Latest Updates
-
Hair Care Tips: முடி ராக்கெட் வேகத்தில் வளரணுமா? அப்ப இந்த விதைகளில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க -
மீந்து போன சாதம் இருக்கா? அப்ப அத வெச்சு பஞ்சு போல சாப்ட்டான சப்பாத்தி செஞ்சு சாப்பிடுங்க.. -
சிம்ம ராசியில் குரு-கேது சேர்க்கை: இந்த 4 ராசிக்காரர்களுக்கு பேன்க் பேலன்ஸ் டபுள் ஆகப்போகுது! -
இந்த 4 ராசி பெண்கள் ரொம்ப ரொம்ப பிடிவாதக்காரர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
அக்குள் கருமையை போக்கணுமா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணி பாருங்க.. -
வாஸ்து படி கேஸ் அடுப்பு அருகில் வைக்கக்கூடாத பொருட்கள் - இது துரதிர்ஷ்டம் மட்டுமல்ல ஆபத்தும் கூட -
ஆயுத பூஜைக்கு வாங்குன பொரி இருக்கா? அப்ப ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. -
'இனிப்புகளின் ராஜா' என்று அழைக்கப்படும் ஸ்வீட் எது தெரியுமா? எதுனா சொன்ன நம்பவே மாட்டிங்க -
ஆண்கள் இறுக்கமான உள்ளாடை அணிந்தால் உண்மையில் விந்தணு பாதிக்கப்படுமா? டாக்டர் என்ன சொல்றாரு பாருங்க.. -
பச்சை மிளகாயை வைச்சு இந்த மாதிரி செட்டிநாடு ஸ்டைலில் குழம்பு செஞ்சு பாருங்க - காரசாரமா நச்சுனு இருக்கும்
இந்த குணங்களில் ஒன்று இருந்தாலும் அவங்க வாழ்க்கையில் காதலே இருக்காதாம்... உங்ககிட்ட இருக்கா?
உங்கள் காதலன்/காதலி உங்கள் பழக்கவழக்கங்களைப் பற்றி புகார் செய்யலாம் மற்றும் சில சமயங்களில் உங்கள் மீது மிகவும் எரிச்சலடையலாம்.
உங்களுக்கு பொருத்தமான துணையைக் கண்டுபிடிப்பது உங்களுக்கு மிகவும் கடினமாக இருக்கிறதா? அல்லது உங்கள் ஒவ்வொரு உறவும் விரைவில் தோல்வியில் முடிவடைகிறதா? இது மற்றவர்களிடம் நீங்கள் அதிகமாக எதிர்பார்க்கிறீர்கள் அல்லது அவர்களை கடுமையாக விமர்சிப்பவராகவோ இருக்கலாம் என்பதற்கான அறிகுறியாகும்.

உங்கள் காதலன்/காதலி உங்கள் பழக்கவழக்கங்களைப் பற்றி புகார் செய்யலாம் மற்றும் சில சமயங்களில் உங்கள் மீது மிகவும் எரிச்சலடையலாம். இத்தகைய பிரச்சனைகளுக்கு என்ன காரணம் என்பதை உங்களால் புரிந்து கொள்ள முடியாவிட்டால், உங்களின் ஆளுமை சுயபரிசோதனைக்கு உட்படுத்துவது நல்லது. ஏனெனில் மக்கள் உறவுகளில் பொதுவாக விரும்பாத குணங்கள் உள்ளன. உங்களிடம் அந்த குணங்கள் இருந்தால் நீங்கள் ஒரு வெற்றிகரமான உறவை தொடர முடியாது. மக்கள் பொதுவாக உறவுகளில் வெறுக்கும் குணங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

அதிக எதிர்பார்ப்புகள்
மிகவும் எதிர்பார்ப்புகளைக் கொண்டிருப்பது அல்லது ஒரு துணையிடம் அதிக கோரிக்கைகளை வைப்பது உங்கள் அளவுகோல்களைப் பூர்த்தி செய்யும் ஒருவரைக் கண்டுபிடிப்பதை கடினமாக்கும். உங்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதை அவர்கள் சுமையாக உணரலாம், ஏனெனில் அவை நிறைவேற்ற முடியாத வகையில் உள்ளன.

