Latest Updates
-
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா?
இந்த அறிகுறிகள் உங்க காதலனிடம் இருக்கா? அப்ப அவரு உங்கள காதலிக்கலையாம்... ஏமாத்துறாராம்...ஜாக்கிரதை!
உங்களை நேசிக்கும் ஒரு ஆண் உங்களுக்காக இருக்கவும் நம்பிக்கையானவராகவும் இருக்க முயற்சி செய்வார். அவர், உங்கள் நம்பிக்கையை இன்னும் பெறவில்லை என்றால், நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்
இவ்வுலகில் உள்ள எல்லா ஆண்களும் ஒரே மாதிரி இருப்பதில்லை. சில ஆண்கள் தங்கள் காதலி அல்லது மனைவியை சுற்றியே தங்கள் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள். சில ஆண்கள் உறவில் காதலி அல்லது மனைவியை மிகவும் சாதாரணமாக எடுத்துக்கொள்கிறார்கள். சில சமயங்களில் ஆண், பெண் இருவரும் காதலிப்பதாக கூறி பலரை ஏமாற்றுகிறார்கள். ஏமாற்ற நினைக்கும் நபருக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால், உறவில் ஏமாற்றப்பட்ட நபர், மிகவும் வேதனையடைந்து மன ரீதியாக மிகுந்த காயமடைவார்கள். இதனால், எல்லா ஜோடிகளும் பயப்படும் ஒரு அம்சம் என்னவென்றால், அவர்களின் காதலன் அல்லது காதலி அவர்களை நேசிப்பதாகக்கூறி ஏமாற்றினால் என்ன செய்வது? என்ற பயம் அவர்களுக்குள் இருக்கும். ஏனெனில், எந்த நபரும் தாங்கள் ஏமாற விரும்பமாட்டார்கள். அது தரக்கூடிய வலி மிகவும் வேதனையானது.

இந்த மன உளைச்சலில் இருந்து உங்களைக் காப்பாற்றிக் கொள்ள, ஒரு ஆண் உங்களை நேசிப்பது போல் நடிக்கிறானா? என்பதற்கான சில அறிகுறிகள் உள்ளன. அவை என்னென்ன அறிகுறிகள் என்று இக்கட்டுரையை தெரிந்துகொண்டு, நம்பிக்கையான வாழ்க்கையை அமைத்துக்கொள்ளுங்கள் பெண்களே!

பாசமானவர் அல்ல
ஒரு ஆண் உங்களை உண்மையாக நேசித்தால், உங்கள்மீது பல்வேறு வழிகளில் அன்பைக் காட்ட அவர் முயற்சி செய்வான். உங்கள் காதலன் உங்களிடம் பாசமாக இல்லாவிட்டால் அல்லது உணர்ச்சி மற்றும் உடல் ரீதியான தொடர்பை ஏற்படுத்தவில்லை என்றால், அவர் உண்மையில் உறவில் இருக்க விரும்பவில்லை என்பதற்கான அறிகுறியாக இருக்கலாம். இந்த நபர்கள் உங்களை காதலிப்பது போன்று ஏமாற்றலாம். அதனால், இவர்களிடம் கவனமாக இருங்கள்.

நீங்கள் சொல்வதை கேட்கவில்லை
உங்களை உண்மையாக நேசிக்கும் ஆண், நீங்கள் சொல்வதைக் கேட்டு உங்கள் பார்வையைப் புரிந்துகொள்ள முயற்சி செய்வார். ஆனால், உங்கள் காதலன் அப்படி கேட்கவில்லை என்றால் அல்லது நீங்கள் சொல்வதை கேட்பதில் ஆர்வமில்லாமல் இருந்தால், அவர் உங்களை காதலிப்பது போல் நடிக்கிறார். இது உங்களை ஏமாற்றுவதற்கான அறிகுறியாக இருக்கலாம்.

திட்டங்களைச் செய்வதில்லை
ஒரு ஆண் உங்களை உண்மையாக காதலிக்கிறான் என்றால், அவன் எதிர்காலத்திற்கான திட்டங்களை வகுப்பான், அதில் உங்களையும் சேர்த்துக் கொள்வான். உங்கள் காதலன் இதுபோன்று எந்தத் திட்டங்களையும் செய்யவில்லை என்றால் அல்லது எதிர்காலத்தை பற்றி பேசுவதில் உறுதியாக இருப்பதாகத் தெரியவில்லை என்றால், அவர் உண்மையில் உங்களுடன் உறவில் இருக்க விரும்பவில்லை. இது உங்களை ஏமாற்றும் முயற்சி என்பதை புரிந்துகொள்ளுங்கள்.

நம்பிக்கையானவராக இல்லை
உங்களை நேசிக்கும் ஒரு ஆண் உங்களுக்காக இருக்கவும் நம்பிக்கையானவராகவும் இருக்க முயற்சி செய்வார். அவர், உங்கள் நம்பிக்கையை இன்னும் பெறவில்லை என்றால், நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் காதலன் அடிக்கடி திட்டங்களை ரத்து செய்தால் அல்லது வாக்குறுதிகளைப் பின்பற்றவில்லை என்றால், அது அவர் உறவில் முழுமையாக ஈடுபடவில்லை என்பதற்கான அறிகுறியாக இருக்கலாம். இந்த நபர்கள் உங்களை ஏமாற்றிவிட்டு சென்றுவிடுவார்கள்.

உங்களுக்கு முன்னுரிமை கொடுப்பதில்லை
உங்களை நேசிக்கும் ஒரு மனிதன் அவரது வாழ்க்கையில் உங்களுக்கும் உங்கள் தேவைகளுக்கும் கண்டிப்பாக முன்னுரிமை அளிப்பார். ஆனால், உங்கள் காதலன் உங்களுக்கு முன்னுரிமை அளிக்கவில்லை என்றாலோ அல்லது உங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லையென்றாலோ, அவர் உண்மையில் உங்களுடன் உறவில் இருக்க விரும்பவில்லை என்பதற்கான அறிகுறியாக இது இருக்கலாம். இதுபோன்ற நபர்களிடம் பெண்கள் கவனமாக இருக்க வேண்டும்.

உணர்வுகளைப் பகிர்ந்து கொள்வதில்லை
உங்களை நேசிக்கும் ஒரு ஆண் தனது உணர்வுகளைப் பற்றி வெளிப்படையாகவும் நேர்மையாகவும் இருப்பான். உங்கள் காதலன் தனது உணர்ச்சிகளை ஒருமுறைக்கூட உங்களிடம் வெளிப்படுத்தவில்லை என்றால் அல்லது உறவில் உணர்வுபூர்வமாக இருக்க முயற்சி செய்யவில்லை என்றால், அவர் உங்களை காதலிப்பதாக நடிக்கிறார். இது உங்களை காதலிப்பதாக கூறி ஏமாற்றுவதற்கான அறிகுறியாக இருக்கலாம்.

இறுதிக்குறிப்பு
மேலே குறிப்பிடப்பட்டுள்ளவை வெறும் அறிகுறிகளே தவிர, ஒரு மனிதன் உன்னை காதலிப்பதாக நடிக்கிறான் என்பதற்கான திட்டவட்டமான ஆதாரம் அல்ல என்பதை நினைவில் கொள்வது அவசியம். அவனது இதயத்தில் உள்ளதை அவனால் மட்டுமே உறுதியாக அறிய முடியும். ஆனால், உறவில் ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் காதலை வெளிப்படுத்துவது அவசியம்.



Click it and Unblock the Notifications