண்மைக காதலிக்கவில்லை என்று அர்த்தம்.

அதிக ப்ரைவசியை எதிர்பார்ப்பார்கள்
அவரின் தொலைபேசி எப்போதும் அவர்களுடனேயே இருக்கும், அவரின் அன்றாட செயல்பாடுகளை எப்போதும் உங்களுடன் பகிர்ந்துகொள்ள மாட்டார். அவர் உங்களுடன் இல்லாத நேரத்தில் அவர் என்ன செய்கிறார் என்று உங்களுக்கு தெரிய வாய்ப்பில்லாமல் இருக்கும். தங்களுடைய ப்ரைவசியை மதிக்கும்படி உங்களிடம் கேட்பார், உங்களிடம் மறைக்கும் எண்ணங்கள் கொண்டவர்கள் எப்படி உங்களிடம் உண்மையாக இருப்பார்கள்.

சுயநலம்
ஏமாற்றும் எண்ணம் கொண்ட ஆண்கள் எப்போதும் சுயநலமாகவே சிந்திப்பார்கள். அவரின் சிந்தனைகள் முழுவதும் அவரைப் பற்றியே இருக்கும், அவருடைய தேவைகள் மற்றும் உணர்வுகளே அவர்களுக்கு முக்கியமானதாக இருக்கும். இத்தகைய ஆண்கள் எந்தவித பொறுப்பையும் எடுத்துக்கொள்ள தயாராய் இருக்கமாட்டார்கள். இவர்கள் உங்களை ஏமாற்ற யோசிக்கவே மாட்டார்கள்.

பொய் கூறுவார்கள்
சிறிய பொய்கள்தான் பெரிய பொய்களின் ஆரம்பப்புள்ளியாகும். அவர்களின் பொய்களை நீங்கள் நம்பாமல் இருந்தாலோ அல்லது அவரது பொய்யை நீங்கள் கண்டுபிடித்துவிட்டாலோ அவர் அதை ஒப்புக்கொள்ள மறுத்தால், அவருக்கு கடுமையான பிரச்சினைகள் இருக்கலாம். உங்களிடம் உண்மைகளை மறைக்க காரணமாக இருக்கும் அவர்களின் தவறு என்னவென்பதை யோசித்துப் பாருங்கள்.



Click it and Unblock the Notifications