For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆண்களே! நீங்க கள்ள உறவில் இருப்பதால் உங்க வாழ்க்கையில் என்னென்ன பூகம்பங்கள் வெடிக்கும் தெரியுமா?

|

உங்கள் காதலி அல்லது மனைவியுடன் இருக்கும்போது வேறொருவர் மீது ஈர்ப்பு ஏற்படுகிறதா? அவர்கள் மீது நீங்கள் ஆசை கொள்கிறீர்களா? உங்களுக்கும் உங்கள் துணைக்கும் இடையில் நெருக்கம் குறைகிறதா? நீங்கள் ஏற்கனவே திருமணமாணவராக இருந்தாலும் அல்லது ஒருவருடன் உறவில் வாழ்ந்து கொண்டிருக்கும்போதும் நீங்கள் ஒருவரால் ஈர்க்கப்படலாம்.

இது உங்களை பொறுத்தவரை தவறானது இல்லை என்று தோன்றலாம். ஆனால், உண்மையில் இது மிகவும் தவறானது. திருமணத்திற்கு புறம்பான உறவில் நீங்கள் வேறொருவருடன் இருப்பது உங்கள் உறவை சீர்குலைக்கும். கள்ள உறவில் இருப்பது உங்களுக்கு ஆச்சரியமாகவும் சுவாரஸ்யமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கலாம். ஆனால் உங்கள் துணையை ஏமாற்றுவது சரியானதல்ல.

Reasons Why You Should Not Cheat Your Partner In Tamil

உங்கள் துணையை ஏமாற்றும்போது நீங்கள் பெரிய பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருக்கும். உங்கள் துணைக்கு உண்மையாக இருக்க முயற்சி செய்யுங்கள். உங்கள் துணையை ஏமாற்றுவது ஏன் மோசமானது என்பதைப் புரிந்துகொள்ள இந்தக் கட்டுரை முழுவதுமாக படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
துணையின் நம்பிக்கையை இழப்பது

துணையின் நம்பிக்கையை இழப்பது

உங்கள் துணையை அடுத்து வேறொருவரை நீங்கள் பார்க்கத் தொடங்கும் தருணத்தில், உங்கள் துணை உங்கள் மீதான நம்பிக்கையை இழக்க நேரிடும். உங்களின் ரகசிய விவகாரம் உங்கள் துணைக்கு தெரிந்த நாள், அவர் அல்லது அவள் உங்களை நம்புவதை நிறுத்திவிடுவார்கள்.

ஒரு உறவுக்கு மிக முக்கியம் நம்பிக்கை. அவை உறவில் உடையும்போது, அந்த உறவு சிதைக்க தொடங்கும். உங்கள் துணை உங்களை ஒரு நேர்மையற்ற மற்றும் நம்பகத்தன்மையற்ற நபராக கருதுவார். நீங்கள் எவ்வளவு முயற்சி செய்தாலும், உங்கள் துணையால் முன்பு போல் உங்களை நம்ப முடியாமல் போகலாம்.

பிரச்சினைகளை எதிர்கொள்ள முடியாது

பிரச்சினைகளை எதிர்கொள்ள முடியாது

உங்கள் துணையை ஏமாற்றுவதை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது. உங்கள் திருமணம் அல்லது உறவில் சில சிக்கல்கள் காரணமாக உங்கள் துணையை நீங்கள் ஏமாற்றுகிறீர்கள் என்பதை நீங்களே நினைவுபடுத்தலாம். ஆனால் உங்கள் துணையை நீங்கள் ஏமாற்றும் தருணத்தில், நீங்கள் உண்மையான பிரச்சினைகளை எதிர்கொள்வதில் இருந்து விலகிவிடுகிறீர்கள் என்பதை நீங்கள் உணராமல் இருக்கலாம்.

அவற்றை எதிர்கொண்டு தீர்ப்பதற்குப் பதிலாக, நீங்கள் வேறொருவருடன் இருக்கும் பாதையைத் தேர்வு செய்கிறீர்கள். உதாரணமாக, இது உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரலாம், ஆனால் இது உங்களுக்கு மேலும் சிக்கல்களை உருவாக்கலாம்.

உங்கள் குழந்தைகளை காயப்படுத்துவீர்கள்

உங்கள் குழந்தைகளை காயப்படுத்துவீர்கள்

உங்கள் ரகசிய விவகாரத்தை உங்கள் குழந்தைகள் பொருட்படுத்த மாட்டார்கள் என்று நீங்கள் நினைத்தால், நீங்கள் நினைப்பது தவறாக இருக்கலாம். உங்கள் பிள்ளைகள் அதைப் பற்றி அறிந்தால் மிகவும் பாதிக்கப்படலாம்.