வெளிப்படையாக இருப்பது பற்றிய பயம்
தங்கள் துணையுடன் வெளிப்படையாக இருக்க பயப்படுவது ஆழ்ந்த உணர்ச்சிரீதியான தொடர்பை உருவாக்குவதைத் தடுக்கலாம். ஒரு உறவில் உங்கள் துணையிடம் நீங்கள் வெளிப்படையாக இருக்கும்போது, உங்களை பற்றி அதிகம் தெரிந்து கொள்ள உங்கள் துணையை நீங்கள் அனுமதிக்கிறீர்கள், இது உறவின் வளர்ச்சிக்கு முக்கியமானது. ஆனால் அந்த மாற்றத்தை நீங்கள் வெறுக்கிறீர்கள் என்றால், நீங்கள் உறவில் ஆழமாக செல்வதை தடுக்கிறீர்கள்.

சமரசம் செய்து கொள்ள மறுப்பது
சமரசங்கதான் ஒரு உறவை உருவாக்குகின்றன மற்றும் புலப்படுத்துகின்றன. ஒரு உறவைத் தக்கவைக்க இரண்டு பேரும் தங்களை இயன்ற சமரசத்தை செய்ய வேண்டும். ஆனால் ஒரு உறவில் சமரசம் செய்யவோ அல்லது தியாகம் செய்யவோ விரும்பாதது ஆரோக்கியமான உறவை கடைபிடிப்பதைக் கடினமாக்கும்.

தேவைகளை புரிந்து கொள்ளாமல் இருப்பது
ஒருவரின் தனிப்பட்ட தேவைகள் மற்றும் விருப்பங்களைப் புரிந்துகொள்வதில் சிரமம் ஒரு முழுமையான உறவை உருவாக்குவதை கடினமாக்குகிறது. உங்கள் துணை உங்களிடமிருந்து என்ன விரும்புகிறார் என்பதை உங்களால் புரிந்து கொள்ள முடியாவிட்டால், உங்கள் உறவு இருந்து என்ன பயன்? உங்கள் துணையின் தேவைகளை நீங்கள் கவனிக்க கற்றுக் கொண்டால் மட்டுமே உறவு நீடிக்கும்.

தன்னம்பிக்கை சிக்கல்கள்
உங்களின் தன்னம்பிக்கைக் குறைவு ஒருவர் உங்களை உண்மையாக நேசிக்கவும், ஏற்றுக்கொள்ளவும் முடியும் என்று நம்புவதை கடினமாக்கலாம், இது ஆரோக்கியமான உறவுகளை உருவாக்குவதை கடினமாக்கும். இதிலிருந்து நீங்கள் மீளவில்லை என்றால், உங்களின் உண்மையான திறன் என்பதை உங்கள் துணை உங்களுக்கு புரிய வைப்பது கடினமாக இருக்கும்.

கமிட்மெண்ட்க்கு அஞ்சுவது
அர்ப்பணிப்புக்கு பயப்படுவது அல்லது தீவிரமான உறவுக்குத் தயாராக இல்லாமல் இருப்பது, உறவில் நேரத்தையும் சக்தியையும் முதலீடு செய்யத் தயாராக இருக்கும் ஒருவரைக் கண்டுபிடிப்பது கடினமாக்கும். நீங்கள் ஒரு உறவில் இருந்தால் மற்றும் அந்த நபருடன் இருக்க விரும்பினால், உங்கள் அர்ப்பணிப்பு சிக்கல்களை நீங்கள் சமாளிக்க வேண்டும்.



Click it and Unblock the Notifications