பெற்றோரில் ஒருவர் வேறொருவருடன் காதல் வயப்பட்டிருப்பதை அவர்களால் ஜீரணிக்க முடியாமல் போகலாம். அவர்கள் இதை ஒரு துரோகமாக பார்க்கலாம். உங்கள் பிள்ளைகளும் உணர்ச்சி மற்றும் சமூக வீழ்ச்சிக்கு ஆளாகலாம் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

உங்கள் துணைக்கு அவமரியாதை காட்டுகிறது

உங்கள் துணைக்கு அவமரியாதை காட்டுகிறது

உங்கள் துணையை ஏமாற்றுவது அவர்களை அவமரியாதை செய்வதற்கான மற்றொரு வழியாகும். உங்கள் ஏமாற்று எபிசோட் சீன்கள் உங்கள் பங்குதாரரின் உணர்வுகளை நீங்கள் இனி மதிக்க மாட்டீர்கள் மற்றும் அவர்களின் அன்பை மதிக்க மாட்டீர்கள் என்று உணர வைக்கும்.

கள்ள உறவு உங்களுக்குள் இருக்கும் பிணைப்பை உடைக்கக்கூடும். மேலும் உங்களுடன் எந்த உறவையும் வைத்திருப்பதை உங்கள் பங்குதாரர் கருத்தில் கொள்ளாமல் போகலாம்.

மற்ற உறவுகளையும் பாதிக்கலாம்

மற்ற உறவுகளையும் பாதிக்கலாம்

உங்கள் துணையின் நம்பிக்கையை இழப்பது மட்டுமல்ல. உங்கள் துணையை ஏமாற்றும்போது நீங்கள் பிடிபட்டால், அது உங்களை சுற்றியிருக்கும் மற்ற உறவுகளையும் இழக்க நேரிடும். உங்கள் அன்புக்குரியவர்கள் உங்களையும் உங்கள் கருத்துக்களையும் மதிப்பதை நிறுத்தலாம்.

உறுதியாகவும் உண்மையாகவும் இருக்க முடியாத ஒரு நபராக அவர்கள் உங்களைக் கருதலாம். உண்மையில், உங்களைச் சுற்றியுள்ளவர்களின் நல்ல புரிதலோடு பெயரோடு இருப்பது உங்களுக்கு கடினமாக இருக்கலாம்.

நீங்கள் ஒருபோதும் ஒன்றாக இருக்க மாட்டீர்கள்

நீங்கள் ஒருபோதும் ஒன்றாக இருக்க மாட்டீர்கள்

உங்கள் துணையை ஏமாற்றுவது உங்களுக்கு மோசமானதாக இருப்பதற்கான மற்ற காரணங்களில் ஒன்று. நீங்கள் இனி ஒன்றாக இருக்க மாட்டீர்கள் என்பதுதான். உங்கள் துணையை நீங்கள் ஏமாற்றத் தொடங்கும் நாளில், நீங்கள் அவரிடமிருந்து அல்லது அவளிடமிருந்து விலகி இருப்பீர்கள்.

உங்கள் வாழ்க்கையில் வேறொருவரின் நுழைவு உங்கள் துணையுடனான உங்கள் பிணைப்பை தானாகவே அழித்துவிடும். நீங்கள் எவ்வளவு முயற்சி செய்தாலும், உங்களால் ஒரு இணைப்பை ஏற்படுத்த முடியாது.

இறுதி குறிப்பு

இறுதி குறிப்பு

உங்கள் துணையை ஏமாற்றுவதற்கு உங்களைத் தூண்டுவது எதுவாக இருந்தாலும், ஒரு உறவு முறிந்தால், அதை ஒருபோதும் சரிசெய்ய முடியாது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். உங்கள் வாழ்க்கையில் மதிப்புமிக்க சிலரை நீங்கள் இழக்க நேரிடலாம். வேறொருவரில் ஆறுதல் காண்பதற்குப் பதிலாக, உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் இடையே உள்ள பிரச்சினைகளைச் சரிசெய்ய முயற்சி செய்யலாம். இந்த வழியில் நீங்கள் உங்கள் உறவை/திருமணத்தை காப்பாற்றுவது மட்டுமல்லாமல், உங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியாகவும் சிறப்பாகவும் வாழலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Reasons Why You Should Not Cheat Your Partner In Tamil

Here we are talking about the Reasons Why Cheating On Your Partner Is A Big No in tamil.
Desktop Bottom Promotion